Jodorowsky’s Dune

maxresdefault

மனித மூளையின் ஆற்றலை அதியற்புதமாய் வெளிப்படுத்துவது அறிவியலும், கலையும்தான். அதிலும், பென்டசி கலையாக்கங்கள் மனித கற்பனையின் அதியுச்சம் எனலாம். கலை இலக்கிய உலகில் இதுவரையில் வெளிவந்திருக்கும் படைப்புகளில் இருந்து நாம் கண்டுகொள்வது இதனைத்தான். கலையும் தொழில்நுட்பமும் மனித கண்டுபிடிப்புகளின் மகத்தான சாதனைகள் என்று சிந்தனையாளர்கள் குறிப்பிடுவார்கள்.

விஞ்ஞானப் புனைவுகள் / அறிவியல் புனைவுகள் என்பது கலை இலக்கிய உலகில் பாரிதொரு பரப்பாக காணப்படுகின்றது. விஞ்ஞானப் புனைவுகள் தனித்தும், துணை வகையறாக்களுடனும் இணைந்து தனது படைப்புலகை வியாபித்துக் கொண்டு செல்கின்றது. பென்டசி, ஹாரர் போன்ற வகையறாக்கள் அதிகம் விஞ்ஞானப் புனைவுகளுடன் இணைந்து பயணிப்பதுண்டு.

Frank Herbert இன் அறிவியல் புனைவின் பைபிள் என்றழைக்கப்படும் Dune Saga வை, சிலியின் சர்ரியலிஸ இயக்குனர் அலேஹேந்த்ரோ ஹுதோரொப்ஸ்கி – Alejandro Jodorowsky – திரைப்படமாக்குவதென்று கனவு கண்டார். இக்கனவை நனவாக்க அவர் எடுத்த பிரயத்தனங்கள்தான் Jodorowsky’s Dune என்ற documentaryயில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

doorofperception.com-jodorowskys_dune

Dune மாத்திரம் வெளிவந்திருந்தால் நிச்சயம் அறிவியல் புனைவு திரைப்படங்களில் மூன்றில் ஒன்றாக வந்திருக்கும். இதுவரையில் வெளிவந்த அறிவியல் புனைவு திரைப்படங்களில் Fritz Langஇன் Metropolis (1927), குப்ரிக்கின் 2001: a Space Odyssey (1968) இந்த இரண்டையும் தாண்டி எந்த அறிவியல் புனைவும் வரவில்லை என்பதே உண்மை. அந்த்ரே தர்கோவ்ஸ்கியின் Solaris, Stalker போன்றவை ஆழ்ந்த தத்துவ விசாரணைகள் கொண்டவை. அவற்றை இந்த பட்டியலில் சேர்க்க முடியாது.  இந்த documentary film ஐ பார்த்து முடியும் போது இந்த உணர்வு நிச்சயம் வரும்.

Jodorowsky ஒரு பைத்தியக்காரக் கலைஞன். அவர் எடுக்கும் திரைப்படங்கள் பைத்தியக்காரத்தனமாக இருப்பதோடு நின்றுவிடுவதில்லை, அவை பார்ப்பவர்களையும் ஒருவித madnessற்குள் அழைத்துச் செல்லும். தனது படைப்புகளில் தொடர்ந்தேச்சயாக பல பரிசோதனைகளை (experiments) நிகழ்த்திக் கொண்டிருப்பவர்.  நாடகம், திரைப்படம், காமிக்ஸ், இசை, நடிப்பு, எழுத்து என எதனையும் விட்டுவைக்கவில்லை அவர். El Topo (1970) அவரது முதல் திரைப்படம். சிலியில் பெரும் அலையை (சர்ச்சையை) ஏற்படுத்திய படைப்பு அது. அதன் பிறகு The Holy Mountain (1973).

Jodorowskys-Dune2

தனது படைப்புலகை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டுசெல்ல  ஹுதோரொப்ஸ்கி  Frank Herbertன் Dune (1965) இனை தேர்வு செய்தார்.

“…எனது படைப்புலகை நான் விஸ்தரப்படுத்த வேண்டும். புதியவாயில்களை அடுத்த தலைமுறைக்கு திறந்து கொடுக்க வேண்டும். அந்த படைப்பு சினிமா உலகின் தீர்க்கதரிசனமாக (Prophecy) இருக்கவேண்டும். கலையின் தீர்க்கதரிசியாக (Prophet) அது இருக்கும். நான் ஒரு தீர்க்கதரிசியை உருவாக்கப் போகிறேன்…”

Duneஐ அதுவரையில் அவர் வாசித்தேயிருக்கவில்லை. எப்பொழுதோ ஒரு நண்பர் அதுபற்றி சொல்லியிருந்ததைத் தவிர வேறு எதுவும் அதுபற்றி அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

உலகை மாற்றப் போகும் திரைப்படத்திற்கான ஆரம்பக் கட்ட வேலைகளில் இறங்கினார் Jodorowsky.

“…உலகை மாற்றப் போகும் பயணத்தில் இறங்கிவிட்டேன். இப்பொழுது எனது படைக்கு தளபதிகள் தேவை. அவர்களை நான் தேட வேண்டும்…”

gallery4

முழுத் திரைக்கதையையும் storyboard ஆக மாற்ற வேண்டும். அதற்கு தகுந்த ஒருவர் யார்?

“…எனது படைப்புலகம் ஒரு ஆன்மீக அனுபவம். எனது பயணத்தில் இணைபவர்களும் அவ்வாறே இருக்க வேண்டும். கலையென்பது வெறும் வியாபாரமல்ல. அதுவொரு ஆன்மீகச் செயற்பாடு…”

“…படத்திற்கு storyboard பண்ண வேண்டும். அது எனது கேமரா. அது ஒளிப்பதிவு. அப்பொழுதுதான் இந்த காமிக்ஸை கண்டேன்… ப்ளுபெர்ரி (கேப்டன் டைகர்). கௌபாய் காமிக்ஸ். இவன்தான் ஆள்… Jean Giraud. இவன் எங்கு இருக்கிறான்…”

Jean Giraud, காமிக்ஸ் உலகின் தஸ்தேயோவ்ஸ்கி, போர்ஹேஸ்… காமிக்ஸை பெரும் கலைச் செயற்பாடாக கருதியவர் லீன் கிராட். ப்ரான்கோ – பெல்ஜியக் கலைஞர். Duneற்காக கிட்டத்தட்ட 3000 drawingகளை வரைந்தார் கிராட். அவருக்கு வரைவதென்பது தண்ணீர் குடிப்பது போல், கைகள் தீயாய் வேலை செய்தது.

“…அவன்தான் எனது கேமரா”

Works of Jean Giraud

moebius-004

Jean_Giraud_xyse9mi161qbyi80o10_1280

9

landscapes planets insects science fiction artwork traditional art moebius french artist 1024x770_wallpaperswa.com_67

jean_moebius_giraud_1938___2012_by_bumhand-d4t491o

அடுத்து, Chris Foss. விஞ்ஞானப் புனைவு புத்தக அட்டைகளில் காணப்படும் ஓவியங்கள் வரையும் கலைஞர் (science fiction illustrator.) Philip K. Dick, Issac Asimov போன்றவர்களின் புத்தகக் கவர்களை வரைந்தவர். இவரது ஓவியங்களால் கவரப்பட்ட Jodorowsky தனது திரைப்படத்தின் அடுத்த தளபதியையும் கண்டுகொண்டார்.

Chris Foss இன் பணிகள் பெரும்பாலும் Dune இன் விண்கலங்களை வடிவமைப்பதாகவேயிருந்தது.

Works of Chris Foss

jodorowskys_dune_images1_1020.1395940299

jodorowskys_dune_images16_1020.1395940256

jodorowskys_dune_images10_1020.1395940277

Dan O’Bannon – Special Effects Supervisor. John Carpenter மற்றும் Dan O’Bannon உம் இணைந்து பணியாற்றிய Dark Star திரைப்படத்தை பார்த்துவிட்டே Jodorowsky இவரை Special Effects தளபதியாக தேர்வு செய்தார். Dark Star படத்தின் விண்வெளிக்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்த விதம் அவரை மிகவும் கவர்ந்திருந்தது. அவரது பாஷையில் சொல்வதானால் அது ஒரு அற்புத ஆன்மீக அனுபவமாக இருந்தது.

Duneன் நல்ல பக்கத்தை வடிவமைக்க தளபதிகளை தேடியாயிற்கு. அடுத்து dark sideஐ வடிவமைக்க பொறுத்தமான ஆள் யார்? மனித ஆன்மாவின் இருண்டபக்கத்தை திரையில் வரைய யார் பொறுத்தமானவர்? H.R. Giger. சர்ரியலிஸத்தின் இருண்ட பக்கங்களை தனது படைப்புலகாகக் கொண்ட கலைஞர். பின்னாட்களில் இவரது மன்ஸ்டர்கள் பார்வையாளர்களை திரையரங்கை விட்டே துரத்தப் போகின்றது என்பதை அப்பொழுது அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

Works of H.R. Giger

jodorowskys_dune_images8_1020.1395940276

jodorowskys_dune_images19_1020.1395940255

jodorowskys_dune_images11_1020.1395944428

இவ்வாறு படத்தின் ஆன்மாவை செதுக்கிக் கொண்டிருந்தார் Jodorowsky. படத்திற்கான இசைக்கு அக்கால ராக் இசைக்குழுக்களை தேர்வு செய்திருந்தார். Emperor ஆக நடிப்பதற்கு சல்வதோர் டாலியை கன்வின்ஸ் செய்திருந்தார். கொழுத்து பெரிய தீனீப்பண்டாரமாக இருந்த ஆர்சன் வெல்ஸையும் நடிக்க வைக்க ஏற்பாடுகளை செய்திருந்தார்.

ஸ்டோரிபோர்ட் முழுமையாக்கப்பட்டு புத்தக புத்தக வடிவில் பைன்ட் செய்யப்பட்டு ஸ்டியோக்களுக்கு அனுப்பப்பட்டது. Jodorowskyயின் கனவு கிட்டத்தட்ட 14 மணித்தியாலங்கள் வந்திருந்தது. ஆனால், ஸ்டியோக்கள் எப்போதும் இன்னொரு சமகால திரைப்பட உதாரணத்தைக் கொண்டே அனைத்தையும் அளவிடும். நேரம் அதிகம் ஒன்றரை மணித்தியாலமாக மாற்றுங்கள் என்றார்கள். பணமுதலைகளுக்கு விஷனரிகளின் படைப்புலகம் புரியப் போவதில்லைதான். Dune போன்றதொரு படைப்பை திரையில் சாத்தியமாக்க ஹாலிவூட் ஸ்டியோக்களால்தான் முடியும். அவைதான் அதிஉயர் தொழில்நுட்ப சாதனங்களை கொண்டிருக்கின்றன.

விஷனரிகள் ஒருபோதும் அவர்கள் காலத்தில் புரிந்துக்கொள்ளப்பட்டதில்லை. குப்ரிக்கின் 2001 வெளிவந்த போது திரைவிமர்சகர்களினால் புறக்கணிக்கப்பட்டது. அந்த படைப்பு தனக்கான பார்வையாளர்களை 50 வருடங்களின் பின்னர் உருவாக்கிக் கொண்டது.

ஹாலிவூடினால் புறக்கணிக்கப்பட்ட தனது படைப்பை Jodorowsky வெளிவந்த ஒரு திரைப்படமாகவே எண்ணிக்கொண்டிருக்கின்றார்.

“…என்னைப் பொறுத்தவரையில் Dune எடுக்கப்பட்டுவிட்டது…”

எடுக்கப்படாத ஒரு படைப்பு தனது மகரந்தங்களை விட்டுச் சென்றிருக்கின்றது. இன்றைய தேதி வரை வெளிவந்து கொண்டிருக்கும் பல்வேறு அறிவியல் புனைவு திரைப்படங்களின் காட்சிகளுக்கு மூலகாரணம் இந்த Duneதான். உதாரணமாக Robot POV காட்சிகள், டேமினேட்டர் முதற்கொண்டு பல திரைப்படங்களில் இது வந்திருக்கின்றது. ஸ்டார் வார்ஸின் லேசர் வாற் சண்டைகள்… என்று பல திரைப்படங்களில் Jodorowskyயின் விஷன் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. காரணம் கிட்டத்தட்ட எல்லா பெரிய ஹாலிவூட் ஸ்டியோக்களிலும் அவரது ஸ்டோரி போர்ட் இருக்கின்றது.

Jodorowskyயினால் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர்களை நன்றாக பயன்படுத்திக் கொண்டது ஹாலிவூட், ரிட்லி ஸ்காட், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்றவர்கள் இக்கலைஞர்களை பயன்படுத்திக் கொண்டனர். ஏலியனில் வரும் காட்சிகள், மன்ஸ்டர்கள், ஸ்டார் ஷிப் எல்லாவற்றிற்கும் ரிஷி மூலம் இந்த Dune தான். கடைசியாக வந்த Prometheus திரைப்படத்தில் வரும் கொழுத்த மனிதன் போலிருக்கும் மலை, அப்படியே  Dune இல் இருந்து சுட்டதுதான்.

Jodorowskyயின் Dune நிகழ மறுக்கப்பட்ட ஒரு அற்புதம்.

பின்குறிப்புகள்

  • Jodorowskyயும் Jean Giraudஉம் இணைந்து உருவாக்கிய காமிக்ஸ்தான் The Incal. இந்த காமிக்ஸில் அவர்களின் ஆரம்பகால பணிகளின் பாதிப்பு இருக்கின்றது. இவர்கள் இருவரும் இணைந்து பல காமிக்ஸ்களை உருவாக்கியிருக்கின்றனர்.

1035x1432-20140417-theincal-x1800-1397753242

  • Dan O’Bannon ஏலியன் படத்தின் ஸ்கிரிப்டை எழுதியவர். அவர்தான் Duneல் பணியாற்றிய H.R. Giger ஐ உலகை உலுக்கிய ஏலியனை வடிவமைக்க அழைத்துவந்தார். (முதன் முதலாக படம்பார்த்தவர்கள் திரையரங்கை விட்டு வெளியே ஓடினார்கள்)
  • Chris Foss குப்ரிக்கின் A.I. படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது ஓவியங்களை ஸ்பீல்பெர்க் பயன்படுத்திக் கொண்டார். க்ரடிட்ஸ் கொடுத்தாரா என்னவோ தெரியாது. குப்ரிக்கிற்கே ஒரு மூலையில் பெயர் போட்டார்.

மேலதிக வாசிப்புக்காக

Dune திரைக்கதை சுருக்கம் – http://www.duneinfo.com/unseen/jodorowsky-dune-script-summary

Advertisements

2 comments

  1. ஓவியங்கள் மிகவும் நன்றாய் இருக்கிறது. தகவல்கள் பாா்க்கத் தூண்டுவதாய் இருக்கிறது. நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s