Trollhunters – Animation TV Series (2016)

trollhuntersheader

கியர்மோ டெல் டோரோ (Guillermo del Toro) கனவுத் திட்டங்களை அடிக்கடி வெளியிட்டு எம் போன்ற டார்க் பென்டசி, ஹாரர் (cheap horrorகள் அல்ல) விரும்பிகளை “Oh yes” என எதிர்பார்ப்பை எகிற வைத்துவிடுவார். அப்படி அவர் அறிவித்து இன்னும் எடுக்கப்படாமல் போன projectகள் ஏராளம் உண்டு, அது தவிர பாதியில் கைவிடப்பட்ட, திரைக்கதையில் மாத்திரம் அவர் பெயர் வரும்படியான படைப்புகள் என்று நிறைய இருக்கின்றன. Hobbit படத்தை கியர்மோ எடுப்பதாக இருந்து பின்னர் சிலபல காரணங்களால் அதிலிருந்து விலகிவிட்டார். Pan’s Labyrinth பார்த்தவர்களுக்கு கியர்மோ டால்கினின் படைப்பை எடுத்திருந்தால் எப்படியிருக்கும் என்பதை கிரகித்துக்கொள்ள முடியும்.

At the Mountain of Madness, Beauty and the Beast, Frankenstein, Haunted Mansion என்று இவர் கனவு திட்டங்கள் மிக நீண்டது. அது தவிர டீவி சீரீஸ், வீடியோ கேம்கள், நாவல்கள் என்று “கதைசொல்ல” வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பவர். இப்பொழுதெல்லாம் கதைசொல்லிகளை அதிகம் காணமுடிவதில்லை. குழந்தைகள் பாட்டியிடம் போய் கதை கேட்டுக்கொண்டிருக்கும் போது அவளும் ஓயாமல் சொல்லிக்கொண்டே போவாள். அலுப்புத்தட்டுவதில்லை. அவளிடம் நிறைய கதைகள் இருக்கும். எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும். அல்லது சொல்லச் சொல்ல கதைகள் கொட்டிக்கொண்டேயிருக்கும். அவ்வாறான ஒருவர்தான் டெல் டோரோ. அவரிடம் நிறைய கதைகள் இருக்கின்றன. அற்புதமான கனவுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் சொல்ல வேண்டும் என்ற பாட்டியின் ஆர்வமும், எல்லாக் கனவுகளிலும் சாகாசப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற சிறுவனொருவனின் வேட்கையும் இருக்கின்றது. அதனால்தான் சினிமாவில் மாத்திரம் தன்னிடமிருக்கும் கதைகளை கூறிவிட முடியாது என்று டீவி சீரீஸ், விடியோ கேம், அனிமேஷன், புனைவிலக்கியம் என்று கிளைபரப்பிக் கொண்டே செல்கிறார் டெல் டோரோ.

கியர்மோவின் படைப்புலகை “கொண்டாட்டமிக்க இருண்மை – Celebration of Darkness” என்று கூறலாம். பிற டார்க் பென்டசி, ஹாரர் இயக்குனர்களிடமிருந்து கியர்மோ வேறுபட்டு நிற்பது அவரது அழகியலும், பழங்கதைகள் (நாட்டார் மரபுகள்) மீதான அதீதக் காதலும்தான். பிற படைப்பாளிகளின் படைப்புகளில் வரும் மன்ஸ்டர்களுக்கும் கியர்மோவின் மன்ஸ்டர்களுக்கு நிறைய வேறுபாடுகள் உண்டு. ஹாலிவூடின் பயங்கர ஜந்து ஒன்றையும் – ஹெல்பாய் கோல்டன் ஆர்மியில் வரும் வனக்கடவுளின் சித்தரிப்பையும் ஒப்பு நோக்கினால் இது புரியும். கியர்மோ பற்றி தனியாக பேசும் போது இதை விரிவாகப் பார்க்கலாம்.

தனது டார்க் பென்டசி, ஹாரர் இரண்டையும் சற்று தளர்த்தி முற்றிலும் சிறுவர்களுக்காக (அல்லது என்னைப் போன்றவர்களுக்காக) கியர்மோ உருவாக்கிய தொலைக்காட்சி தொடர்தான் Trollhunters. முதலில் நாவலாக எழுதப்பட்டு பின்னர் தொலைக்காட்சித் தொடராக மாற்றம் பெற்றிருக்கின்றது. இதுவும் Strain போல் தொலைகாட்சிக்கென்றே உருவாக்கப்பட்ட ஒன்றுதான். ஏனைய சிறுவர் அனிமேஷன் தொடர்களில் இருந்தும் இது கொஞ்சம் மாறுபட்டு நிற்பது, பாத்திரங்களுக்கிடையிலான சமத்துவம், தொன்மம் குறித்த விபரங்கள், சிறுபான்மை பாத்திரங்களை உள்வாங்கியிருப்பதனால்தான் (Strain இலும் இதனைக் காணலாம்).

trollhunters-trailer-0

இந்த சீரீஸ் கியர்மோ ரசிகர்களுக்கு மிகப் பெரும் தீணி என்றே சொல்லலாம். அந்தளவுக்கு reference, homeage, tributeகள் நிறைந்திருக்கின்றன. ட்ரால் மார்கட் அப்படியே ஹெல்பாயை நினைவூட்டுகின்றது. கோல்டன் ஆர்மி படத்தின் கடைசி சண்டைக்காட்சியில் வரும் சில்லுகள் கொண்ட களம் போன்றதொரு பயிற்றுவிப்பு களம் இதிலும் வருகின்றது. ஒவ்வொரு மன்ஸ்டருக்கும் உபகதைகள் உண்டு, தொன்மங்கள் (myths), clockwork mechanism என்று நிறையவே இருக்கின்றது.

ஒரு தொலைக்காட்சித் தொடருக்கான பட்ஜட்டை வைத்துக் கொண்டு அனிமேஷனை சிறப்பாகவே செய்திருக்கின்றனர். பின்னணி காட்சிகளில் டீடைல்ஸ் குறைவாக இருந்தாலும், குறைகளை கடந்து பார்க்கத் தூண்டுவது நேர்த்தியாக அமைக்கப்பட்ட கதைதான். 26 எபிசோட்கள் கொண்ட இந்த சீரீஸை நெட்ஃப்லிக்ஸ் மற்றும் ட்ரீம் வர்க்ஸ் இணைந்து தயாரித்திருக்கின்றது. சிறுவராய் இருந்தால் தவறவிடாமல் பார்க்கவும்.

Advertisements

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s