மாயா

1434617862_nayantharas-maya-first-look-posters

பேயெழுத்தில் எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஓலம் (அலப்பறை) தமிழில் குறிப்பிட்டு சொல்லத்தக்க ஒரு திகில் சினிமா இல்லை என்பதுதான். யாவரும் நலம், டிமான்டே காலனி இப்பொழுது மாயா, இம்மூன்றையும் முக்கியமான தமிழ் திகில் (அல்லது ஹாரர்) சினிமாக்கள் என்று கூறலாம். தமிழில் இதுவரை வந்த ஹாரர் சினிமாக்களில் எப்பொழுது அந்நிய ஆதிக்கம் இருக்கும். மேலே குறிப்பிட்ட படங்களிலும் அவை இல்லாமல் இல்லை. மூன்று படங்களும் தமிழ் நிலத்திற்கு அந்நியமான கதையம்சம் என்றாலும், முதலாளித்துவ விகிதாசார கணக்குப்படி 80 வீதத்திற்கும் மேல் தமிழ் நிலத்திற்கு பொருந்திப் போகின்றது. யாவரும் நலம் டீவி, டிமான்டே காலனி வெள்ளைக்கார அதிகாரி, மாயாவில் அசைலம் இந்த விடயங்களை நாம் அடிக்கடி வேற்று மொழி படங்களில் காணக்கூடியதாக இருக்கும். இருந்தும் இம்மூன்று படங்களின் வெற்றிக்கு காரணம் அதன் கதையும், கதைதரும் அனுபவமும் தமிழ் நிலத்திற்கு நெருக்கமாக இருப்பதே. (பிசாசை சேர்க்கவில்லை, அது ஹாரர் வகையறாவில் அடங்காது)

மாயா நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த ஒரு நல்ல திகில் சினிமா. ஹாரர் சினிமாவில் இரண்டு வகையிருக்கின்றது. ஒன்று அதன் முக்கிய நோக்கமான குறைந்த செலவில் பயத்தைக் கொடுப்பது, இரண்டாவது ஹாரரின் அழகியலை பேசும் படைப்புகள். இரண்டாம் வகையறாவில் பிசாசை வைக்கலாம். மாயா ஹாரரின் core அம்சமான பயத்தை முன்வைத்தே நகர்த்தப்பட்டிருக்கின்றது. அதில் வெற்றியும் கண்டிருக்கின்றது. ஒரு சீரியஸான ஹாரர் சினிமா. யாமிருக்க பயமே, அரண்மனை போன்ற காமடி ஹாரர்களுகளிருந்து பெரியதொரு ரிலீஃப்.

ஹாரர் சினிமாவிற்கு ஏற்ற கதைக்களம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான அசைலம். அதிலும் சட்ட – மனித விரோத ஆய்வுகள், குரூர செயல்கள், மர்மமாக காணாமல் போகும் நோயாளிகள், மர்மமான வனம் என்று சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு மாயாவில் ஹாரர் flavors சேர்த்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் விட முக்கியமான அம்சம் புனைவா – நிஜமா என்று பார்வையாளர்களை இன்னும் பயத்தில் ஈர்த்து கதையை கொண்டு சென்றிருப்பது. திரைப்படத்திற்குள் திரைப்படம் ஒரு திகில் திரைப்படத்திற்கு முக்கியமான உத்தி. பல திரைப்படங்கள் இந்த உத்தியில் வெளிவந்திருக்கின்றது. பழைய க்ளாசிக் ஹாரர் திரைப்படங்கள் பலவற்றை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். The Shadow of the Vampire படம் இதற்கொரு உதாணரம்.

மாயாவின் பிரச்சினையும் பலமும் சப்தம்தான். திடுக்கிடும் தருணங்கள் கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை சாதாரண காட்சிகளுக்கு எமோஷனல் இசை வழங்கப்பட்டிருப்பது அவ்வளவு பொறுத்தமாக இல்லை. இசையின்றியே நகர்த்த முடியுமான காட்சிகள் நிறையவே இருந்தாலும் அவற்றிற்கு இசை வழங்கப்பட்டிருப்பது படத்தின் பெரிய பலவீனம். குறைந்தளவான விசுவல் எபெஃக்ட் காட்சிகளும், குறைந்தளவிலான explanations உம் உண்மையில் பாரட்டத்தக்க அம்சம்.

மிக எளிதான கதையை கதைக்குள் கதை என்கிற உத்தியில் சிக்கலான கதையமைப்பிற்குள் கொண்டு வந்து சஸ்பென்ஸ் வைக்கப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், பலவிடயங்களை எளிதாக ஊகித்துக்கொள்ள முடிகிறது. அது பெரிய பிரச்சினையாகப்படவில்லை என்றாலும் தவிர்த்திருக்க முயற்சித்திருக்கலாம்.

ஆங்கில ஹாரர் படங்கள் அங்குள்ள ஆடியன்ஸை பயத்தில் ஆழ்த்தி வெற்றிநடை போட்டிருக்கும். தியேட்டரை விட்டே வெளியே ஓடியிருப்பார்கள். ஆனால் அதே படத்தை நாம் பார்க்கும் போது, “மச்சான் என்னடா பயமே இல்ல…” என்றாகிவிடுகிறது. இதற்கு என்ன காரணம்? சிம்பிள். அமெரிக்கக்காரர்களை விட பயந்தாங்கொள்ளிகள் இந்த உலகத்தில் எங்கும் இருக்க முடியாது. இன்னும் தாங்கள் எந்தநேரத்திலும் பேய்பிடிக்கப்படலாம், ஏலியன்களால் கடத்தப்படலாம் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருப்பவர்கள். (கொசுரு பந்தி)

மாயா பலங்கள், பலவீனங்கள் கடந்து முக்கியமான தமிழ் திகில் சினிமாவாக இருக்கும். அது மட்டும் நிச்சயம்.

Advertisements

One comment

  1. மும்பையில் சினிமா தியேட்டரில் பார்க்க ஆசை… ஆனால் இங்கு ரிலீஸ் ஆகவில்லை… laptopஇல் பார்க்கக் கூடிய படமும் அல்ல இது… ஹ்ம்ம்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s