பொடி அப்புஹாமி (Re-Mastered Edition)

154

பலர் பொடி அப்புஹாமி அநியாயமாக இறந்து போனது குறித்து என்னிடம் விசனப் பட்டுக்கொண்டனர். பொடி அப்புஹாமியின் கதையை மீள்பரிசீலனைக்குட்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கின்றேன். மீள்புனைவாக்கம் என்பது இலக்கிய உலகில் புதிதல்லவே. ஆனபடியால், இதோ பொடி அப்புஹாமியின் புதுப்பிக்கப்பட்ட கதை.

பொடி அப்புஹாமி (Re-Mastered Edition)

கள்ளம் கபடமில்லாத பொடி அப்புஹாமிக்கு மாரியம்மா மீது ஒரு கள்ளப் பார்வையிருந்தது என்னவோ உண்மைதான். எவனுக்குத் தெரியும் மாரியம்மா ஒரு மோகினி என்று. வெற்றிலை பாக்கு போட்டது போல இரத்தச் சிவப்பு நிறத்தில் அவள் வாயிருக்கும் என்று சொன்னபோதே பொடி அப்புஹாமி உஷாராகியிருக்க வேண்டும். பாவம் அவனுக்குத்தான் மூளை புத்து மண்ணால் செய்யப்பட்டிருந்ததே.

அன்றொருநாள் இரவு கடும் மழை பெய்து ஓய்ந்திருந்தது. காலனித்துவ பைன் மரங்களின் பேய்க்காற்று (பேய்க் காற்று என்றால், யாருமேயில்லாத மயான இரவில் தனியாக ஒரே ஒருவன் நடந்து செல்கையில் பைன் போன்ற மரங்கள் தாங்கி வரும் காற்று. ஏதோ ஒரு அமானுஷ்யம் ஊளையிடுவது போலிருக்கும். அலறல் என்றும் வைத்துக்கொள்ளலாம்) இரவை பயத்தில் உரைய வைத்துக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பொடி அப்புஹாமி மாத்திரம் தனியாக நடந்து கொண்டிருந்தான். அந்தக் கடுங் குளிரிலும் சாரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு, கிழிந்து போன பெனியனை மாத்திரம் அணிந்து கொண்டு சென்று கொண்டிருந்தான். குளிரும், பேய்க்காற்றும் அவனை ஒன்றும் செய்யவில்லை.

சரியாக நள்ளிரவு என்று சொல்ல அப்புஹாமியிடமோ, கதைசொல்லியிடமோ கடிகாரம் இருக்கவில்லை. (பிச்சைக்கார ஜந்துகள்) பேய்க்காற்று, கடுங்குளிர், பனிமூட்டம், ஒற்றையாய் ஒருவன், தூரத்தில் ஒரேயொரு வெளிச்சம் இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், அது நள்ளிரவாகத்தான் இருக்க வேண்டும்.

சரி, யாருமற்ற வெளியில் தனித்த பயணியாய், சீமைப் புல் ஒற்றையடிப் பாதை வழி (அப்பாதையை இரவில் யாரும் உபயோகிப்பதில்லை) நடந்து சென்று கொண்டிருந்த அப்புஹாமியை ஒரு உருவம் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

சரக் சரக்.

சத்தத்தில் அப்புஹாமி உரைந்து போய் நின்றுவிட்டான்.

மெல்ல மெல்ல அவ்வுருவம் அவனை அண்மித்தது. திரும்பி பார்க்கவும் மனமில்லை. அட்டையாய் அப்பிக் கொண்டிருந்த பீதியை எடுத்துப் போடவும் அவனுக்கு நேரமிருக்கவில்லை. நொடிப்பொழுதில் அவனைக கடந்தது உருவம். அட, ஊரு ஆரச்சி மஹத்தியா!

இந்த நேரத்தில் கிராம சேவகருக்கு என்ன வேலை? குட்டியாய் ஒரு மரியாதை சிரிப்பொன்றை வைத்தான் அப்புஹாமி. அவர் கணக்கெடுக்காமல் சர சரவென்று இருட்டில் மறைந்தார். பெரிய மனிதர்களுக்கு கொஞ்சமாலும் அப்புஹாமி போன்றவர்களை மதிக்கத் தெரியாது. இவன் பல்லில்லாத புத்துமண் என்பதால் அதையெல்லாம் ஒரு பொருட்டாய் கருதவில்லை.

ஊரின் ஒதுக்குப்புறமும் வந்தது. மாரியம்மா வருகைக்காக காத்துக்கிடந்தான் அப்புஹாமி.

நேரம் சென்றது. வழக்கம் போல பசி. ஒவ்வொரு பெடிஸாக விழுங்கிக் கொண்டிருந்தான். பசியாறவில்லை. கடைசி பெடிஸும் வந்தது. சரி ஒன்றை மாத்திரம் மாரியம்மாவுக்கு கொடுத்து என்ன பிரயோசனம். அதையும் விழுங்கினான்.

திடிரென்று சர்வ சிவப்பு லட்சணமும் (இரத்த நிறத்தில் வெல்வெட் சாரி, சிவப்பு லிப்ஸ்ட்டிக், செவ்வரத்தைப் பூ, அப்பொழுதுதான் குடித்த மனித இரத்தத்தின் மீதி) பொருந்திய மாரியம்மா அவன் முன்னால் தோன்றினாள். முகத்தில் பேய்க் கோபம். (பேய்க்கு பேய்க் கோபம் வராமல் வேறு என்ன வரும்?)

பல்லை இளித்தான். ஹீ. பெடிஸ் எல்லாம் காலி என்று அறிவித்தது ஓட்டை பல்.

“உனக்கு செத்தும் புத்தி வரல்ல மாடு.”

வேறு வழியின்றி அப்புஹாமியின் ஆவியும், மாரியம்மாவும் டுயட் பாட வேண்டிய நிலை வந்தது.

நள்ளிரவுகள்

Advertisements

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s