Train to Busan: ப்ரேதன் எக்ஸ்ப்ரஸ் (2016)

train-to-busan-2016-full-movie-dvd-e1474801242318

வழக்கமாக ஜோம்பி படங்களைப் பற்றி எழுதும் போது “எனக்கு ஜோம்பி படங்கள் பிடிக்காது…” என்றுதான் ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் இதுவரையில் தேர்ந்தெடுத்துப் பார்த்த ஜோம்பிப் படங்கள் என்னையும் ஒரு ஜோம்பியாக மாற்றிவிடும் போலிருக்கின்றது. இந்த கொரியர்கள் எதை எடுத்தாலும் அதில் ஒரு கொலைவெறி இருக்கும். இடிந்து விழுந்துகொண்டிருக்கும் கட்டடத்தில் இருந்து கொண்டு படமெடுக்கிறார்களோ என்றும் சில நேரங்களில் தோன்றுவதுண்டு. Zombie Outbreak இந்த கன்சப்ட்டை வைத்துக்கொண்டு எத்தனை ஹாலிவூட் படங்கள் வந்திருக்கும்? ஆமை வேகத்தில் நகர்ந்துகெண்டிருந்த ஜோம்பிகள் படிப்படியாக வேகங்கொண்டு 28 Days Laterற்கு பிறகு World War Zஇல் கெட்ட ஸ்பீடில் ஓடிய ப்ரேதர்கள் Train to Busanஇல் புல்லட் வேகத்தில் வேட்டையாடுகின்றன. கொரிய புல்லட் இரயிலில் நடக்கும் கதை அதே வேகத்தில் நகர்கின்றது. Bong Joon-hoவின் Snowpiecer படமும் படுபயங்கர வேக திரைக்கதையின் மூலம் ஜெட் வேகமெடுக்கும்.

வேகமும் – மனித அறமும் இணைந்து பயணிக்கும் படம்தான் Train to Busan. கொரியாவின் முதல் ஜோம்பி படம் என்ற அடைமொழியுடன் வெளியாகி இந்த கணம் வரை பாக்ஸ் ஆஃபிஸ் ரெகோடையெல்லாம் முறியடித்துக் கொண்டு முன்னேறிச் செல்கின்றது. ஹாலிவூட் பிளந்த வாயை மூடும் முன்னரே இப்படத்தின் prequel (Seaul Station) வெளியாகி, இப்பொழுது இரண்டாம் பாகமும் தயாராகிக் கொண்டிருக்கின்றது. திரைப்பட விமர்சகர்கள் மத்தியிலும் சரி, வணிகரீதியிலும் சரி வெகுவான வரவேற்பை பெற்றிருக்கும் இந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கின்றது? ஹாலிவூடில் குறைந்தது ஐந்து ஜோம்பி படங்களாவது வருடத்திற்கொருமுறை வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. இது தவிர தொலைகாட்சி சீரிஸ்கள் வேறு. அப்படி இருக்கையில் இந்த படத்தில் என்ன ஸ்பெஷல் இருக்கப் போகின்றது?

இதற்கான காரணம் அவ்வளவு ஒன்றும் சிக்கலானதல்ல, ஊண்டிப் பார்த்து தெரிய வேண்டியதில்லை. Train to Busan பேசும் மனித அறமும், அதனுடன் சரியான கலவையாக பயணிக்கும் Action மற்றும் Zombie Horrorதான் இவ்வெற்றிக்கான காரணம். World War Z திரைப்படம் விட்ட தவறில் Train to Busan வெற்றி பெறுகிறது. World War Z படமும் இம்மாதிரியான கதைதான், தனது குடும்பத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒருவனின் கதைதான் இதுவும். இரண்டும் ஹாலிவூட் எனும் புள்ளியில் வேறுபட்டு நிற்கின்றது. Train to Busan சாதாரண மனிதர்களைப் பற்றிப் பேசுகின்றது, முக்கிய பாத்திரங்கள் அனைவரிற்கும் ஒரு குடும்பம் இருக்கின்றது, காப்பரேட் நிறுவனத்தில் வேலையே கதியென்று மனைவியை பிரிந்து வாழும் மனிதனும் அவனது மகளும், கர்ப்பிணியான தனது மனைவியுடன் பயணிக்கும் ஒருவன், முதிய வயதிலும் இணைபிரியாத சகோதரிகள், இளம் காதலர்கள், காப்பரேட் நிறுவன அதிகாரி, ஹாலிவூட் படங்களில் புறக்கணிக்கப்படும் சாதாரண இரயில் ஊழியர்கள், யாரும் சட்டை செய்யாத ஒரு பிச்சைக்காரன். புல்லட் இரயிலில் மனிதர்களின் அனைத்து வர்க்கமும் பயணிக்கின்றது. இந்த பயணத்தின் இடையே இரயிலில் ஏறும் ஜோம்பி வைரஸ் தாக்கிய ஒரு பெண்ணின் மூலம் துரித கதியில் நிறைய பேர் ப்ரேதர்களாக மாறுகின்றனர். வாழ்வா – மரணமா எனும் நிலை தோன்றுகின்றது, அடுத்தவர்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை தன்னை காப்பாற்றிக் கொள்வதே பெரிய விடயம் என்ற சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு மனிதனும் என்ன முடிவெடுப்பான் என்ற கேள்வி எழுகிறதல்லவா? இந்த கேள்விதான் இப்படத்தை நகர்த்திச் செல்கின்றது.

இன்றைய காலத்தில் சகமனிதன் குறித்து கவலைப்பட எமக்கு நேரமில்லை, எம்மையும் எமது நெருங்கிய குடும்பமும் தவிர வேறு யாரும் எமது கண்களுக்குத் தெரிவதில்லை, அடுத்தவனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் சோற்றுக்கு என்ன செய்வது என்று கேள்வி கேட்கும் மனிதர்களாக நாமின்று மாறிவிட்டோம். இந்த நவ உலகம் எம்மை அப்படி மாற்றிவிட்டிருக்கின்றது. ஒருவனை ஏறி மிதித்து விட்டுதான் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அப்படியொரு முன்னேற்றம் தேவையா? இல்லை அது நிலைக்குமா? இப்படி முன்னேறிச் செல்லத் துடிக்கும் ஒருவன் அடுத்த மனிதனுக்காக தன்னையே தியாகம் செய்து மனிதனாகிறான். புன்னகையுடன். ஒவ்வொருவரும் இப்படி தம்மை மாற்றிக் கொள்கின்றனர், தன்னலம் பாராது உதவி செய்கின்றனர். யாரையும் விட்டுச் செல்வதில்லை தம்முடன் கூட்டிச் செல்கின்றனர், இல்லை அன்புக்குரியவர்களுடனேயே மரித்துப் போகின்றனர். தியாகம், அர்ப்பணம், அன்பு, அறம் இதுதான் Train to Busanஇல் ஒளிக்கும் செய்தி.

சரி இப்படி மனித அறத்தை பேசிக் கொண்டு எப்படி ஒரு அட்டகாசமான Action/Horror/Thrillerஐ எடுப்பது? இப்படிதான்டா! என்று அழுத்தி அடித்து சொல்லிச் செல்கின்றது Train to Busan. நடிப்பில் அத்தனை பாத்திரங்களும் அற்புதம். முக்கியமாக அந்த சிறுமி. ஜோம்பி எஃபெக்ட் எல்லாம் வேற லெவல். ஜோம்பியாக நடித்த அனைவரும் ஏதோ ஒரு ஜிம்னாஸ்டிக் க்ளாசில் இருந்து அப்படியே வந்தவர்கள் போலிருக்கின்றது. Action காட்சிகளில் இருக்கும் வெறித்தனத்தை வார்த்தைகளால் சொல்லிமாலாது.

இவ்வளவு இருந்தும் கடைசிவரை தன்னை மாற்றிக் கொள்ளாத ஒன்றே ஒன்று காப்பரேட் கனவான்தான் என்பதையும் பதிவு செய்கிறது இப்படம்.

படத்தை எப்பொழுதோ பார்த்துவிட்டாலும் சோம்பல் காரணமாக எழுதவில்லை. ஆனால் எக்கச்சக்கமான பேர் எழுதிவிட்டனர். இதற்கு மேலும் நான் என்ன எழுத என்று கிடப்பில் போடவும் மனமில்லை அவ்வளவு பாதித்த படம். மூளை தின்னும் ஜோம்பி படங்களுக்கு மத்தியில் மூளையை சீண்டும் இப்படத்திற்கு ஒரு சல்யூட்!

Advertisements

4 comments

 1. எனக்கும் சாம்பி படங்கள் அவ்வளவாக பிடிப்பதில்லை, ஆனால் இந்த படம் பிடித்திருந்தது. ஒரு விருவிருப்பான படத்துக்கு தேவையான அத்தனை அமைப்பும் கதையில் இருந்தது. இந்த வகையில் ஹாலிவுட்டில் டான் ஆஃப் தெ டெட் உம் 30டேஸாஃப் நைட்டும் எனக்கு பிடித்த மற்ற படங்கள்.

  எழுதியமைக்கு நன்றி.

  • ரோமேரோ ஜோம்பி வகைப் படங்களை சமூக நோக்கிலே பயன்படுத்தினார்… ஆனால் அதிகமான மெய்ன்ஸ்ட்ரீம் ஜோம்பிப் படங்கள் வந்து அலுப்புத்தட்ட செய்துவிட்டது.

   ஜோம்பிக் தொடர்பான கட்டுரை ஒன்றை எழுதி பதிப்பிற்காக அனுப்பி இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றேன்… பிரசுரமானவுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

   மிக்க நன்றி கோபிநாத்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s