As Above So Below

ASB_31_5_Promo_4C_6F.inddHallucination – Delusion, இந்த மாயத் தோற்ற மனநிலை பிறழ்வு உளவியல் கோட்பாட்டை வைத்து எத்தனை திரைப்படங்கள் வந்திருக்கும்? ஹாரர் மற்றும் விஞ்ஞானப் புனைவுத் திரைப்படங்களில் இந்த உளவியல் பிரச்சினையை வைத்து காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அப்படி உடனடியாக ஞாகத்திற்கு வரும் திரைப்படங்கள், Pandorum, Event Horizon, Moon, In the Mouth of Madness, 2001: a Space Odyssey… ஹாரர் திரைப்படங்களில் இந்த உத்தி அதிகம் கையாளப்படுகிறது. விண்வெளி திரைப்படங்களில் அவசரத்துக்கு கைகொடுக்கும் உளவியல் பிறழ்வு நிலை இது. Gravity ஒரு உதாரணம்.

பொதுவாக தப்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் சந்தர்ப்பங்களிலேயே இந்த “மாயத் தோற்ற நிலை” உருக்கொள்கின்றன. Cube, The Cave, Decent படங்களில் எந்நிலையிலும் தப்பமுடியாது என்ற ஒரு பதட்ட நிலையில் இவ்வாறான மாயத்தோற்றங்கள் உருவாகி… பயங்கர திகில் காட்சிகளை உண்டாக்கும். The Thing படத்தில் ஒருவரை ஒருவர் மாறி மாறி பரஸ்பரம் கொன்று தள்ளுவது போல.

இது இரண்டு விதமான காரணிகளைக் கொண்டு திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று உச்சபட்ச பதட்டநிலையில் ஏற்படும் மாயத் தோற்ற நிலை (Gravity). அடுத்தது, உச்சபட்ச பதட்டம் மற்றும் உண்மையாகவே ஒரு அமானுஷ்யம் இதனை ஏற்படுத்தி, அந்த பதட்டச் சூழலில் அதன் இலக்கை நிறைவேற்றிக்கொள்வது (The Thing, Event Horrizon, Pandorum). இந்த இரண்டாவது வகையினம்தான் ஹாரர் ப்ளஸ் விஞ்ஞான புனைவுப் படங்களில் அதிகம் பாவிக்கப்படுகிறது. ஒரு அமானுஷ்ய சக்தி (As above So below), மன்ஸ்டர் (The Thing), விஞ்ஞானக் கோட்பாடு (Event Horrizon) போன்ற புறகாரணிகள் இந்த படங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

அப்படியே உளவியலில் இருந்து அறிவியலுக்கு தாவுவோம்.

Philosopher’s Stone என்று தொன்மங்களில் (Myths and Legends) ஒரு கல். இதனைத் தேடி அலையாத தொல்பொருள், வரலாற்றாய்வாளர்கள், புதையல் வேட்டையர்கள் இல்லையென்றே கூறலாம். Holy Grailஐ தேடி… அலைந்த வரலாறு போன்றது இது. அரேபிய – முஸ்லிம்கள் அறிவியலில் கோலோச்சிய காலமது. ஐரோப்பா இருண்ட யுகத்தில் இருக்க முஸ்லிம்கள் பெரும் அறிவியல் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த காலமது. இந்த ஆய்வுகளை பட்டியலிடுவது என்றால் புத்தகம்தான் போட வேண்டும். சுருக்கமாக லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலகத்தை பார்வையிடலாம். அந்த ஆய்வுகளில் ஒன்றுதான் “ரசவாதம்”. எந்தவொரு திடத்தையும் தங்கமாக மாற்ற முடியும் என்ற பண்டைய கிரேக்க – ரோம நாகரீகத்தின் அறிவியல் கோட்படை இஸ்லாமிய நாகரீகத்தின் அறிவியல் முதுசங்கள் வளர்த்தெடுத்தனர். இந்த ரசவாத அறிவியல் இஸ்லாமிய நாகரீகத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றது என்பதற்கு முதன்மைக் காரணம் யாதெனில், கிரேக்க மொழியில் பதிவு செய்யப்பட்டிருந்த தத்துவம், அறிவியல் கோட்பாடுகள் அனைத்தும் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருந்தன. அப்போதைய அரேபிய – முஸ்லிம் அறிஞர்கள் கிரேக்கத்தை படித்து அவர்களது ஆக்கங்களை, கலைகளை அரபியில் மொழியாக்கம் செய்து அக்கலைகளை வளர்த்தெடுத்தார்கள். இதுவே ரசவாதத்திற்கும் நடந்தது. ரசவாதம் குறித்து ஒவ்வொரு விடயமும், ஆய்வு முறைகளும், ஆய்வு முயற்சிகளும் இவர்களால் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதிலிருந்தே இரசாயனவியல் தோற்றம் பெற்றது. (Alchemy – Chemistry).

ரசவாதம் விஞ்ஞான ஆய்வுமுறைகளை மாத்திரம் உள்ளடக்கிய ஒன்றல்ல. அது மாந்திரீகம், ஆன்மீகம், இன்னபிற விஞ்ஞானம் புறக்கணிக்கும் “கலைகள்” போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது அது. விஞ்ஞானம் அதிலிருந்து இரசாயனவியலை மாத்திரம் பிரித்தெடுத்துவிட்டது. மர்மங்களும், புதிர்களும், அமானுஷ்யங்களும் நிறைந்த பரப்பு. இதை மையமாக வைத்து பல படங்கள் வந்துவிட்டது. As Above So Below, படமும் இந்த ரசவாத தொன்மங்களை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு தொல்பொருள் ஆய்வாளர் மற்றும் குழு லண்டனுக்கடியில் இருக்கும் Catacombs கல்லறைகளில் அலைந்து திரிந்து இந்த ரசவாதியின் கல்லைத் தேடிப் போகிறது. அங்கு நிகழும் அமானுஷ்யங்களே படம். Found footage வடிவில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் கதை The Mummy, Exorcist: the Beginning போன்ற தேடல் பாணியில் இருக்கின்றது. அதனால் found footage இற்கு இக்கதை பொறுத்தம் இல்லாமல் இருக்கின்றது. ஆனால், படத்தின் திகில் உணர்வை ஏற்படுத்த இந்த found footage தான் ஏற்றமானது. ஹாரர் அனுபவம், Archeological Expedition இரண்டு தளங்களையும் balance செய்கிறது.

சரி, இவ்வளவு ஹாரர் – தொல்பொருள் ஆய்வு திரைப்படங்கள் வந்திருக்கின்றது. அதில் வரும் அத்தனை தொல்பொருள் ஆய்வாளர்களும் ஒரே மாதிரி “அங்க போகாதீங்க…” என்று ஊர்க்காரன் பேச்சைக் கேட்கிறார்களா? The Mummy Rachel Weisz துவங்கி, இந்த படத்தின் நாயகி Perdita Weeks வரை யாருமே கேட்பதில்லை. கேட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?

Philosopher’s Stone, Catacombs, Hell, Delusion of own fear… என்று பல தளங்களில் கதையை கச்சிதமாக கொண்டு சென்றிருக்கின்றார்கள். நல்லதொரு திகிலனுபவத்தை தருகின்றது As Above, So Below.

Directed by John Erick Dowdle (Devil)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s