Crooked House (Mini Series)

516rt87iZ4L

காதிக் ஹாரர் கதைகளின் சூழல் (Atmosphere) திகிலுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியதாக இருக்கும். கருங்கல் வீடுகள், கறுப்பு நிறம், லந்தர் விளக்குகள், வீதியோர விளக்குகள், பனிமூட்டத்தினூடே “டக் டக்” குதிரை வண்டிகள், வெள்ளை ஆடை பெண்கள், பைப் புகைக்கும் கனவான்கள்… என்று அந்த சூழலில் ஒருவித இருண்மை இருக்கும்.

எட்கர் அலன் போ, எம். ஆர். ஜேம்ஸ் போன்றவர்களின் கதைகளில் இவ்வாறான சூழல்களை அவதானிக்கலாம். இவர்களின் கதைகளில் சொல்லப்படும் விதமும் சரி, முடிவும் சரி பயமுறுத்துவதாகவே இருக்கும். அலன் போவின் “டெல் டேல் ஹார்ட்” கதை நகர்ந்து செல்லும் போக்கு, பயத்தினால் இதயம் வேகமாக துடிப்பது போன்று இருக்கும். கதையின் முடிவும் நாம் எதிர்பாராத இன்னொறு பீதியை எமக்குள் உருக்கொள்ளச் செய்யும். மேட்னஸ் என்று சொல்வார்கள் இவர்களது கதைகளை.

ஆரம்ப நாட்களில் பிரிடிஷ் கவ்ன்சிலில் மெம்பராக இருந்த போது அலன் போ, எம்.ஆர். ஜேம்ஸ் போன்றவர்களின் கதைகளை படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து க்ளாசிக் விக்டோரியன் கால திகில் கதைகளில் அதிக நாட்டம் ஏற்பட்டது. அலன் போவின் கதைகளில் மனிதனின் பயம் என்ற ஆதார உணர்வு விரிவாக அலசப்படும். அதுவும் மிக மெதுவாக. எம்.ஆர். ஜேம்ஸின் கதைகளில் வரும் ஆவிகள், supernatural begins எல்லாம் ஒரு வித “Madness” உடன் சித்தரிக்கப்பட்டிருக்கும். இந்த மேட்னஸ் என்கிற வார்த்தையை ஏன் அடிக்கடி பிரயோகிக்கிறேன் என்றால் அந்த “பேயெழுத்தை” எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. Tales of Mystery and Madness என்று அலன் போவின் தொகுப்பொன்று இருக்கின்றது.

அப்படியே கொஞ்சம், 70களில் வெளிவந்த பிரிடிஷ் திகில் திரைப்படங்கள், திகில் திரைப்படங்கள் சராமரியாக வந்து கொண்டிருந்த காலகட்டம் அது. Hammer Films, Amicus Films என்று இதற்கென்றே கடா வெட்டி நேந்து விடப்பட்ட ஸ்டுடியோக்கள் இருந்தன. இவர்களது வேலையே இரத்தம் தெறிக்கும் (அந்த கால இரத்தம் pink கலர்) காட்சிகளுடன், கிறிஸ்டோபர் லீயின் கோரைப் பற்களும் திரையெங்கும் வியாபித்திருக்கும் திரைப்படங்கள் இக்காலகட்டத்தில் அதிகம் வெளிவந்தன. டிராகுலா திரைப்படங்களே நூற்றுக்கணக்கில் வந்திருக்கும். (அவற்றில் ஒன்று கூட தேறாது, அது வேறு விடயம்) இத்திரைப்படங்கள் பெரும்பாலும் அலன் போ, எம்.ஆர். ஜேம்ஸ், ப்ராம் ஸ்டாகர் முதல் Penny Dreadful (அதாவது இந்த ஏடு ஒரு பெனி) என்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த பல்ப் கதை ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்ட கதைகளைக் கொண்டும் இவை உருவாக்கப்பட்டன.

சரி, இந்த இரண்டு பின்னணிகளையும் உள்வாங்கி Mark Gatiss உருவாக்கிய மூன்று பாக மினி சீரிஸ்தான் இந்த Crooked House.

Crooked House, மூன்று ஒன்றுக்கொன்று தொடர்பான கதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டா பிரிடிஷ் தொலைக்காட்சித் தொடர். இது பீ.பீ.சியில் வெளிந்தது.

Geap Manor என்ற ஒரு வீட்டில் நடக்கும் சம்பங்களுடன் தொடர்பான மூன்று கதைகள் இந்த சீரிஸில் அடக்கம். கதையின் ஆரம்பத்தில் ஒரு மியூசிய பொறுப்பாளரிடம் (Curator) ஒரு Door Knocker ஐ எடுத்துக் கொண்டு வருகிறான் ஒருவன். அந்த door knocker ஐயும் அதனுடன் தொடர்பான சம்பவங்களையும் இவனுக்கு கூறுகிறார் அந்த curator. இவ்வாறு இரண்டு பழைய கதைகளும், கடைசியாக சமகாலத்தில் நிகழும் ஒரு கதையும் இந்த மினி சீரிஸில் இருக்கின்றது. இந்தக் கடைசிக் கதையுடன் கீப் மெனரின் நிகழ்வுகளுக்கு ஒரு conclusion வைக்கப்பட்டிருக்கின்றது.

இது நிச்சயம் எல்லோருக்கும் விருப்பமான சீரிஸாக இருக்கும் என்று சொல்ல முடியாது. விக்டோரியன் காலகட்ட பேய்க்கதைகளில் நாட்டமுள்ளவர்கள் இதனை நாடலாம்.

குறிப்பு: Mark Gatiss இன் உருவாக்கத்தில் வந்த Jekyll ஒரு சிறந்த மினி சீரீஸ் எனலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s