The Strain: the Evolution of Vampirism

The-Strain-Wallpaper-the-strain-fx-37168464-1280-800

He’s involved in the art, the special effects, and he’s hands-on with everything in the film department. He’s a genius. This is 20 years of research from Guillermo. He’s been fascinated by the whole vampire mythology from around the world, and he just made his own.

Robert Maillet (the Master)

கியர்மோ டெல் டோரோ சினிமாவில் தனது முதல் பயணத்தை துவங்கியது ஒரு வெம்பயர் கதையின் (fable) மூலம். Cronos (1993) இல் வெளிவந்தது. இதுவரைக் காலமும் டிராகுலா கதைகளில் கூறப்பட்டு வந்த வெம்பயர்களில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான அணுகுமுறையை முன்வைத்தார். பொதுவாக டிராகுலா படங்களில் காலாகாலமாக கூறப்பட்டுவந்த transformation of a vampire ஐ உளவியல், உயிரியல், அமானுஷ்யம் கலந்து வெளிப்படுத்தினார். க்ரோனோஸில் வெம்பயராக மாற்றமடையும் முதியவனின் உள, உயிரியல் மாற்றங்களை படிப்படியாகவும் கவித்துவமாகவும் காட்டியிருப்பார் டெல் டோரோ. Cronos திரைப்படத்தில் ரசவாதி ஒருவனின் அமரத்துவத்திற்கான தேடலில் (Myth – தொன்மம்) ஒரு விநோத தன் விஷத்தை உடலில் செலுத்தி, மனித இரத்தை உறிஞ்சுவதன் மூலம் இவ் அமரத்துவத்தை வழங்கும் (Insect Biology – பூச்சி உயிரியல்). ஆனால், இச்செயற்பாட்டினை நிகழ்த்துவதற்கு ஒரு கருவி வேண்டும் அதுதான் க்ரோனோஸ் இயந்திர வண்டு (Clockwork Mechanism). இந்த இயந்திர வண்டு பழம்பொருள் வியாபாரியின் கைகளில் கிடைக்கிறது. அது அவன் கைகளைக் கவ்வி தன் விஷத்தை ஏற்றுவதன் மூலம் வெம்பயராக பரிணமிக்கிறான். இந்த transformation படிப்படியாகவே நிகழ்கிறது. இரத்தம், lust போன்ற உணர்ச்சிகள் அவனில் மெல்ல மெல்ல ஹோர்மோன்கள் சுரப்பது போல வெளிப்படுகிறது. இத்திரைப்படத்தின் கதைசொல்லலை ஒரு fable போன்று உருவாக்கியிருப்பார் டெல் டோரோ.

இந்த transformation ஐ மையப்படுத்திய இன்னொரு திரைப்படம்தான் Mimic. ஒரு விஞ்ஞான விபரீதத்தினால் விகாரமடையும் பூச்சியினங்கள் மனிதர்களை கொல்லத் துவங்குகின்றது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு பூச்சியினத்தை (கரப்பான்) நகரில் தொற்று நோயைப் பரப்பிக் கொண்டிருக்கும் கரப்பான்களை அழிக்கச் செய்கின்றனர். அந்த மரபணு மாற்றத்திற்குள்ளான பூச்சியினம் குறித்த வேளையை செய்து முடித்தவுடன் அழிந்துவிடும். ஆனால், பரிணாமம் தப்பித்தலுக்கான வழிகளை தேடிக்கொள்ளும். அதற்கேற்ப அப் பெரிய பூச்சியினம் அழியாமல் தப்பித்து விடுகிறது. அதற்கேயுரிய வாழ்க்கை வட்டத்தை அமைத்து மனித இனத்திற்கு பெரும் தலையிடியாக உருவெடுக்கிறது. (இத்திரைப்படத்தை இயக்கிய டெல் டோரோ கடைசிவரை படத்தை பார்க்கவேயில்லை. காரணம் ஹாலிவூட் அவர் பேச்சை கேட்கவில்லை. ஆனால், கடைசியாக வந்த Director’s Cut அவருக்கு பிடித்திருந்தது என்று சொல்கிறார்)

Pulp fiction வகையறாவைச் சேர்ந்த Blade ஐ தனக்கேயுரிய பாணியில் ஒரு cult classic ஆக மாற்றியவர் டெல் டோரோ. வெம்பயர்கள் மீது தனக்கிருந்த அறிவு, ஆர்வம், பைத்தியக்காரத்தனம் போன்றவற்றை சோதித்துப் பார்க்க கிடைத்த வரமாகவே Blade II பற்றி குறிப்பிடும் போது டெல் டோரோ குறிப்பிடுவார். ப்ளேட் எடுக்கப்பட்ட காலம் New Line Cinema, Lord of the Rings இல் கவனத்தை திருப்பியிருந்ததால் கியர்மோவை கவனிக்கவில்லை. அவரும் இதுதான் சான்ஸ் என்று தனக்கு விருப்பமான மாதிரி மேக்கப், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் பயன்படுத்தி புகுந்து விளையாடினார். இந்த திரைப்படத்தில் இதுவரைக்காலமும் கூறப்படாத வெம்பயர் தொன்மங்கள் (Myths) மீள்புனைவாக்கம் செய்யப்பட்டன. பண்டைய வெம்பயர்கள், அதன் தலைவர்கள், வெம்பயர்களில் புது இனம்… இதுவரைக் காலமும் டிராகுலா கதைகளில் Romanticize செய்யப்பட்ட வெம்பயர்களே இருந்து வந்தது. ஆனால், ப்ளேடில் வெம்பயர் கதைகளுக்கு மூலமான (origin) Strigoi கள் சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தப்பட்டன.

வெம்பயர் கதைகள் பண்டைய தொன்மங்களில் இருக்கும் Strigoi எனும் மன்ஸ்டரை மையமாகக் கொண்டே புனையப்பட்டன என்பது ஆய்வு. ஸ்ட்ரிகோய்கள் பண்டைய ரோமனியன் தொன்மம் (Romanian Mythology), Dacian Mythology போன்றவற்றில் உள்ள பேய்கள். இப்பூவுலகில் ஜீவித்திருக்கும் நாட்களில் தீயகாரியங்களை செய்தவர்கள் தேவலோகத்துக்கு (Kingdom of Zalmoxis) போக முடியாமல் சபிக்கப்பட்டு ஸ்ட்ரிகோய்களாக அழைந்து திரிவார்கள் என்று இருக்கின்றது. ஸ்ட்லிகோய்களால் இரத்தம் உறிஞ்சப்பட்டவர்கள் வெளிரிப் போய் இருப்பார்கள்.  ப்ளேடில் நமோக் எனும் வெம்பயர் (ரீப்பர்) ஒரு ஸ்ட்ரிகோய். அதன் தாடை அமைப்பு, வாயை பிளக்கும் ஸ்டைல் எல்லாம் டெல் டோரோ கைவண்ணம். அதற்கு முன் வந்த சினிமாக்கில் உள்ள வெம்பயர்கள் இரு கூரிய பற்களைக் கொண்டவையாகவே இருக்கும்.

தன் மண்டைக்குள் இருக்கும் வெம்பயர் ஐடியாக்களை திரையில் நடமாடவிட தனக்கு ஒரு ஆயுள் போதாது என நினைத்தாரோ என்னமோ டெல் டோரோ, தான் இதுவரை கற்றறிந்த வெம்பயர் தொன்மங்களை ஒரேயடியாக புனைவாக்கம் செய்ய முடிவு செய்தார். அதுதான் The Strain. முதலில் இதனை தொலைக்காட்சி தொடரொன்றிற்காக அணுகியபோது, தயாரிப்பாளர்கள் அதிலிருந்த அதிகப்படியான gore காட்சிகளை பார்த்துவிட்டு, இது சரிபட்டு வராது. வேண்டுமென்றால் இதை ஒரு காமெடி சீரீஸாக மாற்றலாம் என்று கூற சில பல பொன்மொழிகளை உதித்துவிட்டு வெளியேறினார் டெல் டோரோ. அதன் பிறகு பிரபல pulp நாவலாசிரியர் Chuck Hogan உடன் இணைந்து இக்கதையை நாவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.  முதல் நாவல் வந்தது தொலைக்காட்சி நிறுவனங்கள் உஷாராகின. ஆனால், டெல் டோரோ மூன்று நாவல்களும் வரும் வரை எந்த பேச்சுவார்த்தையும் இல்லையென்று சொல்லிவிட்டார். எந்தவித சமரசமும் இன்றி நமது தொலைக்காட்சியில் போடலாம் என்று FX Network சொல்ல, அதற்கே வெளியிடும் உரிமை சென்றது.

The-Strain-VFX-Master

The Strain (Season 1)

Guillermo del Toro வின் முத்திரைகள் அனைத்தும் இருக்கும் ஒரு தொலைக்காட்சித் தொடர்தான் the Strain. ஒரு வரியில் சொல்வதென்றால் the Evolution of Vampirism. டெல் டோரோ தொடரை தயாரிக்கும் முன்னர் சில விடயங்களில் கராராக இருந்தார். சீரிஸில் பயன்படுத்தப்படும் நிறங்கள், மேக்கப், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் போன்றவை அவர் மேற்பார்வையிலேயே நடக்க வேண்டும் என்பதே அது. சில ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்கு தேவைப்படும் wardrobe கள் ஸ்டுடியோ பட்ஜட்டில் கட்டுப்படியாகாது என்றால் தனது சொந்த செலவில் அவற்றை அமைக்குமாறு பணித்தார். Pilot Episode மட்டுமில்லாமல், சில எபிசோட்களில் சில காட்சிகளை அவரை இயக்கவும் செய்தார். இந்த supervising தான் சீரிஸை முழுதும் அவர் கன்ட்ரோலில் வைக்க உதவியது.

Pilot Episode, டெல் டோரோவின் இயக்கம் என்பது தெளிவாகவே விளங்கும் பகுதி. முதல் எபிசோடிலேயே கதையின் போக்கை ஸ்தாபித்து விடுகிறார். முதல் அடியே மரண அடி எனும் விதத்தில். மாஸ்டர் ஒருவனை போட்டு துவம்சம் செய்யும் காட்சியுடன் சீரீஸின் கதையோட்டம் அழுத்தமாக விதைக்கப்படுகிறது.

முழு மொத்தமான முதல் சீஸனில் (நான்-லீனியர் இல்லாமல் நேராகச் சொல்வதானால்) ஒரு பண்டைய வெம்பயர் ஒழுங்கு (சமநிலை) மீறப்பட்டு, அதன் விளைவாக உலகம் இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதிலிருந்து மீள, இரண்டு தரப்பினர் போராடுகின்றனர். ஒன்று ஸட்ராகியன், எஃப் குழு. மற்றது பண்டைய வெம்பயர் குழு (The Ancients).

இந்த சீரிஸ், எண்பதுகளின் ஸாம்பி, வெம்பயர் (Hammer Films) திரைப்படங்களின் பாதிப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனை டெல் டோரோவே குறிப்பிடுவார். ஸ்ட்ரிகோய்களின் movements எல்லாம் ஸாம்பிகளை நினைவுபடுத்தும். அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது, தொண்டைக் குழிக்குள் இருந்து வெளிப்படும் sting. மற்றும் மாஸ்டரிடமிருந்து செய்திகளை பெறும் ஆற்றல் (Wave Length).

பழைய இரத்தவெறி வெம்பயர்கள் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நிலையில் பழைய பாணியையும், புதிய பாணியையும் கலந்து உயிரியல், தொன்மம், வரலாறு, அமானுஷ்யம் என்று பல தளங்களில் உலாவவிட்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த எண்பதுகளின் திரைப்பட பாணிகள் இக்காலத்திற்கு எடுபடுமா என்ற கேள்வியும் எழுகிறது. இதன் காரணமாக Strain தனக்கான தனி ரசிகர்களை உருவாக்கிக் கொண்டது. நிச்சயமாக இது எல்லோருக்கும் பிடிக்கும் சீரிஸ் என்று சொல்லமுடியாது.

சீரிஸ் முழுக்கவே கியர்மோவின் கைவண்ணங்கள் மிளிர்ந்து கொண்டேயிருக்கின்றது. மாஸ்டரின் சவப்பெட்டி, ஸட்ராகியனின் பழம்பொருள் விற்பனைக் கடையும் அதிலிருக்கும் ஆயுதங்கள் மற்றும் பழைய புத்தகங்கள், இதயங்கள் போடப்பட்ட ஜாடிகள், amber நிறம், இசை, ஸ்பானிஷ் பாத்திரங்கள், underground… இப்படி பலவற்றைச் சொல்லலாம்.

  • முக்கியப் பாத்திரங்களைச் சுற்றியே கதை நடக்கிறது… அநேகமாக எல்லாம் இரவில். மேன்ஹட்டன் நகரில் என்ன நடக்கிறது என்பதை காட்ட, ஆட்கள் அலறும் சப்தங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
  • முதல் சீஸனில் இரண்டாம் உலகப் போர் ப்ளாஷ்பேக்காக வருகிறது. ஸட்ராகியனின் வெம்பயர்கள் மீதான போரின் காரணங்கள் ஸ்தாபிக்கப்பட்டுவிடுகின்றன. ஆனாலும், இன்னும் ப்ளாஷ்பேக்கள் இருக்கின்றது. மாஸ்டரின் கதை அதிலொன்று. (Sorry for the spoiler) 😛
  • மாஸ்டரின் உருவாக்கம், Nosferatu இல் வரும் Count Orloc இனை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கின்றது. முக்கியமாக மாஸ்டரின் cloak – அதிவேகமாக நகர்ந்து செல்லக் கூடிய வகையிலும், நண்டினுடைய tentacles போன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
  • ரமின் ஜவாதியின் இசை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் போன்றவை கச்சிதமான பொருந்திப் போகின்றது.
  • பாத்திரங்கள் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். பொதுவாக இம்மாதிரியான நிகழ்வுகள் அமெரிக்க திரை, தொலைகாட்சிகளில் காண்பது அரிது.
  • Dark Horse Comics – the Strain ஐ காமிஸ்களாக வெளியிட்டு வருகிறது. அந்த காமிக்ஸ்களில் உள்ள காட்சிகள் போலவே சீரிஸில் பல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

VFX or the GDT Effects

The-Strain-VFX-Worm

உலகில் ஒருசில இயக்குனர்களே VFX இல் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கலைஞர்களையே மிஞ்சும் அளவுக்கு இருப்பார்கள். அந்தவகையில் சட்டென்று ஞாபத்தில் வந்து போகும் பெயர் Peter Jackson. GDT மற்றும் Peter Jackson இருவருமே தங்களது ஆரம்பகால சினிமா வாழ்வில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் மேக்கப் போன்றவற்றில் பல பரிசோதனைகளை செய்தவர்கள். அவர்கள் எடுக்கும் குறும்படங்களுக்கு அவர்களே VFX Artist ஆக இருப்பார்கள். பீட்டர் ஜாக்ஸனின் Bad Taste கியர்மோவின் க்ரோனோஸ் மற்றும் ஆரம்ப குறும்படங்கள் இவற்றுக்கு சிறந்த உதாரணம். க்ரோனோஸில் வரும் இயந்திர வண்டை செய்வதற்காகவே ஒரு கம்பனியை திறந்தவர் டெல் டோரோ. அவரது திரைப்படங்களில் அநேகமாக எல்லாம் கன்சப்ட் ஆர்களும், அவரது நோட் புக்கில் இருந்தே வருபவை. Pan’s Labyrinth – Pale Man, Faun, Set Designs எல்லாம் டெல் டோரோவின் கைவண்ணமே. பீட்டர் ஜாக்ஸனை விட கலைத் தரத்தில் அதியச்சத்தில் இருப்பவர் டெல் டோரோ என்பது Pan’s Labyrinth படத்தைப் பார்ப்பவர்கள் விளங்கிக் கொள்ளலாம்.

தன் படங்களில் வரும் மன்ஸ்டர்களின் கன்சப்ட் ஆர்ட்களை அவரே வரைந்து வைத்திருப்பது வழக்கம். அந்த மாதிரி ஸ்ட்ரைனுக்காக பல வடிவங்களை செய்து வைத்திருந்தார். அவற்றின் அடியிலிருந்தே மன்ஸ்டர்கள் உருவாக்கப்பட்டன. இது பற்றிய ஒரு பேட்டியை இங்கு காணலாம்.

The Strain, எல்லோருக்கும் பிடித்தமான சீரிஸாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சில எபிசோட்கள் தேவையில்லாமல் இருக்கின்றது. அடுத்த எபிசோடை எதிர்பார்த்து பார்க்கக் கூடிய அளவு சஸ்பன்ஸ் இல்லை. டெல் டோரோ சஸ்பன்ஸ் வைக்கும் ஆசாமி அல்ல. ஆனாலும் இம்மாதிரியான typical series elements இல்லாமல் போகும் போது பெரும்பான்மை ரசிகர்களை கவர முடியாமல் போவது யதார்த்தம். ஆனாலும், எம்போன்ற எண்பதுகளின் ஹாரர் திரைப்பட ரசிகர்களுக்கும், வெம்பயர்கள் என்றால் இரத்தம் குடிக்க வேண்டும் லவ் பண்ணக் கூடாது என்பவர்களுக்கும் இது ஒரு உன்னத சீரீஸ். This isn’t a best series, but definitely this is my kinda series.

ஸ்ட்ரைன், டெல் டோரோவின் 20 வருட உழைப்பு. பழம்பெரும் தொன்மங்களை சிந்தாமல் சிதறாமல் கைகளில் பொத்திக் கொண்டுவந்து நம் கண்முன் விரிப்பவர்.

Advertisements

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s