Viy (2014)

kinopoisk.ru

முற்றிலும் எதிர்பார்க்காத படமொன்று. கடைசியாக ரஷ்ய திரைப்படமொன்று பார்த்த நினைவில்லை. அன்ந்ரே தர்கோவ்ஸ்கியின் சில படங்கள் தவிர்த்து. உலக சினிமா வரலாற்றில் ரஷ்ய சினிமாவின் பங்களிப்பு அளப்பரியது.

நாட்டார் மரபுகளில் (Folklore), ரஷ்ய நாட்டாரியலில் ஏராளமான தேவதைக் கதைகளும் (Fairy Tales) நாட்டார் மரபுக் கதைகளும், இன்னும் ஏராளமான மன்ஸ்டர்கள், Creatures, சூனியக்காரிகள், ஜராவ்னாக்கள், இவான்கள் இருக்கின்றன. ரஷ்ய நாட்டாரியல் எனும்போது, சோவியத் ஒன்றியத்தில் இருந்த அத்துனை நாடுகளின் கதை மரபுகளும் உள்ளடங்குகின்றன.

கம்யூனிஸ ரஷ்யா பென்டஸி, மெஜிகல் ரியலிஸம் போன்ற மாற்று படைப்பாக்க முயற்சிகளை ஒடுக்கி யதார்த்தவாத இலக்கியங்களையே ஊக்குவித்து வந்தது. முதலாளித்துவத்தின் யதார்த்தவாதம் அங்கு சோசலிச யதார்த்தவாதமாக உருமாறியது. லத்தின் அமெரிக்க இலக்கிய உலகு, அங்குள்ள பாரம்பரிய நாட்டார் மரபு கதைசொல்லலில் இருந்து மாபெரும் கலை இலக்கியங்களை உருவாக்க, ரஷ்யா யதார்த்தவாத இலக்கியத்திலேயே தேங்கி நின்றது. லத்தின் அமெரிக்க நாட்டார் மரபு, மந்திர மாயாஜால மரபுக் கதைசொல்லல் உலகு போன்றே சோவியத்திலும் செழுமைமிக்க நாட்டார் மரபுகள் இருந்துவந்திருக்கின்றது. (Formalism என்ற இலக்கிய கோட்பாடு ஒன்று மழுங்கடிக்கப்பட்ட அவலமும் ரஷ்யாவில் நிகழ்ந்தது). அந்த பிரச்சினைக்கு போகவேண்டாம்.

Baba Yaga with her iconic புள்ள புடிக்கிற moment
Baba Yaga with her iconic புள்ள புடிக்கிற moment

பேய்களும், மன்ஸ்டர்களும், சூனியக்காரிகளும், Creaturesகளும் கொண்டமைந்த அதியற்புத மரபைக் கொண்டது சோவியத். உலகப் புகழ்பெற்ற “சூனியக்காரி பாபா யாகாவும்” இங்குதான் தோன்றினாள்.

இந்தப்பின்னணியில் உக்ரைன் நாட்டு புனைவெழுத்தாளர் Nikolai Gogol எழுதிய “வீ” (Viy or Vee) என்ற ஹாரர் சிறுகதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பென்டஸி திரைப்படமே “வீ”. Nikolai Gogol இன் முதலாவது manuscript ஐக் கொண்டு, திரைக்கதையாக மாற்றி, பல உபகதைகள், ரஷ்ய நாட்டார் மரபுகள் என்று பல விடயங்களை சேர்த்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வரைபடவியலாளன் (Cartographer) ஜானதன் க்ரீன், தனது வரைபட “அறிவியல்” பணிகளுக்காக மேற்கு ஐரோப்பாவில் இருந்து, கிழக்கிற்கு பயணிக்கின்றான். இதன் போது திகிலின் தலைநகரம் ட்ரான்சில்வேனியாவைக் கடந்து உக்ரைனில் இருண்ட வனத்துக்குள் அடைபட்டுகிடக்கும் ஒரு ஊரை வந்தடைகிறான். அவ்வூரைச் சேர்ந்தவர்கள் அவன் கண்ட உலகில் எப்பகுதியினரையும் சாராதவர்களாகவும், மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடப்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களை பிழையாக ஒரு போலி கிருஸ்தவப் பாதிரி வழிநாடாத்துகிறான். தீயசக்திகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவே இவர்கள் இந்த பாதிரியையும் அவனது புதிய மதத்தையும் பின்பற்றுகின்றனர். ஆனால், தீயசக்திகள் அந்த ஊருக்கு அடியில் குடிகொண்டு இருப்பது அவர்களுக்குத் தெரியாது.

கதை பல உபகதைகளை கொண்டிருப்பதால் நீளமாகவும் இருக்கின்றது. நாட்டார் கதைகளும் அவ்வாறுதானே? நாட்டார் கதைகளின் பண்புகளில் (கூறுகளில்) ஒன்று அவை கதையின் போக்கில் கிளைவிட்டுச் செல்வது. அந்தப் பண்பை இத்திரைப்படத்தில் பயன்படுத்த முயற்சி செய்திருக்கின்றார்கள்.

இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்ட கதை இன்னும் சுவாரஷ்யமானது, அது பற்றி இந்த லிங்கில் படித்துக்கொள்ளலாம்.

http://en.wikipedia.org/wiki/Viy_(2014_film)#Production

இந்த பென்டஸி திரைப்படத்தைப் பார்க்கும் போது டிம் பர்டனின் ஸ்லீபி ஹலோ, கியர்மோவின் மன்ஸ்டர்கள் ஞாபகத்துக்கு வந்து போயிற்று. ஆனால், அவற்றின் சாயலோ, தழுவலோ இல்லை. ரஷ்ய நாட்டார் மரபுகளில் இருந்து இவ்வாறான திரைப்படங்கள் இன்னும் வருமானால், பென்டஸி விரும்பிகளுக்கு நல்லதொரு விருந்தாகவே அமையும்.

பாபா-யாகா பற்றி ஒரு தனிப்பதிவு வரும்!!!

Advertisements

5 comments

  1. செம இன்ட்ரோ பிரதர். விரிவாக படிக்க, படத்தை பார்க்க சுண்டிஇழுக்கிறது

  2. இப்போது எனக்கு படத்தை பார்ப்பதைவிட இந்த தகவல் சேகரிப்பின் மீது அதிக ஆர்வம் வருகிறது. நல்ல பதிவு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s