ஆஷ் Vs. இவில் டெட்: மரண பங்கம்

header-bruce-campbell-and-fede-alvarez-discuss-evil-dead-sequels

மாலை சூரியன் மறைந்துவிட்டதா என்று கூட தெரியவில்லை நான்கு பக்கமும் விறகு கட்டைகளும், மரங்களும் சூழ்ந்திருந்தது. ஒரு சிறிய வீடு. அதற்குப் பக்கத்தில் ஒரு பெரிய தேயிலை பெக்டரி. எந்த சத்தமும் இல்லை. இருள் சூழ நான்கு பேர் அந்த சிறிய வீட்டிற்குள் கதைத்துக் கொண்டிருந்தார்கள். சமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட டின் மீனுக்கு பக்கத்தில் பான் (ப்ரெட்) இருந்தது. அதற்கும் பக்கத்தில் இரண்டு கேஸட்கள். ஒன்று நகைச்சுவைத் திரைப்படமும், ஒரு ஹாரர் திரைப்படமும் இருந்தது. இவில் டெட்.

பேய்க்காற்றும், மயான அமைதியும் மிக்ஸ் ஆகி குளிரை வரவழைத்தது. “என்ன கூதல்டாப்பா…” என்று இம்ரான் சொல்லிக் கொண்டே டின் மீனை உடைத்து சட்டியில் போட்டான். குளிருக்கு ஏற்றாற் போல் காரத்தை சற்று அதிகமாகவே போட்டான். பாடசாலை யுனிபோர்மை தவிர வேறெந்த உடையும் இருக்கவில்லை. ஜிம்முக்கு செல்லும் வழியில் திடிர் விஜயம் ஏற்பட்டதால் வந்த வினையிது. எஸ்டேட் பகுதி, தேயிலை உயர்ந்து மலையாகி இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் மீதி மூன்று பேரும் சமைப்பதையே பார்த்துக் கொண்டிருந்தனர். யாரையும் தனியாக விட்டு விட்டு போக மனமில்லை (என்பதை விட பயம் என்பதே கரக்ட்டாக இருக்கும்). சமைத்து – உண்டு – பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு, ப்ளேன்டி கப்களுடன் டீவிக்கு முன்னால் வந்து உட்கார்ந்தார்கள். நான்கு பேரும். வழக்கம் போல் அது நள்ளிரவுக்கு அண்மித்த நேரமாக இருந்தது.

வீராப்புடன் இவில் டெட் பார்ப்பதற்கு ஆயத்தமாயினர். படம் ஆரம்பித்தது. நிமிடங்கள் சில்லிடும் இசையுடன் கடக்க, குளர் காற்றும் விறகும் சேர்ந்து விநோத சப்தங்களை எழுப்ப ஆரம்பிக்க “மச்சான் மத்த படத்தையே பார்ப்போம்டா…” கடைசியில் அந்த காமடிப் படத்தையே பார்க்க வேண்டியதாயிற்றது.

மேலே சொன்னது ஒரு உண்மை சம்பவம். என் வாழ்வில் நடந்த மறக்க முடியாத நிகழ்வொன்று. பாடசாலை நாளொன்றில் நடந்தது. அதற்கு பல வருடங்களுக்கு முன்னரே இவில் டெட் வந்து, நானும் பார்த்துவிட்டிருந்தேன். ஆனால், நண்பர்கள் யாரும் அதனை பார்த்திருக்கவில்லை. மேற்சொன்ன ஒரு உதாரணமே போதும் இவில் டெட் எந்தளவுக்கு திகிலை உண்டாக்கியிருக்க வேண்டுமென்று. அதற்கு முன்னரும், பின்னரும் நிறைய பேய் படங்கள் வந்திருந்தாலும் இவில் டெட் ஏற்படுத்திய திகில் அலை தனித்துவமானது. இப்பொழுது பார்க்கும் போது சிலவேளை சிரிப்பு வரலாம். ஆனால் 2000 ஆண்டு மூளையை கழற்றிவிட்டு 80களின் மூளையை போட்டுப் பார்த்தால் இன்றும் ரசிக்கக் கூடிய திரைப்படமே இவில் டெட்.

Evil_dead_ver1

நான் எப்பொழுதும் சொல்லிவரும் விடயம், 80களின் திரைப்படங்கில் இருந்ததைப் போன்ற செறிவு இப்பொழுது வரும் திரைப்படங்களில் இல்லை என்பதே. 80களின் படங்களில் இருக்கும் டீடைல்ஸ், திரைக்கதை, ப்ரக்டிகல் எஃபெக்ட்ஸ் போன்றவற்றின் அருகில் கூட இன்றை சீஜி – டெம்ளேட் திரைப்படங்களால் நெருங்க முடியாது என்பதே உண்மை. நாம் என்னதான் சீஜி மாயையை விதந்தோதினாலும் அன்றைய ப்ரக்டிகல் எஃபெட்ஸுடன் ஒப்பிடும் போது சீஜி இன்னும் சாதிக்கவில்லை என்றே தோன்றுகின்றது. ஜோர்ஜ் மில்லர் போன்ற இயக்குனர்கள் இன்றும் ப்ரக்டிகல் எஃபெக்ட்ஸையே தங்கள் திரைப்படங்களுக்கு பாவிக்கின்றார்கள்.

இவில் டெட் சாம் ரைமி முழுக்க முழுக்க உண்மையான காட்டில் (ஹாலிவூட் செட் இல்லாத) எடுத்தார். “நடுகாட்டில் ஒற்றை கேபின்…” படங்களுக்கு முன்னோடி இந்த இவில் டெட் என்று சொல்லாம்.  Within the Woods என்ற குறும்படத்தை எடுத்து அதை தயாரிப்பாளர்களுக்கு போட்டுக் காட்டி முழுநீள படத்திற்கான தயாரிப்பாளர்களை திரட்டினார். அதில் முக்கியமானவர்தான் Bruce Campbell. இன்றுவரை அந்த ஜோடி இணைந்து திரையில் வேலைசெய்து கொண்டுதான் இருக்கின்றது. இவில் டெட் படத்தின் ஹீரோவும் அவரே.

ப்ரூஸ் கெம்பல் நடித்த ஆஷ் பாத்திரம் இன்று ஒரு கல்ட் பாத்திரமாக மாறியிருக்கின்றது. ஆஷ் பாத்திரம் மூன்று இவில் டெட் படங்களில் வந்திருக்கின்றது. இவில் டெட், இவில் டெட் 2 மற்றும் இவில் டெட் – ஆர்மி ஆஃப் டார்க்னஸ் இம்மூன்று படங்களிலும் ஒற்றைக் கையுடனும், பகிடியுடனும் அன்டர்வேர்ல்ட் பேய்களை துவம்சம் செய்யும் ஆஷ் 80களின் ரசிகர்களுக்கு ஒரு கல்ட் பாத்திரமாகியதில் ஆச்சரியமேதுமில்லை. இந்த ப்ரன்சைஸ்யை வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட சீரிஸ்தான் Ash vs. Evil Dead. ஆஷ் வில்லியம்ஸ் அதே ஒற்றைக் கை, அதே ப்ளு கலர் ஷர்ட், அதே மரம் வெட்டும் chainsaw, அதே மொக்க பகிடி, ப்ளஸ் ஒட்ட இயலா 80களின் நாயகத் தன்மை இணைந்து அட்டகாசமான சீரிஸாக இது அமைந்திருக்கின்றது.

NEGKuZUaIUUxLI_2_b

ஆஷ் வில்லியம்ஸின் பாத்திரம்தான் இதில் முக்கியமானதாக இருக்கின்றது. மேற்சொன்ன தன்மைகளுடன் 80களில் தங்கிவிட்ட அவன் மூளை, புத்திசாலித்தனமில்லாத ஹிரோ – எந்த இடத்திலும் சமகால ஹிரோக்கள் போல் அதி புத்திசாலித்தனமாக இயங்கி பேய்களை வெல்வதில்லை – அவரேஜ் அறிவு, யாரையும் பொருட்டாக கருதாது, மதிக்காது நக்கலடிப்பது என்று ஹிரோயிசமில்லாத் தன்மையுடன் ஒரு ஹிரோ என்று அமைக்கப்பட்டிருக்கின்றது ஆஷின் பாத்திரம். பத்து எபிசோட்கள் கொண்ட இந்த சீரீஸின் கடைசி எபிசோட் உச்சம்.

இந்த சீரீஸ் ஏனைய சீரீஸ்களை விட சிறப்பாக இருப்பதற்குக் காரணம், அதன் ஒரிஜினலிட்டி (அதாவது 80களின் இவில் டெடின் “ஆன்மாவை” அப்படியே கொண்டுவந்திருப்பது), ப்ரக்டிகல் எஃபெக்ட்ஸ், gory காட்சிகள், புத்திசாலித்தனமில்லாத ஹிரோவை வைத்துக் கொண்டு ஒரு புத்திசாலித்தனமான சீரீஸை எடுத்திருப்பது. இந்த சீரீஸை பார்க்கும் போது அப்படியே 80களின் திகில் திரையுலகம் கண் முன்னால் வருகின்றது. ஹம்மர் ஹாரர் படங்களின் பாதிப்பு, urban ஹாரர், சீரியஸும் பகிடியும் கலந்த பேய்கள் – இப்படியிருந்தும் பயம் வரும் சந்தர்ப்பங்கள் அதிகமிருப்பது இன்னொரு பலம் – என்று சீரீஸ் அட்டகாசமாக இருக்கின்றது.

ஒவ்வொரு எபிசோடிலும் ஆஷ் அடிக்கும் லூட்டியான கமண்ட்கள் உண்மையில் ப்ரூஸ் கெம்பல் போகிற போக்கில் அடித்துவிடுவதுதான். ப்ரூஸ் தன்னை ஆஷ் ஆகவே நினைத்துக்கொண்டிருப்பார் போலும். வசனங்கள் சும்மா அப்படி இருக்கும். முதல் எபிசோடில் இருந்தே வசனங்களை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துவிட்டேன்.

Ash-vs-Evil-Dead-Key-Art-700

நீங்கள் 80களின் ஹாரர் திரைப்பட ரசிகராக இருந்தால் இந்த சீரீஸ் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். ரியலிட்டிதான் வேண்டுமென்றால் எட்டிப் பார்க்காமல் ஓடிவிடவும். முக்கியமாக கேர்ள் ப்ரெண்டுடன் பார்க்கவே கூடாத ஏரியா, அப்படி இப்படியொன்றுமில்லை “தலை துண்டுகளாக சிதறுதல், நாக்கு நீளுதல், இரண்டு கூறுகளாக உடல் பிரிக்கப்படுதல், பார்ட் பார்ட்டாக பாடி பார்ட்ஸ் சிதறி விழல், இன்னும் வாய்க்குள் இருந்து டன் கணக்கில் இரத்தம் மற்றும் திரவங்கள் வெளியாகுதல் கூடவே வாயிலிருந்து பேய் ஒன்றும் வருதல் இன்னும் பல தல்கள்” இருப்பதால் ஸ்ட்ரிக்ட்லி ஃபார் டை ஹார்ட் ப்ரக்டிகல் எஃபெக்ட் ஹாரர் ஃபேன்ஸ்.

அப்புறம் எதற்கிந்த “மரண பங்கம்” தலைப்பென்று நீங்கள் கேட்கலாம்? கேட்காவிட்டாலும் பரவாயில்லை. சத்தியமாக நேற்று இந்தக் கட்டுரையை எழுத நினைத்த போது சற்றென்று மண்டைக்குள் உதித்தது. அதையே இங்கு பயன்படுத்திக் கொண்டேன். By the way… I’m back.

Advertisements

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s