The Piper (2015)

the-piper-2015

The Pied Piper of Hamelin கதை ஞாபகமிருக்கின்றதா? ஒரு நகரில் எலிகள் பெருகி பெரும் பிரச்சினையாக மாறுகின்றது. இதற்கு என்ன தீர்வு என்று ஊர் மக்களும், ஊர் பிரபுவும் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த ஊரினுள் ஒரு Piper (புல்லாங்குழல் போன்ற காற்றிசைக் கருவி வாசிப்பவன்) நுழைகின்றான். அவன் இப்படியொரு பிரச்சினையிருப்பதை அறிந்து ஊர்ப் பிரபுவை சந்தித்து இப்பிரச்சினைக்கு என்னால் தீர்வு வழங்க முடியும் என்கிறான். ஊர் பிரபுவும் அவன் கேட்கும் சன்மானத்தை தருகின்றேன் எனக் கூறி ஒத்துக்கொள்கிறார். Piper சொன்னபடியே எலிகள் அனைத்தையும் அவனது இசையின் மூலம் எங்கோ கூட்டிச் சென்றுவிடுகிறான். இதேவேளையில் ஊர் மக்களும், பிரபுவும் சேர்ந்து திட்டம் தீட்டி ஒரு எலியை மாத்திரம் பிடித்து வைத்துக் கொண்டு, “நீ சொன்ன வேளையை சரியாகச் செய்யவில்லை உனக்கு சன்மானம் தரமுடியாது” என்கிறார்கள். கொடுத்த வாக்கை மீறிய பிரபுவையும், ஊர் மக்களையும் பழிவாங்குகின்றான் Piper. அவனது இசையின் மூலம் ஊரிலுள்ள அனைத்து சிறுவர்களையும் அழைத்து ஒரு மலைக்குகைக்குள் மறைந்துவிடுகிறான். அதன் பின்னர் அந்த ஊரின் குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பதை யாராலும் அறிய முடியவில்லை. இது அந்த கதையின் சுருக்கம். இந்த softஆன கதையென்றாலும் (பழம் நாட்டார் கதைகளை softஆகா மாற்றும் பழக்கம் புதிதாய்த்தான் தோன்றியது) கடைசி முடிவு யாரையும் சில்லிட வைக்கும்.

கொரிய சினிமா இம்மாதிரியான ஐரோப்பிய பழங்கதைகளை மீளுருவாக்கம் செய்வது புதிதல்ல. ஏற்கனவே Hansel and Gretel, The Red Shoes போன்ற படங்கள் வந்திருக்கின்றன. இரண்டுமே ஹாரர் படங்கள். The Piper, கொரிய தலைப்பு Son-nim என்று வரும். Son-nim என்றால் விருந்தாளி, அந்நியன் என்று பொருள்படும். அதேநேரம் ஆவி என்ற அர்த்தத்திலும் அச்சொல் வழங்கப்படுகின்றது. மேற்சொன்ன the The Pied Piper of Hamelin கதையேதான் இதுவும். ஏற்கனவே நன்றாக அறியப்பட்ட கதையை எப்படி கொரிய சினிமாவிற்கேயுரிய ட்விஸ்ட்களுடனும், அமானுஷ்ய சூழமைவுகளுடனும் எடுத்திருக்கிறார் Kim Gwang-tae என்பதே இங்கு முக்கியம். அதுவும் இப்படம் இவரது முதல் படமும் கூட.

இப்படம் ஒரு மர்மக் கதை அதேநேரம் மெலிதாக பரவிச் செல்லும் திகிலையும் தன்னுள் கொண்டிருக்கின்றது. கொரிய யுத்த காலத்தில் தன்னை மறைத்துக் கொண்டு வாழும் ஒரு மர்ம கிராமம், ஊர் தலைவர் வாக்கை அப்படியே எதிர்க் கேள்வி கேட்காமல் நம்பி வாழும் மக்கள், யுத்தப் பின்னணியுடன் தொடர்பான மர்மங்கள் என்று பழம் நாட்டார் கதைக்குள் குறுக்கு விசாரனை செய்துகொண்டு செல்கிறது படம். யுத்த அரசியல், அதிகாரம், அதிகார வர்க்கத்தின் போலிக் கட்டமைப்பிற்குள் வாழும் மக்கள், அமெரிக்க மருத்துவத்தை நம்பி மகனைக் குணப்படுத்த நகரை நோக்கிச் செல்லும் தந்தை, இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் ஊர் பூசாரி (இந்த பதம் எந்தளவுக்கு பொருந்தும் என்று தெரியாது), எலிகள். சினிமா, இலக்கியங்கள் இன்னபிற கலைவடிகளின் எலிகளின் சித்தரிப்பு சமூக, அரசியல், கலாச்சார சீர்கேடுகளை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இப்படத்தில் அச்சித்தரிப்பு மிகச் சரியாக பொருந்திச் செல்கின்றது. இன்னொரு தளத்தில் இத்திரைப்படம் கொரிய அரசியலைப் பேசுகின்றது என்றும் சொல்லலாம்.

ஹாரர், விஞ்ஞானப் புனைவுத் திரைப்படங்களில் சமூக, அரசியல் உருவகங்களை அதிகம் சித்தரிக்க முடியும் என்பதற்கு இப்படம் ஒரு முக்கிய உதாரணம். இப்படி நுண்ணரசியல் தளத்தில் இப்படத்தைப் பற்றி அலசுகின்றேன் என்பதற்காக இதுவொன்றும் இறுக்கமான சினிமாவல்ல. இயற்கை வனத்தினுள் பதுங்கிக் கொண்டிருக்கும் அழகிய கிராம் மெல்ல மெல்ல எப்படி தனது குரூர முகத்தைக் காட்டுகின்றது என்பதை படிப் படியாக உணர முடியும். இம்மாதிரியான கதையை பென்டசி தளத்திற்கு கொண்டு சென்று எடுத்திருக்கவும் முடியும் ஆனால் இப்படம் அதனைச் செய்யவில்லை நம்மூர்களில் உள்ள அமானுஷ்ய பக்கங்களுக்கு எப்படி பென்டசி நிறங்களோ, செட்டிங்களோ இல்லையோ அப்படியே இதுவும் இருக்கின்றது. ஊரில் நடக்கும் ஒரு கதை. என்ன ஒன்று எங்கள் ஊரில் எல்லாம் இப்படியான காடு இல்லை. அவ்வளவு அழகு. அழகுக்குள் ஒரு திகில்.

படத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் பெரிதாக கணக்கில் கொள்ளத் தேவையில்லை. சில உபகதைகள் கதைக்கு தொடர்பில்லாம் இருப்பது பெரிய குறையாக எனக்குத் தோன்றவில்லை. இன்னொரு முக்கிய விடயம் படத்தின் இசை. பழம் இசைக் கருவிகளும், நாட்டார் இசையுமே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. The Piperஇன் இசை அப்படியான ஒன்றே! நிச்சயம் தவறவிடக் கூடாத படம் இது.

Advertisements

One comment

  1. பார்க்கத் தூண்டிவிட்டது. பார்த்துவிடுகிறேன். நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s