Hush (2016)

ஒரு த்ரில்லர் படத்தைப் பற்றி எப்படி எழுதுவது? அப்படி எழுதும் பொழுது எந்த இடத்திலும் சஸ்பன்ஸ் தருணங்கள் உடைபடாமல் இருக்க வேண்டும். இது முடிகிற காரியமா? கதைச்சுருக்கத்தை சொல்லி ஆரம்பிப்பதென்பது வெவ்வேறு வகையிலான திரைப்படங்களுக்கு பொறுந்தும். ஆனால் த்ரில்லர் படங்களுக்கு அப்படிக் கூறி ஆரம்பித்தால் முக்கிய சஸ்பன்ஸ் உடைந்து படத்தை பார்க்கும் ஆர்வமும் வற்றிவிடும். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு எப்படி எழுதுவது?

ஒதுக்குபுறமான ஒரு காட்டுப்பகுதியில், தனித்து நிற்கும் வீடு, அங்கு ஏதோ ஒரு காரணத்திற்காக நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக வசிக்க வரும் ஆண்/பெண் அல்லது சிறிய குடும்பம் எதிர்கொள்ளும், அவர்களது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் ஒரு சம்பவம் நிகழும் மாதிரியான படங்கள் நிறையவே வந்திருக்கின்றன. Cabin in the Woods படங்கள் என்று இதற்கு அடைமொழியுண்டு.

ஒரு பெண் நாவலாசிரியர். அவருக்கு 13 வயதில் ஏற்பட்ட ஒரு நோயின் காரணமாக கேள்விப் புலனும், பேச்சும் இல்லாமல் போய்விடுகின்றது. இதையெல்லாம் தாண்டி ஒரு நாவலாசிரியையாக வெற்றிபெற்றிருக்கிறாள். அடுத்த நாவலுக்கான வேலைகளில் ஈடுபடுவதற்காக ஒதுக்குபுறமான காட்டுப்பகுதியிலிருக்கும் ஒரு வீட்டில் வசித்து வருகிறாள். இவையனைத்தும் Hush படத்தின் ஆரம்பகாட்சிகளிலேயே கூறப்பட்டுவிடுகின்றது.

சத்தத்தையும் உணர முடியாது, யாரையும் உதவிக்கும் அழைக்க முடியாது இந்த நிலைமையில் ஒரு சைக்கோ கொலைகாரனை எவ்வாறு எதிர்கொள்வது? இதுதான் Hush படத்தின் கதை.

ஏற்கனவே பலமுறை, பல்வேறு விதங்களில் படமாக்கப்பட்டுவிட்ட ஒன்றை, சீட் நுனி அனுபவத்தை மீண்டுமொருமுறை எந்தவித அலுப்பும் தட்டாமல் கொடுக்க முடியும் என்பதை இந்தப் படம் உணர்த்துகின்றது. படம் ஓடும் கால அளவும் இதற்கொரு காரணம். தேவையில்லாத காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. முன்கதை, உபகதையெல்லாம் தேவையில்லாமல் நுழைத்து படம் ஓடும் கால அளவை கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை இயக்குனர் நன்றாகவே உணர்ந்திருக்கின்றார்.

த்ரில்லர் படங்களில் edge of the seat உணர்வை வழங்குவதில் முக்கியப் பங்கை வகிப்பது இசை. இந்த படத்தில் இசையையும், காட்டின் சப்தங்களையும் மிக அருமையாக உபயோகித்திருக்கிறார்கள். முக்கியத் திருப்பமொன்றை காட்டும் பொழுது, ஆர்வத்தை தூண்டுவதற்கு பின்னணி இசையே அதிகம் பயன்படும். இங்கு இரவின் சப்தங்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். காற்றும், அதனூடு பரவும் பூச்சிகளின் இரைச்சலும் தனிமையில் ஒருவித அமானுஷ்ய உணர்வை தோற்றுவிக்கும், இது படத்தில் பிரதானமான ஒன்றாக எனக்குப் பட்டது. இதுவே தமிழ் சினிமாவாக இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்? நொடிக்கு நொடி காட்டுக் கத்தல் இசையை போட்டு நாரசமாக்கிவிடுவார்கள். சைக்கோ கொலையாளி வரும் சந்தர்ப்பங்களில் ஹிரோயிச பில்டப்புகள் வேறு. இப்படி இசையமைக்கும் பொழுது சைக்கோ கொலையாளி மீது வெறுப்பு வருமா இல்லை புல்லரிக்குமா?

இரண்டு முக்கியப் பாத்திரங்களைச் சுற்றிதான் முழுக்கதையும் நடக்கின்றது. உயிர்ப்போராட்டத்தில் எப்படி ஒரு காது கேளாத, வாய் பேச முடியாத பாத்திரம் இருக்கும் என்பதை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார் Kate Siegel.

முகமூடி சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய படங்கள் ஏராளம் வந்திருக்கின்றன. அவற்றில் இந்த படமும் முக்கியமான ஒன்றாக நிச்சயம் இடம்பிடிக்கும். 

இது இப்படியிருக்க, தமிழில் வெளிவந்திருக்கும் “உரு” திரைப்படம் இந்தப்படத்தை தழுவித்தான்(?) எடுக்கப்பட்டிருக்கின்றது என்றும் கதையடிபடுகின்றது. அந்த படத்தைப் பார்த்த பின்னர் இந்தக்கட்டுரைக்கு ஒரு தொடர்ச்சியைப் போடலாம்.

இப்படித்தான் படத்தின் சஸ்பன்ஸ் உடையாமல் எழுதுவதா?

Advertisements

One comment

  1. Execellent movie…but it’s hard to write( w/o spoilers) this kind of movies though…. Well managed..🤗

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s