Keeper of Darkness (2015 – Hong Kong)

 

750x1056_movie13080posterskeeper_of_darkness-hk
எனக்கு பெர்சனலாக சில genreகள் ஒன்றாகக் கலந்த படங்கள் மிகவும் பிடிக்கும். நகைச்சுவை, சண்டை, காதல், சென்டிமென்ட் போன்ற தமிழ் மசாலாக்கள் அல்ல. ஒரு பேய் படம் (Horror), அதில் ஒரு க்ரைம் (Crime), அதை துலக்கும் ஒரு துப்பறிவாளன்(Detective), அவன் ஒரு பேய் விரட்டி (Exorcist), அவனுக்குள் ஒரு ரொமான்ஸ் (Romance), ஆவியுலகு(Underworld), நகைச்சுவை (Comedy) இப்படியான ஒரு கலவை ஒரு படத்தில் இருந்தால் எப்படியிருக்கும்? நோன்பு திறக்கும் வேளையில் ஆட்டு புரியாணியை சுடச் சுட கண்முன் வைத்திருந்தால் எப்படியிருக்கும்… Keeper of Darkness அப்படியானதொரு படம்.
 
ஹாரரின் எல்லாம் elementகளும் ஒருங்கே அமைந்த ஒரு படம் Keeper of Darkness. Constantine ரகமென்றாலும் இந்த படம் அதனைவிட அதிக செறிவுடன் எடுக்கப்பட்டிருக்கின்றது. கியர்மோவின் திரைப்படங்களுக்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றது, ஹாரர் என்பது வெறுமனே பயமுறுத்துவதை மாத்திரம் நோக்கமாக கொண்டிருக்கக் கூடாது என்பதே அது. படத்தின் இயக்குனரும் நடிகருமான Nick Cheung Ka-fai ஒரு வித்தியாசமான பேய்விரட்டி. அவர் பேய்களை துன்புறுத்தி பீடிக்கப்பட்ட உடலை விடடு விரட்டுவதில்லை மாறாக பேசி convince செய்துதான் அனுப்பிவைப்பார். படத்தின் நாயகனும் அவன் சார்ந்த சூழலும் நகர்புற நடுத்தரவர்க்க மக்களை சார்ந்ததாக இருக்கின்றது. இது படத்திற்கு ஒரு richnessஐ வழங்குகின்றது.
 
இப்படியான ஒரு படத்தில் முக்கியமாக இருக்க வேண்டியது பாத்திரப்படைப்பு. இதில் அது கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. நாயகனின் இறந்தகாலமும் – நிகழ்காலமும் – எதிர்காலமும் அழகாக merge செய்யப்பட்டிருக்கின்றது. இன்னொரு முக்கியமான விடயம் ரொமான்ஸ். அழகு.
 
இந்த கொரியா, சீனா, தாய்லாந்த், ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பேய்ப்படங்கள் எப்படித்தான் தரமாக இருக்கின்றதோ தெரியவில்லை. ஏனைய நாடுகளின் ஹாரர் படங்கள் செறிவாக இருப்பதில்லை, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே இயங்குகின்றன. அவை ஒன்றிரண்டு genreகளுடனேயே கலந்து எடுக்கப்படுகின்றன. ஆனால், மேற்சொன்ன நாடுகளின் படங்கள் ஒவ்வொன்றும் அதன் core elementஐ கடந்து பல தளங்களில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. Rigor Mortis ஒரு உதாரணம், படம் kung-fu + horror என்று அசத்தலாக எடுக்கப்பட்டிருக்கும் படம். தாய்லாந்தின் Pee-Mak என்ற ஹாரர் – காமடி படம் இன்னொரு உதாரணம். இதை இன்னும் தெளிவாகச் புரியவைக்க இப்படங்களை பாருங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் வரும் ஹாரர் படங்களை ஒருமுறைப் பாருங்கள். கியர்மோ டெல் டோரோவின் the Devil’s Backbone படம் எவ்வாறு வரலாற்றையும், போராட்டத்தையும், பதின்பருவச் சிறுவர்களின் உளவியலையும், யுத்த கால வெட்கையையும் – ஒரு பேய்க்கதையுடன் கலந்து ஒரு அற்புதப் படைப்பாக உருமாற்றியிருப்பார் என்று. ஹாரர் என்ற genreஐ தனித்து கொண்டு செல்லவும் முடியும், பல தளங்களுடன் இணைத்து செல்லவும் முடியும், சமூகவியல், அரசியல், உளவியல் பிரச்சினைளை முன்வைத்து உருவகமாக சித்தரித்துச் செல்லவும் முடியும். இந்த குறிப்பிட்ட ஆசிய நாடுகளில் இருக்கும் செறிவான ஆவியுலக தொன்மங்கள் மற்றும் நாட்டார் மரபுகள்தான் ஹாரர் genreஇல் அற்புதமான பாய்ச்சலை ஏற்படுத்தி வருகின்றன. இது இன்று ஆரம்பித்த legacy அல்ல பழைய படங்களில் இருந்தே இது ஆரம்பித்துவிட்டது. 

இன்னும் சில ஹாரர் படங்களுடன் சமகால ஹாரர் பற்றி அலசுவோம்!

வர்றேன்!

Advertisements

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s