மீண்டும் மோகினி

Pee-Mak-Phrakanong-2013

தாய்லாந்தின் நாட்டார் கதைகளில் ஒன்றான ‘Mae Nak Phra Khanong’ மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஹாரர் – காமடி வகை படம். இந்த Mae Nak பற்றி ஏற்கனவே பேயெழுத்தில் எழுதியிருக்கின்றேன். தாய்லாந்தில் இந்த ஒரு நாட்டார் கதையை வைத்து மட்டும் 20ற்கும் மேற்பட்ட படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கறுப்பு – வெள்ளை யுகம் முதல். எங்கள் பகுதியின் மோகினி கதை போன்ற ஒன்றுதான் இது.

யுத்தத்தில் இருந்து அன்புக் கணவன் திரும்பி வருவான் என்று காத்திருக்கும் நாக். யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து தன் காதல் மனைவியிடம் திரும்புவேன் என்று தவிக்கும் மாக். இவர்களுக்கிடையில் நான்கு நண்பர்கள். ஹாரரும், அங்கதமும், மென்சோகமும் அழகாக கையாளப்பட்டிருக்கின்றது இந்த திரைப்படத்தில். Shutter படத்தை இயக்கிய Banjong Pisanthanakun (Parkpoom Wongpoom இணைந்தே  Shutter படத்தை இயக்கியிருந்தார்) தான் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். ONG-BAK படத்திற்கு பிறகு அதிக வசூலை அள்ளிக்குவித்த தாய்லாந்து படமிது. படத்தை பார்க்கும் போது தப்பில்லை என்று தோன்றியது. அந்தளவுக்கு இந்த “கலவை” கச்சிதமா சமைக்கப்பட்டிருக்கின்றது.

ஹாரர் – நகைச்சுவை இவையிரண்டும் அடிப்படையில் பிரிக்க முடியாத சினிமா உத்தி. சீரியஸ் ஹாரர் திரைப்படங்களில் பார்வையாளர்களை கொஞ்சம் ஆசுவசப்படுத்த இந்த உத்தியை கையாள்வார்கள். எப்பவும் திக் திக்கென்று இருக்க முடியாதல்லவா? கொஞ்சம் கூல் டவ்ன் ஆகுவதற்குத்தான். “நகை வரும் பின் கொலை விழும்”

இந்த படத்திற்கு தனி போஸ்ட் ஏன்? தமிழ் திகில் படங்களின் அபத்தங்களை சுட்டிக்காட்டத்தான். சமீபத்தில் தமிழில் அதிகம் திகில் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதுவும் திகில் – நகைச்சுவை படங்கள். முதலில் ஒன்றை தெளிவாக புரிந்துகொண்டு அதன்பிறகு இந்த வகையறா எந்தளவுக்கு மொண்ணைத்தனமாக தமிழில் குதறப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை பார்ப்போம்.

திகில் – நகைச்சுவை காம்பினேஷனில் படமொன்று வருமாயின் அதற்கு முன் திகிலி சினிமாக்கள் அந்த துறையில் அதிகம் வெளிவந்திருக்க வேண்டும். அப்படி எந்த முன்னுதாரணமும் இன்றி திகில் – நகைச்சுவை படங்கள் எடுத்தால் ஹாலிவூட் பேய்பட க்ளிஷேக்களை வைத்துதான் பகிடி செய்ய வேண்டியிருக்கும். 100 வருட தமிழ் திரை வரலாற்றில் இதுவரை எத்தனை பேய்ப்படங்கள் வந்திருக்கின்றன? அவற்றில் எத்தனை க்ளாசிக்? எத்தனை ரீமேக்? எத்தனை காப்பி – பேஸ்ட்? எத்தனை இம்போர்டட் சைனீஸ் ப்ரான்ட்? அப்படி எந்த முன்னுதாரணமும் இன்றி இந்த கம்பினேஷன் பொறுந்தாது. அதுதான் யாமிருக்க பயமே படத்திற்கும் நிகழ்ந்தது. (அது The Quiet Familyயின் “தழுவல்” என்பதை பிற்பாடு அறிந்துகொண்டேன்)

டார்லிங் திரைப்படம். மொக்கை. திகில் படமா? நகைச்சுவை படமா? என்ற சந்தேகம் பார்க்கும் போது அடிக்கடி எழுந்துகொண்டேயிருந்தது. பயஉணர்வை கொண்டுவரும் எந்தவிதமான சூழலும் அத்திரைப்படத்தில் கையாளப்பட்டிருக்கவில்லை. அடுத்து கடைசி காட்சியில் வரும் பேய் விரட்டும் (கோஸ்ட் கோபால் வர்மா) காட்சி அப்பட்டமாக இந்த படத்திலிருந்து (Pee Mak) காப்பியடிக்கபட்டிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் எப்பொழுதாவது நிகழும் “விபத்து” தொடர்ந்தேச்சயான முயற்சிகளால் விதியாக்கப்பட்டு நாறடிக்கப்பட்டுவிடுகிறது. பருத்துவீரன் வந்ததுதான் தாமதம் எல்லோரும் கேமராவை தூக்கிக் கொண்டு கிராமங்களுக்கு படையெடுத்து விட்டார்கள். புதுப்பேட்டை வந்தபோது… கேங்ஸ்டர் படங்கள் தாறுமாறாக எடுத்துத்தள்ளப்பட்டது. அதே நிலைதான் இந்த திகில் திரைப்படங்களுக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் திகில் படங்களை மூன்றுவிதமாக பிரிக்கலாம்,

1. அம்மன் படங்களில் வரும் பேய்படங்கள்

2. இறக்குமதி பேய்ப்படங்கள்

3. ஏனைய மொழிப்படங்களின் ரீமேக்

இதில் முதல்ரகம் ஓரளவு “ஒரிஜினாலிட்டி”யுடன் இருக்கும். ஏனையவை டங்குமாரி ஊதாரி புட்டுகின நீ நாறி. இதையும் தாண்டி யார், ஜென்ம நட்சத்திரம், 13ஆம் நம்பர் வீடு, வா அருகில் வா… என்று சிலவற்றை சொல்லலாம். ஆனால் அவற்றில் எதுவும் க்ளாசிக் இல்லை. க்ளாசிக் என்றால் இப்பொழுதும் இன்ட்ரஸ்ட்டாக பார்க்க முடியுமானது.

பேயெழுத்தில் அடிக்கடி குறிப்பிடும் ஒருவிடயத்தை இந்த இடத்தில் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன் (கறுமம்). தமிழ் நாட்டார் கதைகளில் கொஞ்சம் துலாவிப்பார்த்தாலும் ஆயிரம் பேய்கதைகளை எடுக்கலாம். ஏன், இன்னும் மோகினியை வைத்து ஒரு படமாவது வரவில்லை. (மோகினி என்ற தொன்மத்தை வைத்து)

மறுபடியும் Pee Makற்கு வருவோம். பேய்படத்திற்கான சூழல், காட்சிகள், இசை, ஒளிப்பதிவு எல்லாம் கச்சிதமாக பொறுந்திப் போகிறது இப்படத்தில். அதிலும் நகைச்சுவை காட்சிகள் பயங்கரம். ஒரு இடத்தில் “பேய்வீடு” (கார்னிவல்களில் பயமுறுத்தும் வீடுகள் இருக்குமே, அது) ஒன்றினுல் மாக் – நாக் இருவரும் செல்வார்கள். அந்த காட்சியை பார்த்துக் கொண்டு இருக்கும் நண்பர்களில் ஒருவன், “டேய் எந்த பேய்டா, பேய்வீட்ட பாக்க போகும்…?” என்பான். அந்த பேய்வீட்டினுள் பயமுறுத்த வைக்கப்பட்டிருக்கும் பேய்கள் அனைத்தும் தாய்லாந்து நாட்டார் மரபின் பேய்கள். (அதையும் கவனிக்க)

davika-hoorne-mobile-wallpapers-2

மாக் – நாக் என்ற ஒரு தொன்மத்தை வைத்தே 20ற்கும் மேற்பட்ட திரைப்படங்களை தாய்லாந்து எடுத்திருக்கின்றது. எத்தனை பேய்கதைகளை தமிழ் நாட்டார் மரபு தன்னுள் ஒளித்து வைத்திருக்கின்றது? மிடில.

Advertisements

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s