Turbo Kid (2015)

turbo_kid_xlg

Mad Max, Robert Rodriguez படங்களை பிடிக்குமா? அல்லது Escape From New York, Blade Runner, Dead Snow என்று அடிக்கிக் கொண்டே போகக்கூடிய வகையறாக்களுக்குள் அடக்க முடியாத இன்னும் சொல்லமுடியாத தாறுமாறு தக்காளி சோறு உடல்கள் சிதறும், கை துண்டாக்கப்பட்டு இயந்திரக் கை பொறுத்தப்படும், இருக்கிற நல்ல கார்களை ஊத்தைப் பையனாக்கி தலைதெறிக்க ஓடும் படங்களை பிடிக்குமா? எப்படிச் சொல்வது இந்த வகைப் படங்களை Rusty Bucket Movies என்று நான் இவற்றை அழைப்பதுண்டு. ஜோர்ஜ் மில்லரின் Mad Max படத்தையும், அதன் தன்மையையும் வார்த்தைகளால் விவரிக்க முடிந்தால் (முக்கியமாக தமிழில்) அந்த விவரிப்பே இந்த வகைப் படங்களின் வரைவிலக்கணம். கொய்யால.

Turbo Kid – post apocalyptic காலக்கட்டத்தில் நடக்கும் கதை. ஒரு மாறுதலுக்கு 1997இல் கதை நடக்கின்றது. பழைய post apocalyptic திரைப்படங்களின் பாதிப்பில் – நாஸ்டல்ஜியா உணர்வுடன் எடுக்கப்பட்டிருக்கின்றது இத்திரைப்படம். வெஸ்டர்ன் திரைப்படங்களில் வரும் lone gunman, bounty hunter, பழைய விஞ்ஞானப் புனைவு திரைப்படங்கள் என்று அடுக்கிக் கொண்டே செல்லும் அளவுக்கு tributeகள் நிறைந்திருக்கின்றது இப்படத்தில். இப்பொழுது வரும் திரைப்படங்கள் அதிகம் CGஐ நம்பித்தான் வருகின்றது, practical effectsஐ யாரும் கணக்கில் எடுப்பதில்லை. ஒருசில இயக்குனர்களைத் தவிர… கியர்மோ டெல் டோரோ, டாரன்டீனோ, ரொட்ரிக்யூஸ், ஜோர்ஜ் மில்லர், டெர்ரி கில்யம் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களே இதில் இன்னும் நாட்டம் கொண்டிருக்கின்றனர்.

படத்தின் கதை நியூக்லியர் யுத்தத்தால் அழிவுக்குள்ளான உலகில் நடக்கின்றது. இம்மாதிரியான படங்கள் எல்லாம் கிட்டத்தட்ட மனித மிருகங்களின் யுத்த அழிவின் பின்னர் உள்ள காலக்கட்டத்தைத்தான் குறிப்பதாக இருக்கும். மேட் மெக் கதையும் அப்படித்தான். இது பெரும் அரசியல் விமர்சனங்களைக் கொண்டதொரு திரைப்பட வகையறா… என்ன இருட்டு அறை ரியலிஸ சினிமாக்கள் போன்றல்லாது மெய்ன்ஸ்ட்ரீம் சினிமாவில் இருந்தே இவை விமர்சனங்களை முன்வைக்கும்.

அணுயுத்த அழிவின் பின்னுள்ள ஒரு சிறுவன் தனியே வாழ்கிறான். காமிக்ஸ் என்றால் அவனுக்கு பிரியம். அதிலும் Turbo Rider எனும் காமிக்ஸ் பாத்திரமாகவே அவனை கற்பிதம் செய்துகொள்கிறான். மனித ரோபோக்களும் (டேமினேட்டர், ஏலியன் படங்களில் வரும் ஹியுமனாய்ட்கள்) மாசுபட்ட சூழலும், மனித மற்றும் இதர உயிரிகளின் ஆரதமான் நீரும் அற்ற சூழலில் ஒரு மனிதன் நீரை ஆயுதமாக வைத்து அந்த உலகை ஆள்கிறான். இவனுக்கும் எதிர்தரப்பு போராளிகளுக்கும் கதையில் இந்தச் சிறுவன் மாட்டிக்கொள்கிறான். போராட்டத்தின் வெற்றி எவ்வாறு அமைகின்றது என்பதே கதை. சிம்பிளான கதை. (மேட் மெக்ஸ் கதையும் இதுவே என்ன வித்தியாசம் அதில் கார் சேஸ், இதில் சைக்கிள் சேஸ்)

பல விருதுகளை இத்திரைப்படம் வென்றிருக்கின்றது. நான் மேலே குறிப்பிட்ட படங்கள் பிடிக்கும் என்றால் இத்திரைப்படமும் உங்களுக்குப் பிடிக்கும். சுவாரஷ்யமான ஒரு திரைப்படம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s