The Extraordinary Adventures of Adèle Blanc-Sec (2010)

oy2ZVTfBCKNh1KzQ3zDq4rlXzYM

Adventure திரைப்படங்கள் என்றால், எவ்வித மன அழுத்தங்களையும் கொடுக்காத, படம் ஆரம்பித்து கடைசிவரைக்கும் பாப்-கார்ன் சாப்பிபட்டுக் கொண்டு, அப்பிடியே ஹாயாக அமர்ந்து சும்மா ராஜாவாட்டம் பார்க்கும் திரைப்படங்கள் என்றே அர்த்தப்படும். எமது சிறுபராய விளையாட்டு, கனவுகள் சாகாசப் பயணங்களைக் கொண்டமைந்திருப்பது இயல்பு. காடுகளில் ஒளிந்து – ஓடி விளையாடுவதின் பின்னால், “இந்தக் காட்டில் மூன்று தலை டிராகன் ஒளிந்திருக்கின்றது. அது அந்த காலத்தில் இருந்தே இந்த காட்டிற்கு வரும் சிறுவர்களை பிடித்துக் கொள்ளும். அந்த டிராகனை அடக்கி வெல்ல வேண்டும். அப்புறம் அந்த டிராகன் என் நண்பனாகிவிடும். ஆனால், அதற்கு காட்டின் தென் பகுதியில் இருக்கும் பாழ்கிணற்றின் உள்ளே இருக்கும் பெரிய பாராங்கல்லில் சொருகப்பட்டிருக்கும் வாளை எடுக்க வேண்டும். அந்த வாளை எடுப்பவன் பெரும் சக்திபடைத்தவனாக மாறுவான். அது நான்தான்.” என்ற பெருங்கதை பொதிந்திருக்கும். (என்னவொரு விளக்கம்) இப்படியான பால்ய சாகாசக் கனவுகளை இன்னுமொரு கணம் மீட்டிப் பார்க்க வைப்பது இந்த அட்வென்சர் திரைப்படங்கள். இந்த பந்தி முடியும் முன்னர் இன்னுமொன்றை குறிப்பிட்டாக வேண்டும், இந்த சாகாசக் கனவுகள் பையன்களுக்கே அதிகம் இருக்கும். பெண் பிள்ளைகள் இம்மாதிரியான விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டுவதில்லை. அல்லது அவர்களுக்கு பார்பி பொம்மைகள்தான் சரி என்று ஒதுக்கப்படுகிறார்கள். அல்லது பெண்ணியம் – ஆணாதிக்கம் போன்றக் பெரிய காரணங்களாகவும் இருக்கலாம். யார் கண்டா…?

Adèle Blanc-Sec, என்ற ஜர்னலிஸ்ட், எழுத்தாளப் பெண்ணின் தேடுதல் வேட்டையே இந்தத் திரைப்படம். Luc Besson இன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படம், ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்தின் மூலம் நீண்ட Hatpin ஒன்று பின்மண்டை வழியாக வந்து முன் மண்டையில் (அதாங்க நெற்றிப் பொட்டு) நீட்டிக் கொண்டு வந்து நிற்க, அவளைக் குணப்படுத்த முடியாது என்று வைத்தியர்கள் சொல்ல, Adèle இறந்த உயிர்களை மீள உயிர்ப்பிக்கும் கலையைக் கற்ற ஒரு “நட்கழன்ற” ப்ராபசர் இருப்பதாக அறிந்து, அவரைக் கொண்டு பண்டைய எகிப்த்தின் ஒரு வைத்தியரை உயிர்ப்பித்து தன் சகோதரியின் மண்டைக்குள் இருக்கும் ஆணியை எடுக்க எடுக்கும் பிரயத்தனங்களே கதை. இந்த சின்ன கன்சப்டை வைத்துக் கொண்டு, அக்ஷன், மன்ஸ்ட்ர், மம்மி என்று ஒரு அட்வென்சர் திரைப்படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டு அட்டகாசமான நகைச்சுவையுடன் ஒரு ஜாலியான திரையனுபவத்தை வழங்குகின்றது இத்திரைப்படம்.

இத்திரைப்படம் 70களில் வந்த The Extraordinary Adventures of Adèle Blanc-Sec எனும் காமிக்ஸ் புத்தகங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த சீரிஸில் வரும் பாத்திரம்தான் Adèle, அவளொரு வரலாற்றை மையப்படுத்தி எழுதும் ஜனரஞ்சக எழுத்தாளினி. அந்த கால pulp fiction / comics களைப் போன்றே இந்த காமிக்ஸும் அதிரடி மர்மத் தேடல்களைக் கொண்டதாக இருந்திருக்கின்றது.

படத்தின் கதைசொல்லல் ப்ரான்சிய திரைப்படங்களுக்கேயுரிய அங்கதம், பகிடியைக் கொண்டிருக்கின்றது. படத்தின் ஆரம்பத்தில் Narrator கதையைச் சொல்லும் போதும், சிறைச்சாலையில் இருக்கும் “நட்கழன்ற” ப்ராபசரை விடுவிக்கும் முயற்சி, உச்சகட்டமாக ரமசேசின் (II) அரச வைத்தியர் என நினைத்து லவட்டிக் கொண்டு வந்த மம்மி, கடைசியில் பண்டைய எகிப்திய நியூக்லியர் விஞ்ஞானியாக இருப்பது… எல்லாம் அட்டகாச தருணங்கள்.

இப்படியெல்லாம் சொல்வதை வைத்து, Indiana Jones ரேஞ்சுக்கு அட்டகாசமான அட்வன்சர் திரைப்படம் என்று நினைத்துவிட வேண்டாம். மேலே சொன்ன மாதிரி, ராஜாவாட்டம் அமர்ந்து கொண்டு பார்க்கக் கூடிய பாப் – கார்ன் திரைப்படமே இது.

படத்தை இவ்வளவு சிலாகித்துச் சொல்வதற்குக் காரணம்… இவங்கதான், 😉 ❤

936full-louise-bourgoin
Louise Bourgoin

Advertisements

One comment

  1. படத்தை இவ்வளவு சிலாகித்துச் சொல்வதற்குக் காரணம்… இவங்கதான், 😉

    Appa kandippa sollalam (paakkalam )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s