The Boy & Modern Horror

boy_xlg

ஆங்கிலத்தில் தலைப்பை வைத்துவிட்டு தமிழில் பதிவை எழுதுகின்றேன் என்று யோசிக்க வேண்டாம். காரணம் அதேதான் தமிழ் தலைப்புக்கு கொஞ்சம் தட்டுப்பாடு. இலங்கையில் தலைப்புகளுக்கு வரிப் பிரச்சினையில்லை என்பதால் அப்படியே இருக்கட்டும். நீண்ட நாட்களுக்குப் பின்னர் எழுதுவது ஹாரராகவே இருக்கட்டும்.

சமகால திகில் திரைப்படங்கள் பற்றிய ஒரு பார்வை என்றும் இக்கட்டுரையை பார்க்கலாம். அல்லது the Boy திரைப்படத்தின் விமர்சனம் என்றும் பார்க்கலாம். அல்லது எழுதுவதற்கு சரக்கே கிடைக்காமல் கண்டமேனிக்கு எழுது கிறுக்கியிருக்கிறான் என்றும் பார்க்கலாம்.

சரி. சமகாலத்தில் தமிழில் அதிகமான அளவில் திகில் திரைப்படங்கள் வருவது கவனிக்கத்தக்கது. அவற்றில் எத்தனை படங்கள் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றது, எத்தனை படங்கள் பெயரளவில் மாத்திரம் ஹாரர் என்றிருக்கின்றது, எத்தனை படங்கள் ஹாரர் + காமடி என்ற பெயரில் காதுகளில் இரத்தம் குடிக்கும் காட்டேரியாக இருக்கின்றது என்பதை பார்த்தால் சமகால ஹாரர் எப்படியெல்லாம் பேயடி வாங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்துகொள்ளலாம். தமிழில் தற்பொழுது வந்துகொண்டிருக்கும் horror genreகள் உலகளவில் பழசான genre + themeகள்தான். அதாவது பழைய ஹாரர் பட வகையறாக்கள்தான் மீண்டும் தூசுத் தட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இது ஒருவகையில் 13ஆம் நம்பர் வீடு, வா அருகில் வா, ஜென்ம நட்சத்திரங்களுக்கு பிறகு தமிழ் திகில் திரைப்படங்களில் ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதாகவும் நோக்கலாம். இந்த இடைவெளி நிரப்பல் படலத்தில் மாயா, பிசாசு, யாவரும் நலம் தவிர்த்து வேறு எந்தப் படமும் தேருவதாக இல்லை. தமிழ்ப் பேய்ப்படங்களுக்கு இன்னும் மவுசு இருந்துகொண்டுதான் இருக்கின்றது என்பதற்கு ஆதாரமாக கண்டமாதிரி எடுத்துத் தள்ளப்படும் அரண்மனை போன்ற பேய்மசால படங்களை பார்க்கும் போது புரிந்துகொள்ளலாம். தமிழ் ஹாரர் படங்கள் தனித் தலைப்புடன் உரையாடப்பட வேண்டியவை.

இதற்கு மறுபுறம் உலகளவில் horror genre புதிய அலையை பாய்ச்சிக் கொண்டிருக்கின்றது. Found Footage Horror, Modern Horror, Classic Horror இற்கு மீளச் செல்லல், கலைத்துவத்துடன் எடுக்கப்படும் ஹாரர் படங்கள் என்று அது நீண்டு கொண்டே போகின்றது. ஒருகாலத்தில் மூன்றாந்தரமான படங்கள் என்றே ஹாரர் இருந்தது. “உலகசினிமா” எனும் அடைமொழிக்குள் இவற்றை உள்ளடக்குவதேயில்லை என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்பாட்டுக்கு போய்க் கொண்டிருந்த ஹாரரை சில முக்கியமான மாஸ்டர்கள் தனித்துவமிக்க சினிமாவாக ஹாரரை மாற்றியது. Masters of Horror என்று இவர்களை அழைக்கலாம். இன்று நவீன ஹாரர் திரைப்படங்கள் எவ்வளவுதான் வந்தாலும் இந்த மாஸ்டர்களின் திரையாக்கங்களைக் தாண்டி எதையும் இன்னும் சாதிக்கவில்லை என்றே கூறலாம். இன்னொரு வகையில் கூறுவதானால் இவர்களின் வழித்தடத்தை இன்னும் மெருகேற்றி சமகால ஹாரர் இயக்குனர்கள் படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், George A Romero, John Carpenter, David Cronenberg போன்றவர்களிடமிருந்த vision, அரசியல் மற்றும் சமூகவியல் பார்வை இவர்களிடமில்லையென்றே கூறலாம். குரோசாவாவி்ன் படைப்புலகின் அழகியை, தொழில்நுட்பத்தை தழுவிக்கொண்ட ஹாலிவூட், குரோசாவா தனது ஒவ்வொரு காட்சிகளை அமைப்பதற்குப் பின்னால் வைத்திருந்த காரணங்களை புறமொதுக்கிவிட்டது. அதன் காரணமாகவே பல குரோசாவா காட்சி தழுவல்கள் உப்புச்சப்பில்லாமலேயே இருக்கின்றன.

haunting-angles

சமகால உலக திகில் திரைப்படங்கள் மிகுந்த நேர்த்தியுடன், கலைநயத்துடன், பயத்தை எவ்வாறெல்லாம் மனதி மூளையில் பதிய வைத்து பார்வையாளர்களை பீதியடையச் செய்வது என்று யோசித்து யோசித்து எடுக்கப்படுகின்றன. பல தரமான ஹாரர் திரைப்படங்கள் வந்தாலும் அவற்றிற்கு செய்யப்படும் பிழையான மார்கடிங் தேவையில்லாத எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் பார்வையாளர்களை திருப்திப்படுத்தாமலேயே சென்றுவிடுகின்றது. ஒரு திரைப்படத்தில் உள்ள குறிப்பிட்ட சில காட்சிகளை கோர்வையாக அமைத்து ட்ரைலர் உருவாக்கப்படுகின்றது. ட்ரைலரில் அதிக திகில் காட்சிகள், ஹாரர் கூறுகள் இருப்பதாக சித்தரிக்கின்றது  – படம் முழுதும் இப்படித்தான் என்ற எண்ணம் தோன்றுகின்றது – ஆனால் படத்தில் இந்த காட்சிகள் வருவது ஒருசில நொடிகளே. இது பார்வையாளர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துவிடுகின்றது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி படமொன்றை பார்க்கவேண்டும் என்றால் பெரும் சினிமா நூலகமொன்றிற்கு சென்று நாமாகவே தேடியலைந்துதான் பார்க்க வேண்டும். The Babadook, Goodnight Mommy, Crimson Peak, The Boy, The Witch போன்ற படங்கள் இந்த Manipulative Marketing (whatever?) மூலம் பிழையாக புரியப்பட்ட படங்கள்தாம்.

The Boy திரைப்படம் வழக்கமான சில ஹாரர் கதைக் கருக்களை ஒன்றிணைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஒரு படம். சனத்தொகை குறைவான ஒரு Countrysideஇல் ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு வீடு (பங்களா), வயோதிக தம்பதிகள், மர்மமான பொம்மை, தொலைதூரத்திலிருந்து குழந்தைகளை கவனிக்கும் வேலைக்குவரும் ஒரு பெண் – சில பல ஹாரர் க்ளிஷேக்கள் என்று ஏற்கனவே பல படங்களில் பார்த்த கதைத்தளம்தான். பிழையான வழியில் கதையை நகர்த்தி சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். முற்றிலும் வேறான ஐடியா ஒன்றை முதலில் கட்டமைத்துவிட்டு கடைசியில் தலைகீழாக முடிவை அமைத்துவிடுகிறார்கள். படத்தின் முடிவில் ஹாரரின் இன்னொரு genre தலைகாட்டுகின்றது.

இப்படியான ஒரு படத்தைப் பேசக்காரணம் இரண்டு விடயங்கள், ஒன்று குறைந்தளவான பட்ஜட்டை வைத்துக்கொண்டு சிறப்பான முறையில் திகில் காட்சிகளை படமாக்கியிருப்பது. இரண்டாவது காரணம் க்ளாசிக் ஹாரர் படங்களை ஞாபகப்படுத்தியிருப்பது. முதல் காரணத்தைக் கொஞ்சம் பார்ப்போம், ஒரு ஹாரர் திரைப்படத்திற்கு expensive VFX காட்சிகளோ, பெரிய நடிகர்களோ அவசியமில்லை மாறாக அது எந்தளவிற்கு பயமுறுத்த வேண்டும் என்பதிலேயே தங்கியிருக்கின்றது. (அல்லது எவ்வாறாக பயத்தை analyze செய்யவேண்டும் என்பதிலேயே தங்கியிருக்கின்றது). The Boy திரைப்படம் அச்சு அசல் ஒரு சிறுவனையொத்த பொம்மை, அந்த பொம்மையை பராமரிக்க வந்திருக்கும் பெண் இந்த இரண்டு பாத்திரங்களை சுற்றி பின்னப்பட்டிருக்கும் அமானுஷ்ய முடிச்சு, இதைச் சொல்ல பயன்பட்டிருக்கும் வீட்டின் ஒளிப்பதிவு இதுதான் இப்படத்தை சுவாரஷ்யமாக்குகின்றது. பாழடைந்த வீட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் The Haunting (1963) மிக முக்கியமானது. அதன் ஒளிப்பதிவு அந்த பங்களாவிற்கு உயிர் கொடுப்பதாக அமைக்கப்பட்டிருக்கும். அந்தவகையான ஒளிப்பதிவை இப்படத்தில் பல இடங்களில் பார்க்கலாம்.

ஒரு குறிப்பிட்ட ஐடியாவை நோக்கிய எதிர்ப்பார்ப்புடன் கதையை நகர்த்திவிட்டு, பின் அதற்கு பொறுத்தமில்லாத முடிவை காட்டியமை, முக்கிய பாத்திரம் தவிர்த்து ஏனைய பாத்திரங்களுக்கு முக்கியத்துமளிக்காமை காரணங்கள் இப்படத்தைப் பற்றிய மதிப்பிட்டில் குறையை ஏற்படுத்துகின்றது.

இன்னும் சில ஹாரர் படங்களுடன் சமகால ஹாரர் பற்றி அலசுவோம்!

வர்றேன்!

Advertisements

4 comments

    • குட்நைட் மம்மி பார்த்திருக்கின்றேன். ஹாரர் படம் போன்ற பிம்பத்துடன் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். இருந்தும் நன்றாக எடுத்திருந்தார்கள். இந்த படம் பற்றி எழுதவில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s