நரவேட்டைக் காடு

kinopoiskru-the-constant-gardener-poster-1583772148

நிகழ்வு – 01

சல்வதோர் அலன்தே. சிலியின் ஜனாதிபதியாக இருந்தவர். அதற்கு முன்னர் சுகாதார அமைச்சராகவும் பணியாற்றியவர். இவரது அரசியல் சிந்தனைகள் போலவே மருத்துவ சிந்தனைகளும் புரட்சிகரமானவை. மேலை மருத்துவத்தின் வன்முறைக்கு எதிராக புரட்சிகர மாற்றங்களுடன் மருத்துவத்துறையை வளர்த்தெடுப்பதற்கு பல திட்டங்களை வைத்திருந்தார். La Realidad Medico-Social Chileña என்ற ஆய்வுக்கட்டுரையை 1939ல் வெளியிட்டிருந்தார். இக்கட்டுரையில் அவரது மருத்துவ சிந்தனைகள் குறித்து பேசியிருந்தார். இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமலேயே சதியின் மூலம் இறக்க நேரிட்டது.

நிகழ்வு – 02

இலங்கையைச் சேர்ந்த கலாநிதி பிபில செனரத்ன பார்மாக்களின் பாதாள செயற்பாடுகளை பற்றியும், அலோபதி மருத்துவ மருந்துக்களைப் பற்றியும் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்திருந்தார். அக்கட்டுரைகள் சிங்கள பத்திரிகையொன்றிலும் வந்தது. இது குறித்து விரிவாக எழுதப்போவதாகக் கூறி ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்றிருந்தார். அது மருத்து மாநாடு ஒன்று. அம்மாநாட்டிலும் இது குறித்து தெரிவித்திருந்தார்.  இது குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க இருந்த நாள் காலை அவர் தங்கியிருந்த அறையில் பிணமாக்கப்பட்டிருந்தார். Food Poisoning என்று ரிப்போர்ட் வந்திருந்தது.

நிகழ்வு – 03

தற்போதைய துனிசிய ஜனாதிபதி முன்சிப் மர்சூகி ஒரு மருத்துவர். பல்வேறு மருத்துவ முறைகளை கற்றவர். இவரது மாற்று மருத்துவமனை திட்டம், உலகிலுள்ள பல்வேறு மருத்துவ முறைமைகளை உள்ளடக்கியதாக அமையவிருந்தது. இந்தியாவின் சித்த வைத்தியத்தைக் கூட இவர் கற்றிருக்கின்றார். ஆயுர்வேதம், யுனானி, அலோபதி, ஹோமியோபதி… என்று பல மருத்துவ முறைமைகளை உள்ளடக்கி ஒரு கனவு ஹாஸ்பிடலை உருவாக்க நினைத்திருந்தார். இந்த நோக்கத்தை முன்னாள் ஜனாதிபதி பென் அலி மூலம் பார்மாக்கள் தடுத்து நிருத்தின. நாடு கடத்தப்பட்டார்.

இம்மூன்றும் தனித் தனி நிகழ்வுகளாக இருந்தாலும் இவற்றிற்கு பின்னால் செயற்பட்ட “சர்வதேச ரவுடிஸம்” ஒன்றுதான். மனிதத்திற்காக குரல்கொடுத்த, பாடுபட்ட, தங்களது அறிவு, உடமை அனைத்தையும் அர்ப்பணித்தவர்களுக்கு அநேகமாக நேர்வது “மர்மமான” மரணம்தான்.

Stamp_Salvador_Allende
சல்வாதோர் அலன்தே

ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மூன்றாம் உலக நாடுகள் எல்லாம் இன்று ஏகாதிபத்திய அரசுகள் “யுத்த விளையாட்டை” நடாத்தும் கொலோசியங்களாகவே இருக்கின்றன. முதலாம், இரண்டாம் உலகப் போர்களின் பின்னா பாடம் படித்துக் கொண்ட ஏஹாதிபத்திய அரசுகள் இன்னுமொரு யுத்தத்தை எமது நிலங்கள், பொருளாதாரம் தாங்காது என்றுணர்ந்து தமது யுத்தங்களை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது. பனிப் போராக பரிணமித்த இந்த யுத்த விளையாட்டு இன்று மூன்றாம் உலக நாடுகளில் “மூன்றாம் உலக மகா யுத்தமாக” நடந்து கொண்டிருக்கின்றது. அழிவைக் கொண்டே ஏகாதிபத்தியம் வயிறுபுடைத்திருக்கின்றது. இந்த நாடுகளில் உள்நாட்டு யுத்தங்களை வறுமை, பொருளாதார நெருக்கடி, அமெரிக்க வால் அரசுகளின் மூலம் நிலைநிறுத்தி வைத்திருக்கின்றது.

பலம்பொருந்திய இக்கண்டங்களை பலவீனப்படுத்த மருத்துவத்தை – மருந்துக்களை நுணுக்கமாக பயன்படுத்திக் கொண்டன இந்த ஏகாதிபத்திய அரசுகள். இயல்பிலேயே ஆபிரிக்க நாடுகளின் (வரண்ட பாலை நில) மக்கள் பலம் பொருந்தியவர்கள். 20 – 30 கிலோமீற்றர் தூரமெல்லாம் அவர்களுக்கு 2 – 3 கிலோமீற்றர் போய் வருவது போல்தான் அவர்களுக்கு. காடு, மலை, மேடு, பள்ளம் என்று தங்கள் வாழ்வை இயற்கையுடனேயே கழித்தவர்கள். இவர்களை வீழ்த்துவதென்பது நினைத்துப் பார்க்கக் முடியாது. இவர்களை நாகரீகப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் நோயையையும் கொடுத்து, அதற்கு மருந்துக்களையும் கொடுத்து பலவீனப்படுத்தி தங்கள் “கொலோசிய” கனவிற்குள் பலிகடாக்களாக அனுப்பிக் கொண்டிருக்கின்றது.

சர்வதேச தொண்டு நிறுவனங்களின் மூலம் இலகுவாக இந்நாடுகளுக்குள் இவைகளுக்கு பிரவேசிக்க முடிகின்றது. இவர்களுக்கு இந்த நாடுகள் ஒரு “செலிபிரிட்டி களியாட்ட மைதானம்” தங்கள் சிற்றின்பங்களுக்காக இந்நாடுகளை சின்னாபின்னமாக்கிக்க கொண்டிருக்கின்றார்கள். சின்னதொரு காரணம்தான் அவர்கள் நாகரீமடையாதவர்கள், காட்டுமிராண்டிகள்.

புதிதாக கண்டுபிடிக்கப்படும் மருந்து வகைகளை மனிதர்களில் பரிசோதித்துப் பார்க்க முடியாது என்பது பல நாடுகளின் சட்டமாக இருக்கின்றது. அது மனிதர்கள் வாழும் நாடுகளுக்குத்தான் பெருந்தும். ஆபிரிக்கா மாதிரி மூன்றாம் உலக நாடுகளுக்கு பொருந்தாது. காரணம் அங்கெல்லாம் இருப்பது பரிசோதனைக் கூட எலிகள்தானே.

பர்மாக்கள் எவ்வாறு தங்கள் வலைப்பின்னலை ஏற்படுத்தி வைத்திருக்கின்றது என்பதை அறிந்துகொண்ட ஒருவனால், அவன் ஒரு உயரிய ஸ்தானத்தில் இருக்கும் ஒருவனாக இருந்தால் அது பற்றி வாய் திறக்கவே மாட்டான். திறந்தால் அவனுக்கு மரணம் விதிக்கப்பட்டு விட்டது என்றே அர்த்தம்.

Rachel_Weisz_hot_019_original

இந்த பார்மாக்களின் வண்டவாளங்களை துகிலுரித்துக் காட்டும் திரைப்படமே The Constant Gardner. City of God புகழ் இயக்குனர் Fernando Meirelles இன் அரசியல் த்ரில்லர் இந்தத் திரைப்படம்.

தன் மனைவியின் மரணத்துடன் தொடர்பான விடயங்களை பின்பற்றிச் செல்லும் கணவனின் எமோஷனல் தேடல், ஒரு மாபெரும் குற்றவுலகை அவனுக்கு முன் விரிக்கின்றது.

ஜஸ்டின், தெஸ்ஸாவுக்கு இடையில் இருக்கும் காதல் மிக நெருக்கமானதாகவும், போலித்தனமற்றதாகவும் இருக்கின்றது. தன் மனைவி மீது கொண்ட அதீத அன்பு, துரோகமிழைத்துவிட்டாள் என மனுதுள் சந்தேகம் ஏழுந்தாலும் அதனை அவள் மீது கொண்ட அன்பு மிகைக்கும் தருணங்கள் என்று காதலை எவ்வித பாசங்குகளும் இன்றி வெளிப்படுத்தியிருக்கின்றது இத்திரைப்படம்.

தெஸ்ஸாவாக நடித்திருப்பது ரேச்சல் வீஸ். நீதிக்காக, அறத்திற்காக குரல் கொடுக்கும் பெண்ணாக நடித்திருக்கிறார். நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் துணிந்த பெண் பாத்திரம். உலகின் எந்த மூலைக்கு சென்றேனும் அதனை சாதித்துவிட துடிக்கும் ஒரு பெண். அதேநேரம் தன் காதலையும் இழந்துவிட விரும்பாத நிலையில் தவிக்கும் ஒரு பெண். நடிப்பில் ரேச்சல் வீஸிற்கு பாடம் கற்பிக்க தேவையில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

ஜஸ்டின் பாத்திரத்தில் ரால்ப் ஃபீன்னஸ் நடித்திருக்கின்றார். அசந்தால் ஹாலிவூட் ஹிரோயிஸ ஜேம்ஸ்பான்ட் ரக பாத்திரம். ஆனால், அதனையும் தாண்டி ஒரு சாதாரண கணவனாக, ஐ.நா. ஊழியனாக ஹிரோயிஸத்தை கடந்து சென்றிருக்கின்றார்.

படத்தில் இவ்விரண்டு பாத்திரங்களையும், கதையையும் பிரித்து நோக்க முடியாது. காரணம் இப்பாத்திரங்கள் மூலமே சர்வதே பார்மா மாபியா கும்பலின் வண்டவாளங்கள் தெரிய ஆரம்பிக்கின்றது. மூன்றாம் உலக நாடுகளில் ஏகாதிபத்திய அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏற்படுத்தியிருக்கும் “நாகரீக எழுச்சி” குறித்த பார்வைகள் ஆபிரிக்க வெட்கையுடன் நம்முன் விரிகிறது.

பார்மாவின் எதிரியை கொலை செய்ய அது எவ்வாறான வழிகளைக் கைக்கொள்கிறது என்பதை நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். அது தனது கரங்களில் நேரடியாக இரத்தக் கரையை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. இந்த நிறுவனங்கள் “மாசுபடாத மீட்பர்கள்” என்றே காட்டிக் கொள்ள விரும்புகின்றன.

360-fernando-meirelles

அரசும், அதன் கைக்கூலி அமைச்சர்களும், தொண்டர் நிறுவனங்களும், ஐ.நாவும் இந்த பார்மாக்களுக்கு எவ்வகையில் துணைபோகின்றன என்பதை அரசயில்ரீதியாக விவரித்துச் செல்கின்றது இத்திரைப்படம். படத்தில் பல்வேறு நுணுக்கமான தளங்களில் இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முக்கியமாக வசனங்கள்.

Tessa Quayle: I thought you spies knew everything. Tim Donohue: Only God knows everything. He works for Mossad.

ஒக்ஸ்பாம் நிறுவனம் இத்திரைப்படத்தில் நேரடியாக பல காட்சிகளில் தென்படுகின்றது. கதையின் படி தடுப்பு மருந்துடன் “இலவசமாக” கொடுக்கப்படும் இன்னொரு மருந்து பரிசோதனைக்காவே கொடுக்கப்படுகின்றது. இதன் காரணமாக பலர் மர்மமான முறையில் இறக்கின்றனர். அவர்கள் ஆபிரிக்க எலிகள் என்பதால் அது ஒரு பொருட்டல்ல.

எய்ட்ஸிற்கு மருந்தை இந்நாடுகளுக்கு அள்ளிக் கொடுக்கின்ற இந்த கம்பனிகள். இலவசமாக. படத்தில் வரும் வசனமொன்று, “No drug company does something for nothing,”.

John le Carré இன் The Constant Gardner நாவலைத் மையமாகக் கொண்டே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. குற்றப்புனைவுலகில் பிதாமகர் Le Carre. இது நிச்சயமாக அவரது உக்கிரமான படைப்பாக இருக்க வேண்டும். படத்தைப் பார்க்கும் போது இந்த உணர்வே எழுகின்றது. Le Carre படத்தைப் பற்றி குறிப்பிடும் போது, இது முழுவதும் நாவலைத் தழுவி எடுக்கப்படவில்லை. என்றாலும், நாவலின் மூலக்கருத்தை சிதைக்கவில்லை. நான் சொல்லியிருப்பதை அப்படியே சொல்லிவிட்டார் இயக்குனர் என்றிருக்கிறார்.

படம் முன்பின்னாக நகர்ந்து செல்கின்றது. ப்ளாஷ் பேக் காட்சிகள் அடிக்கடி வருகின்றன. அது படத்தின் தீவிரத்தை இன்னும் அதிகரிக்கின்றது.

இந்த திரைப்படத்தின் மூலம் பார்மாக்கள், ஏகாதிபத்தியம், தொண்டர் நிறுவனங்கள், மூன்றாம் உலக நாடுகளை எப்படி சின்னா பின்னப் படுத்தி வைத்திருக்கின்ற இந்த சர்வதேச ரவுடிஸம் என தனது விமர்சனப் பார்வையை முன்வைத்திருக்கின்றார் Fernando Meirelles.

மனிதனது தேவை நோயற்ற வாழ்வு. அந்த வாழ்வை வியாபாரமாக்கி சிதைக்கின்ற இந்த மருத்துவ ரவுடிஸம் குறித்த பிரக்ஞை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கின்றது?

காதலும் அரசியலும் மரணமும் இத்திரைப்படத்தில் இழையோடும் உள்ளார்ந்த தளங்கள் என்பதில் ஐயமில்லை.

Advertisements

5 comments

  1. நர வேட்டைக் காடு- என்னா ஒரு தலைப்பு பாஸ். அதிகாரத்தின் வன்முறை எனும் நூலில் அ.மார்க்ஸ் அலோபதி மருத்துவ முறை பற்றி எழுதியிருக்கிறார். City of God எப்பொழுதுமே என்னுடைய ஃபேவரைட் படங்களில் முதன்மையான ஒன்று. இது மிக அருமையான ஒரு அறிமுகம். படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கவேண்டும். வாழ்த்துக்கள் பாஸ்!

    • நரவேட்டைக் காடு. காமிக்ஸ் உலகில் விழுந்து புரண்டவிங்க நாம. அதான் இம்மாதிரி தலைப்பு பிடிக்க ஈசியா இருக்கு. Literature of Trash என்று சொல்வாங்களே. அப்படி.

      அ. மார்க்ஸினுடைய கட்டுரையை படித்துள்ளேன். அலோபதியின் வன்முறையை அதைப் படித்த பின்னர்தான் உணர முடிந்தது. (அதற்கு முன்னர் எப்பொழுதும் அலோபதி மீது ஈர்ப்பு இருந்ததேயில்லை)

  2. ஒருவன் உயிா் வாழ எதுவெல்லாம் அவசியமோ அவை எல்லாவற்றையும் ஒன்று அழித்துவிட வேண்டும் அல்லது அதை அவனுடைய பொருளாதார சக்தியை மீறி வாங்குகிற அளவுக்கு விலை வைத்துவிட வேண்டும். அப்படி செய்தால் அவனை நாம் அடிமையாக்கிவிடலாம். பிறகு அவன் எப்போதுமே நமக்கு எலிதான். இதுதான் ஏகாதிபத்யத்தின் தந்திரம். அதி வக்கிரம் பிடித்தவா்கள்.

  3. அலோபதி மருத்துவத்தின் அதிகாரத்தை உலுக்குவது அவ்வளவு இலகுவானதல்ல.நவீனத்துவத்துடன் உருவான ”பகுத்தறிவின்” வன்முறையையே இந்த மக்கள் விரோத அமைப்பை தூக்கி நிறுத்தியுள்ளது. மெடிகல் மாபியாக்களின் அதிகாரம் பாயாத இடம் இந்த பிரபஞ்ச வெளியில் இல்லை எனலாம். ஒரு யுகப்புரட்சி நடந்து இந்த முதலாளிய சந்தை அமைப்பு பிடுங்கி எறியப்பட்டால் அன்றி மனிதனுக்கு இந்த ஜென்மத்தில் விமோசனம் கிடையாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s