Logan (2017)

Wolverine, அடங்காதவன், அசராதவன், அன்பானவன் (well sort of) இப்படியொரு காமிக் பாத்திரத்தை, அதை கச்சிதமாக உள்வாங்கி Wolverineஆகவே மாறி நடித்த Hugh Jackmanஐ வைத்துக்கொண்டு இவ்வளவு காலமும் என்ன புடுங்கிக் கொண்டிருந்தீங்க Mr. Fox என்றே கேட்கத் தோன்றுகிறது இந்த படத்தை பார்த்த பின். முதல் காட்சிகளிலேயே இந்த படம் எங்கே போகின்றது என்பது விளங்கி விடுகின்றது. அதுதான் படத்தின் பலமும். Super healing, adamantium, Wolverine claws பல சரித்திரங்கள் கண்ட ஆயுளைக் கொண்டவன் தன் வாழ்வில் வலிகளை மட்டுமே சுமந்து வந்திருக்கிறான். அன்புக்குரியவர்களை தொடர்ந்து பறிகொடுத்துக்கொண்டே வந்த ஒருவன் உடலின் காயங்களை இலகுவாக கடக்க முடிந்தாலும் மனதின் வடுக்களை அழிக்க முடியாமல் மரணத்தை தேடிச் செல்லும் ஒரு பாத்திரமாக வாழ்ந்திருக்கும் Hugh Jackmanஇற்கு நிச்சயம் ஆஸ்கார் கிடைக்காது.

Why? All these years… you’ve wasted such a character and an actor who lived as Wolverine? இந்த படம் Hugh Jackmanஇன் கடைசி Wolverine படம் என்று தெரியும் ஆனால் இந்தளவுக்கு வலிகளை தரும் என்று நினைக்கவேயில்லை. எனது சிறுவயது முதல் Wolverine பாத்திரத்தினால் ஆகர்சிக்கப்பட்டு வளர்ந்தவன் நான். ஆங்கில காமிக்ஸ்களுக்குத் தட்டுபாடு இருந்தாலும் Wolverine ஒரு காமிக் பாத்தரம் என்று அறிந்துகொள்ள ஒருசில பழைய காமிக்ஸ்கள் உதவின. அதேகாலகட்டத்தில் வந்த X-Men animated series – அப்பொழுது தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டது – மூலம் இந்த பாத்திரத்தை பற்றி அதிகம் அறிந்துகொண்டேன். Foxஇன் X-Men திரைப்படங்களின் கதைக்களங்களை அதிக செறிவுமிக்க கதைக்களங்களைக் கொண்டது இந்த சீரீஸ். நண்பனுடன் சேர்ந்து Wolverine பாத்திரத்தை வைத்து fan fiction ஒன்றை எழுதிய ஞாபகமும் வந்து போகின்றது.

Logan, Mutant race அழிவின் விளிம்பில் இருக்கும் எதிர்காலத்தில் நடக்கும் கதை. Old Man Logan காமிக்ஸை ஒட்டி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் ஒருவிதத்தில் Hugh Jackman – Logan – X-Men மூன்றையும் விசாரனைக்குட்படுத்துவதாய் அமைந்துள்ளது. நீண்டகாலம் ஒரே பாத்திரத்தை செய்துகொண்டிருக்கும் ஒரு நடிகனுக்கு, அவன் ஏற்று நடிக்கும் பாத்திரத்திற்கு உண்மையாக ஒரு படைப்பையேனும் வழங்க முடியவில்லை என்ற ஏக்கம், அந்த பாத்திரத்தில் உச்சபட்ச நடிப்பை வெளிக்கொணர வேண்டும் என்ற ஆதங்கம், X-Men படங்கள் Marvel Studios இன் பாதிப்பை எதிர்க்கொள்ள திணறி தடுமாறிய தருணங்கள், ஒரு சங்கிலித் தொடர் போல் தொடராக வந்துகொண்டிருந்த சூப்பர் ஹிரோ படங்களில் நின்றும் தனித்து நிற்க எடுத்த பிரயத்தனங்கள் எல்லாம் ஒரு கதையாக மாறி, சவாலாக தன்னை நிரூபித்துக்கொண்ட படம்தான் Logan. இத்துடன் Hugh Jackmanஇன் Wolverine பாத்திரம் திரையில் வரப்போவதில்லை. அது பெரும் இழப்புதான். ஆனால் அதுதான் யதார்த்தம். புதிய X-23இன் மேல் தன் legacyஐ விட்டுவிட்டு உயிர் பிரியும் தருணம் மகத்தானது.

இவ்வளவு காலமும், இப்படியொரு Wolverine – Hugh Jackman படத்தைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். Logan அதனை பூர்த்திசெய்தது. அதுவே கடைசியும் ஆனது. Farewell Old Man.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s