The Martian

VqPgljS

மிகவும் சொற்ப இயக்குனர்களுக்கு மாத்திரமே வாய்க்கும் ஒன்று, எந்த வயதில் இருந்தாலும், காலம் எவ்வளவுதான் (மொக்கையாக) மாறியிருந்தாலும் குறிப்பிட்ட இயக்குனரின் படைப்பொன்று வெளிவரவிருக்கின்றது என்றால் கொண்டாட்டமாயிருக்கும். அதில் முக்கியமான ஒருவர் ரிட்லி ஸ்காட். ஏலியன், ப்ளேட் ரன்னர் போன்ற அற்புதங்களைக் கொடுத்த இயக்குனர். அறிவியல் புனைவு படங்கள் என்றால் இவருக்கு குஷியாகிவிடும். இவரெடுத்த படங்களில் அதிகம் பேசப்பட்டிருப்பது இந்த வகையறாவே. பிற கலைஞர்களை (கலைகளை) தன் படைப்புகளுக்கு கச்சிதமாக பாவித்திருப்பார் ஸ்காட்.. ஏலியனில் ப்ரொடக்சன் டிசைன், ஏலியன் க்ரீச்சர், இசை எல்லாம் விண்வெளித் தனிமையில் நம்மை உறைய வைக்க பயன்படுத்தியிருப்பார். படம் ரிலீஸான போது தியேட்டரை விட்டு நிறைய பேர் ஓடி வந்த கதையெல்லாம் இருக்கின்றது.

உலகில் வெளியான அனைத்து அறிவியல் புனைவு படங்களை வைத்து ஒரு தரப்படுத்தலை செய்தால் அதில் கண்டிப்பாக ப்ளேட் ரன்னரும், ஏலியனும் அடங்கும். முதலிரண்டு இடங்களையும் ப்ரிட்ஸ் லாங்கின் மெட்ரோபொலிஸ் மற்றும் க்யூப்ரிக்கின் 2001 பிடித்துக்கொள்ளும். மேற்சொன்ன படங்களில் மிகப் பிரதான பாத்திரத்தை செட் டிசைன் (Production Design) எடுத்திருக்கும். விண்வெளி ஓடங்கள், ஏலியன் architecture, எதிர்கால கட்டிங்கள், வாகனங்கள் என்று அனைத்தும் மிக நுணுக்கமாக செய்யப்பட்டிருக்கும். பல அற்புதமான Production Designers இருக்கின்றார்கள், ஆனால் அவர்களின் கலையாற்றலை சரியாக பயன்படுத்தத் தெரிந்த இயக்குனர்கள் வெகுசிலரே.

Martian படமும் விண்வெளி – அறிவியல் புனைவு சார்ந்ததொரு கதையைக் கொண்டது. இம்முறை ஏலியன் போன் அதி-அறிவியல் புனைவு அல்லாமல், சமகால விண்வெளி பயண அறிவியலுக்கு மிகவும் (கவனிக்க “மிகவும்”) நெருக்கமான கதையைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கின்றது. ஏலியன்-டெக் architecture அல்லாமல் நிஜ நாசா விண் ஓடங்கள் மற்றும் இதர “பாகங்க”ளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றது இதன் செட்கள். அதாவது நிஜ (அறிவியல்) உலகிற்கு நெருக்கமான production design. மிகவும் தத்ரூபமான அமைப்புகள். விண்வெளி “மெகா” அறிவியல் புனைவுப் படங்களுக்கு இம்மாதிரியான production designகள் கட்டாயம். ஆனாலும் ஏலியன் படமெடுக்கும் போது குறைந்தளவான பட்ஜெட்டே ஸ்காட்டுக்கு இருந்தது. ஸ்டார் வார்ஸ் படத்தின் பெறு வெற்றியின் பிறகே கம்பனிகள் தயங்காமல் விண்வெளி படங்களுக்கு பணத்தை கொட்டோ கொட்டென்று கொட்டியது. (அதில் முக்கால்வாசிக்கும் மேல் மொக்கை) 70களில் அதிகம் விண்வெளிப் படங்கள் வந்திருப்பதின் ரகசியம் இதுதான். (இப்பொழுது சூப்பர்ஹிரோ படங்கள் வருவது போல்.)

எதுக்கு production design பற்றி சொல்லிக்கொண்டுப் போகிறேன்? The Martian படம் Mark Watneyயை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கின்றது. செவ்வாயில் இறந்துவிட்டான் என்று கருதி தனித்துவிடப்பட்ட Watney எவ்வாறு மீட்பு வரும்வரை உயிர்வாழ்கின்றான் என்பதே கதை. அதுவும் குறிப்பிட்ட கால அளவுக்கான வாழ்வாதாரங்களை மாத்திரம் கொண்டு. இன்னொரு வகையில் விண்வெளியின் ராபின்சன் க்ரூசோ. அவ்வளவு பெரிய கிரகத்தின் மொத்த சனத்தொகையே 1. வாழ்வாதரமாக அவனுக்கிருப்பது நம்பிக்கை மற்றும் பகிடி. படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவிடயம் பகிடிதான். பகிடியால்தான் அந்த நான்கு வருடத்தையும் கடந்து போகிறான். பூமியுடன் தொடர்புகொள்ள முடியமான பின்னர் அடிக்கும் சில அரசியல் பகிடிகள் ஸ்காட் டச். நாசாவின் பெயரால் செய்யப்படும் அபத்த நாடகங்களும் இதில் மெலிதாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. ஒருவனை மீட்க மில்லின் டாலர்களில் செலவளிக்கும் அமெரிக்காதான் உலகெங்கும் லட்சக்கணக்கான உயிர்களை கொன்றுகுவிக்கின்றது. என்னவொரு நகைமுரண்? படத்தில் பிரதான பிரச்சினை காலம்தன். நீண்டதொரு காலம் செல்கின்றது எனும் உணர்வை நம்மால் உணர முடிவதில்லை.

இவ்வாறன ஒரு நிலைமையில் ஒரு மனிதனிடத்தில் பரிணமிக்கும் விரக்தி, இயலாமை, நம்பிக்கையின்மை… இல்லை, போராட்டம், விடாமுயற்சி, நம்பிக்கை, எதிர்பார்ப்பு, தன்னைத் தானே ஆசுவசப்படுத்திக் கொள்ளும் சுய பகிடி போன்றவைதான் பரிணமிக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s