சந்திரனில் மர்மம்!!!

The-First-Men-In-The-Moon-007

எப்பவும் கண்ணுக்கு முன்னால் இருக்கும் விடயங்களை விட, கண்ணுக்கு தெரியாமல் மறுபுறத்தில், இருண்ட பக்கங்களில் புதைந்து போயிருக்கும் மர்மங்கள்தான் மனிதனுக்கு எப்பொழுதும் ஒருவித த்ரில்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

நிலவில் மனிதக் காலடி, யுகப்பாய்ச்சல் என்று சொல்லப்படும் அதே தருணத்தில், இது திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒரு நாடகம் என்றும் conspiracy theory கள் கூறப்பட்டு வருகின்றன. நமக்கு விஞ்ஞானத்தை விட விஞ்ஞானத்தின் மறுபக்கம்தான் மிகவும் ஈர்ப்பாக உள்ளது.

வரலாற்று நிகழ்வுகளை வைத்து அதன் இன்னொரு “புனைவு பக்கத்தை” சொல்லும் புனைவுகள் ஏராளம் இருக்கின்றன. உதாரணத்திற்கு Abraham Lincoln: The Vampire Hunter என்ற திரைப்படத்தில், ஆப்ரஹாம் லிங்கனின் மறுபக்கம் வெம்பயர்களால் ஆன ஒரு உலகாக விரியும். லிங்கன் ஒரு வெம்பயர் ஹன்டராக சித்தரிக்கப்பட்டிருப்பார். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம், லிங்கனின் உண்மை வரலாற்று நிகழ்வுடன் பொறுந்திப் போவதாக இது இருக்க வேண்டும். இன்னொரு உதாரணம், Apollo 18 என்றொரு விண்வெளி found footage horror திரைப்படம் வந்தது. அதில் சந்திரக் கற்களுக்கு என்ன ஆனது? என்ற கேள்வியை இன்னொரு புனைவுத் தளத்தில் வைத்து கூறியிருப்பார்கள். இவ்வகை புனைவுகளுக்கு Alternate History அல்லது Alternate Reality என்று கூறுவார்கள்.

விஞ்ஞானப் புனைவுகளின் தந்தை, பெரியப்பா, சித்தப்பா என்று அழைக்கப்படுபவர்கள் முறையே, Jules Verne, H.G. Wells மற்றும் Hugo Gernsback. இலக்கியத்தில் விஞ்ஞானப் புனைவுகளுக்கென்று பெரும் இடமுண்டு. ஹெச்.ஜீ. வெல்ஸின் கதைகளில் ஒன்றுதான் The First Men In The Moon. இரண்டு பேர், ஒரு விஞ்ஞானி மற்றும் வியாபாரி. ஒரு பெரிய உருண்டை வடிவ ஓடத்தில் சந்திரனுக்கு போவதைப் பற்றியும், சந்திர வெளியில் நடக்கும் சம்பவங்கள் பற்றியும் சுவாரஷ்யமாக சொல்லும் ஒரு விஞ்ஞானப் புனைவு. வெல்ஸின் பல படைப்புகள் திரைப்படங்களாக, நாடகங்களாக உருமாற்றம் பெற்றிருக்கின்றது. இன்னும், மீள் புனைவாக்கம் செய்யப்பட்டும் இருக்கின்றது.

the-first-men-in-the-moon-006

H.G. Wells இன் படைப்புகள் சில,

  • கால யந்திரம் – The Time Machine
  • டாக்டர் முரேயின் விபரீதத் தீவு!!! – The Island of Doctor Moreau
  • அரூப மனிதன் – The Invisible Man
  • சந்திரனுக்கு ஒரு பாலம் – The First Men In The Moon.

(எப்புடி நம்ம மொழிபெயர்ப்பு???)

இப்படி ஒரு பெரிய லிஸ்டே போடலாம், அந்தளவுக்கு எழுதிக் குவித்திருக்கிறார் மனிதர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கதைகள் என்பதால், நிறைய கதைகள் out dated science fiction வகையறாக்களில் அடங்கிவிடும். அதாவது, நவீன “மூளையை” வைத்து யோசித்தால் கெக், கெக், கெக் என்று சிரிப்புதான் வரும். சந்திரனுக்கு ஒரு பாலமும் கொஞ்சம் அப்படியான கதைதான். என்றாலும், Mark Gatiss இன் The First Men In The Moon. திரைப்படத்தில் அந்த குறையை, alternate history என்ற கன்சப்ட்டுக்குள் கொண்டுவந்து அருமையானதொரு அனுபவமாக மாற்றிவிடுகிறார்.

first_men_moon_dvd_300

இத்திரைப்படம், 1969 ஜுலை மாத, மனித சரித்திரத்தில் யுகப்பாய்ச்சலாக பதிவு செய்யப்பட்ட நாளில் துவங்குகிறது. மக்கள் அனைவரும், மனிதன் சந்திரனுக்கு பயணம் செய்வதை பார்க்க ஆவலாக தயாராகிக் கொண்டிருக்க, ஒரு டென்ட்டில் பழைய “கினிமடோக்ராப்” கருவியை வைத்துக் கொண்டு ஒரு கிழம் யோசித்துக் கொண்டு இருக்கின்றது. ஒரு சிறுவன் எதேச்சையாக உள்ளே வர, அவனிடம் இந்த வயதான கிழவர் தன் கதையை விவரிக்கிறார். எல்லோரும் இன்றுதான் சந்திரனுக்கு மனிதன் முதன் முறையாக செல்லப் போகிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் சந்திரனில் முதன் முறையாக காலடி வைத்தவன் நான்தான் என்கிறான் அந்த கிழவன். இதைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், நான் செட் வைத்துத்தான் இதையெல்லாம் எடுத்தேன். போலி நாடகம் என்று கூறிவிடுவார்கள். (கவனிக்க, conspiracy theory) இல்லை, பரவாயில்லை நீங்கள் கூறுங்கள் நான் நம்புகிறேன் என்கிறான் சிறுவன்.

கதை விரிகிறது.

ஒரு இடிந்து போன எழுத்தாளன் ப்ளஸ் உடைந்து போன வியாபாரி. ஒரு நட் கழன்ற விஞ்ஞானி. இரண்டு பேரின் அறிமுகமும், பரஸ்பரமும் ஒரு விபரீத விண்வெளிப் பயணத்திற்கு இட்டுச் செல்கிறது.

விஞ்ஞானி காவர் (Prof. Cavor) ஒரு வித anti-gravity திரவத்தைக் கண்டுபிடிக்கிறார். சின்னச் சின்ன பொருட்களை அலேக்கா பறக்கவிட்டு தன் ஆராய்ச்சியில் திருப்தி கண்டுகொள்கிறார். வியாபாரி பெட்போர்ட், இப்படி சின்னதாக யோசிக்காமல் பெரிதாக ஏதும் செய்யலாம் என்று யோசனை சொல்கிறான். அவன் மண்டையில் மிகப் பெரும் பாரங்களை எளிதாக தூக்கும்படி செய்தால் ஆட்களுக்கு விற்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கனவு. பெரிதாக யோசிக்கும் நட் ப்ராபஸர் மண்டையில் சந்திரப் பயணம் உதிக்க, தவிர்க்க முடியாமல் பயணத்தில் கலந்துகொள்கிறான் பெட்போர்ட்.

சந்திரனில் இருக்கும் சந்திரவாசிகள் (Selenites), அவர்கள் வசிப்பது சந்திரனுக்கு வெளியே அல்ல உள்ளே. இன்னும் அவர்களது ஓடம், அதற்குள் நடக்கும் சம்பாசனைகள், சந்திரனில் காற்று எவ்வாறு இல்லாமல் போனது? 1969 விண்வெளி பயணத்தின் சில துணுக்குகள், கனவுக் காட்சியை ஜோர்ஜஸ் மெலிஸின் Voyage to the Moon திரைப்படத்துக்கு tribute, என்று திரைப்படம் சுவாரஷ்யமானதாக இருக்கின்றது.

இது BBC தொலைகாட்சிக்கென்று எடுக்கப்பட்ட திரைப்படம். ஒருவகையில் வெல்ஸின் கதையை அப்படியே எடுத்தாலும் அதனை alternate history மூலம் கதையுடன் ஒன்ற வைத்துவிடுகிறார் Mark Gatiss. படத்தைப் பார்க்கும் போது, அந்தகால விஞ்ஞானப் புனைவுத் திரைப்படங்களுக்குள் ஒரு நினைவுப் பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. படத்தை எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் நிச்சயம் ஒரு சுவாரஷ்யமான அனுபவத்தைக் கொடுக்கும். கடைசியாக ஒன்று வசனங்களை உன்னிப்பாக கவனித்துக்கொள்ளவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s