கண்டி வீரன் யாழ் பயணம்: The Peacock Journey 03

11212665_10200685378933170_1794984003175386671_o

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

03

யாழின் இரவுகளைப் பற்றிச் சொல்லாமல் போனால் பேயெழுத்துக்கு அவப்பெயர் வந்துவிடும். கடைசியில் நான் வைத்த பில்லி சூனியம் எனக்கே ரிவீட் அடிக்கும்.

இரவுகள் எப்பொழுதும் அற்புதமானவை. (நீயென்ன பெரிய எஸ்.ராவா…?) எனது சிறியவயதில், பதின்பருவத்தில் எல்லாம் இரவுகளை மின்மினி போல பறந்து களித்திருக்கின்றேன். மழைக்காலத்தை எதிர்வு கூறும் புற்றீசல்கள் எப்படி சாரை சாரையாக வருமோ, அப்படித்தான் எங்கள் ஊரின் மூலை முடுக்கெங்கிலுமிருந்தும் ரமழான் நோன்பு காலத்தி வெளிக்கிடுவோம். இரவுகளை கொண்டாட. புற்றீசல்கள் எப்படி வீட்டில் உள்ளவர்களுக்கு எரிச்சலூட்டுமோ… அவ்வாறே நாங்களும் “…இந்த கலுசரகள். நோன்பு தோங்கின ஒடனே கௌம்பிடுவானுவல். ஷெய்த்தான் குட்டிகள்…” என்ற “உவமையை” உண்மையாக்குவோம். அப்படியான ராப்பொழுதுகளின் அனுபவங்களை யாழ் இரவுகள் மீட்டியது.

ஆரவாரமில்லாத இருள் சூழ்ந்த ஒற்றையடி மணற்பாதையில் நாங்கள் நடக்கும் போது ஏற்படும் சலசலப்பு பின்னணி இசையின்றியே மயான பயத்தை ஏற்படுத்தியது. யுத்தத்தில் மாண்டவர்கள் நிறைந்த பூமியல்லவா அது. பொதுவாக கிராமப்புறங்கள், நகரை அண்மித்த கிராமங்களில் இரவு நிகழ்வுகள் அவற்றின் மூன்றாவது மணித்தியாலத்தில் ராக்கதைகளுக்கு இட்டுச் செல்லும். எங்கள் பகுதியில் இரவு வேளையில் மைய்யத் விழுந்துவிட்டால், ராக்கதைகள் பேய்க்கதைகளாக மாறிவிடும். விடிய விடிய மரத்துக்கடியில், குட்டிச் சுவரில், நடுத்தெருவில் உட்கார்ந்து கதையாடிக் கொண்டிருப்போம்.

பளையில் முதல் நாள் இரவு சாப்பாட்டுக்கு கொத்து தின்ன அழைத்துச் சென்றான் சஞ்சீகன். அதாவது நாங்கள் கொத்தே தின்டில்லை என்பது போன்ற ஒரு நினைப்பில். அதுவொரு ரெஸ்டாரன்ட். இந்த லோக்கல் பிரியாணிய டிம் லைட்டில் போட்டு கொடுப்பாங்களே அந்த கடை. ஆங். போய் உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் கொத்தடிக்கும் சத்தமே வரவில்லை. கொத்து ஒரு இசையுணவு. இசையுடன் அமர்ந்து ரசித்து உண்ணும் உணவல்ல அது. தன்னியல்பிலேயே இசையைக் கொண்டிருக்கும் உணவு. “குரோம் பேட்ட, சைதா பேட்ட பேட்ட ராப்” ரகமது. கொத்து சாப்பிடும் போது கொத்தும் இசை கேட்காவிடில் அது கொத்து அல்ல என்று போதி தர்மர் கல்லறையில் பதியப்பட்டிருக்கின்றது. “ஞானப்பழமே.”

என் நினைப்பு பிழைக்கவில்லை. கொத்து போதி தர்மர் சொன்னது போல் இருக்கவில்லை.

கொத்தடித்து விட்டு பளை – யாழ் ஹைவேயில் நடந்து கொண்டே வந்தோம். நான், ஷனா, சஞ்சீகன் மற்றும் நவீனன் (நகுலன் படைப்புகள் வாழும் வரை இந்த பெயர் மறக்காது.) கிராமிய மனமும், சாராய மனமும் கலந்தடிக்க நண்பர் குழவொன்றை சந்திக்க நேர்ந்தது. கள்ளம் கபடமில்லா நண்பர்கள், எம்மையும் சோமபான விருந்தோம்பலில் ஐக்கியமாகிட அழைத்தனர். நட்பார்ந்த அழைப்பாயினும் குடி, சூது தெரியாத என்னால் (ஷனாவாலும்தான்) ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் எனக்கெந்த வருத்தமும் இல்லை. என்னா லுக்கு… அதான் உண்ம, ஏன் ஊர்ல ஒரு நல்லவன் இருக்கப்படாதா? போங்கய்யா போய் அடுத்த பந்திய படிங்க. நம்பமாட்டாங்ளாம்ல.

பளை – யாழ் வீதியின் சிறு கடைகள், “மண்வாசன அருமையெல்லாம் ஒன்ன விட்டு ஓடிப் போச்சா, எப்பவும் உன் கூட வருமே… இந்த ஊரு வாசனதான்டா” தினேஷ் கணகரத்னம் பாடலை மீட்டியது. இலங்கையில் வெளியான சிங்கள – தமிழ் இசைப்பாடல்களில் இன்னும் காதில் ரீங்காரமிடும் பாடலது. கடையில் டீ அருந்திக் கொண்டே கதையாடினோம். இவ்விடத்தில் ஒரு பிராணி பற்றியும் சொல்லியாக வேண்டும். டீ மட்டுமே அருந்தி உயிர்வாழும் பிராணிதான் அது. பெயர் ஷனா!

சீரியஸாக யாழின் அனுபவங்களை பெரிய அளவில் எழுத வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். (இன்னும் முடிக்கல்லப்பா… சும்மா ஒரு இடைச்செருகல்) ஆனால், பாவிப்பய சஞ்சீகன் மற்றும் நல்லப்பையன் மதுரன் ஊரச் சுத்திக் காட்டுறேன் என்று சொல்லி, அங்கிட்டு பக்கமும் – இங்கிட்டு பக்கமும், சும்மா அப்பிடியும் – இப்பிடியும், என்று நாங்க யோசித்து முடிக்கும் முன்னரே வீட்டுக்கு கூட்டி வந்துவிட்டானுவுல். கொய்யால இருக்குடி. நீ கண்டி பக்கம் வருவதான.

மூன்றாவது நாள். (இந்த இடத்தில் ஹேன்ஸ் ஸிம்மரின் பின்னணி இசை ஆரம்பிக்கின்றது.) விடுதலைப் புலிகள் பங்கரிற்குள் முதல் நாளன்று வௌவால்களின் காரணமாக புக முடியாமல் போன கதையை அறிவீர்கள்தானே? இப்பொழுது முழு ஆயத்தத்துடன் இறங்கினோம்.

ஆபரேஷன் பேட்கேவ்:

தேவையான பொருட்கள்

1. கோணிப்பை – 4 (ஆளுக்கு ஒன்று)
2. சன்க்ளாஸ் – 4 (ஆளுக்கு ஒன்று)
3. புதர் முற் செடி – 4 (ஆளுக்கு ஒன்று)
4. தகிரியம் (தேவையான அளவு)

செய்முறை

முதலில் கோணிப்பையால் உடம்பை போர்த்தி சரியாக கண் பகுதியை குறித்துக்கொள்ள வேண்டும். பின்னர் கத்திரிக் கோலால் கண்கள் போன்று வெட்டிக் கொள்ள வேண்டும் (நீங்கள் கமல் ரசிகராக இருந்தால் ஹாலிவூட் மேக்கப் பண்ணிக்கொள்ளலாம்). கண்ணாடிகளால் கண்களை மறைத்துக் கொண்டு, முற் செடிகளை கைகளில் ஏந்திக் கொண்டு பங்கரிற்குள் செல்லவேண்டும். ஆபரேஷன் பேட்கேவ் ரெடி.

ஒரு வாசலினால் போகும் போதே வௌவால்கள் குழம்பிவிட்டன. நேராக முகத்தை நோக்கி பறந்தடித்துக் கொண்டு வந்தது. ஆனால், லோக்கல் பேட்மேன்களை கண்டதும் திக்குமுக்காடி போயிருக்க வேண்டும். ஒரே கும்மிருட்டு அதனால் அதிர்ச்சியடைந்த வௌவால்களின் முகத்தை பார்க்க முடியவில்லை. வெளியிலிருந்து பார்க்கும் போது ஒன்றுமேயில்லாத இடிபாடுகள் போல்தான் அந்த பங்கர் இருந்தது. ஆனால், உள்ளே கிட்டத்தட்ட ஒரு mini பேட்கேவ்தான். பயங்கரம். முழுக் கண்ட்ரோல் அறையும் வௌவால் மற்றும் இதர பிராணிகளின் கழிவுகளால் நிறைந்திருந்ததால் நீண்டநேரம் அங்கிருக்க முடியவில்லை. சட்டுபுட்டென்று வெளியேறினோம். அதுவொரு திகிலனுபவம். என்ன ஆதாரத்துக்கு ஒரு வீடியோவாச்சும் எடுக்க முடியவில்லை. (இவன் சொல்றது நம்பறாப்லயா இருக்கு…?)

Advertisements

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s