இந்திய சினிமா எடுக்க மறந்த (பேய்க்) கதை

“இந்திய சினிமா எடுக்க மறந்த (பேய்க்) கதை.”
The Other Side of the Door படத்தைப் பார்க்கும் பொழுது தோன்றிய உணர்வுதான் இது. உலகம் முழுதும் இருந்து திகில் திரைப்படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை உலக அரங்கில், விழாக்களில், திகில் பட ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெறக் காரணம் அவற்றின் நேட்டிவிட்டிதான். இன்னும் விரிவாகச் சொல்வதானால், குறிப்பிட்ட ஒரு நாட்டில் இருந்து வெளிவரும் பேய்ப்படம் அந்நாட்டின் மரபோடு பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த நிலத்தின் வேர்களில் இருந்து விலகி அந்தரத்தில் மிதக்கும் கதைகளாக இருக்கக் கூடாது. இதனை ஒரு விதியாகவோ, நிர்ப்பந்தமாகவோ முன்வைக்கவில்லை. ஒரு கதைசொல்லி தான் வாழும் சூழ்நிலைகளை பொருட்டில் கொள்ளாது அந்நிய நிலங்களில் இருந்து திருடி கதைசொல்ல முடியாது. தாய்லாந்தில் ஒரு Friday the 13th போன்ற urban legend கதையை சொல்வதை விட அந்நாட்டின் folkloreஇன் Mae-Nak எனும் மோகினிக் கதையை சொல்வதுதான் ஏற்றமானதாய் இருக்கும். அது சிறப்பாகவும் அமையும். அப்பொழுதுதான் எமக்கு அந்த சினிமாவுடன் ஒன்றித்து பயணிக்க முடியும்.
தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையை எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சினையை புரிந்துகொள்ள முடியும். நாட்டுபுறக் கதைகள் ஆயிரமுண்டு அவற்றை கொஞ்சம் கூட கணக்கில் கொள்ளாமல் பிறமொழிப்படங்களில் இருந்து உருவி திரையாக்கம் செய்கிறார்கள். அது நேடிவிட்டியாகவும் இல்லை சினிமா தரத்துடனும் இல்லை. பேய்ப்படங்களை, ஹாரர் வகையறாவை சரியாக புரிந்துகொள்ளாமல் மசாலாவும், இன்னபிற சங்கதிகளையும் கலந்து எசகுபிசகாக என்ன எழவையோ எடுத்து தொலைத்துவிடுகிறார்கள். இவர்கள் உருவும் படங்கள் உண்மையில் அந்த நாட்டின் நேட்டிவிட்டியுடன் வரும் படங்கள்தான்.
சரி அப்படியென்ன பஞ்சம் கதைக்கு? The Other Side of the Door இந்திய மரபை ஒட்டி எடுக்கப்பட்டிருக்கும் படம். தன் மகனை பறிகொடுத்த தாய், அந்த பரிதவிப்பை கடக்க ஆன்மாக்கள் உலகுடன் தொடர்பை ஏற்படுத்தி மகனுடன் உரையாடுகிறாள். திறக்கக் கூடாத கதவை திறந்துவிட பிரச்சனைகள் வலுக்கின்றன. இது பண்டைய கோவில், அகோரிகள், இந்து மத நம்பிக்கைகள் என்று இந்திய மரபுகளுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஒரு பிரச்சினை இந்த அமானுஷ்யங்கள் ஆங்கில தம்பதிகளுக்கு நடப்பதால் தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டாமலேயே நகர்கின்றது. Yet, Emotionally it has a good content.
இதே கதையை, இந்த மரபுகளை வைத்து ஒரு அற்புதமான பேய்படத்தை தமிழில் எடுக்க முடியும். அது சிறப்பாகவும், நேட்டிவிட்டியுடனும் இருக்கும். இன்னும் அதிக பயத்தையும் வரவழைக்கும். ஆனால் இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ அதற்கு தயாரில்லை போல்தான் விளங்குகின்றது.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s