Resolution: A Cabin in the Woods

download

அமெரிக்க திகில் திரைப்படங்களில் ஒரு பத்து திரைப்படங்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். சரியா! அதில் விகிதாசாரப்படி பத்துக்கு எட்டு திரைப்படங்களில் “நடுக்காட்டில் ஒத்தை வீடு” இருப்பது திண்ணம்.

திகில் திரைப்படங்களில் தொன்று தொட்டே இருந்து வரும் ஒரு விடயம்தான், இந்த தனித்த பங்களா, வீடு, கேபின்… இத்தியாதி, இத்தியாதி.

உலகை கலக்கிய திகில் சினிமாக்கள் என்றால் (பேய் சம்பந்தமான) முதலாவது, Evil Dead, அடுத்தது Exorcist. இப்பொழுதும் உலக திகில் திரைப்பட வரலாற்றில் முக்கியமான திரைப்படங்களாக கணிக்கப்படுபவை இத்திரைப்படங்கள். Evil Dead திரைப்படமும், நடுக்காட்டில் தனித்து இருக்கும் ஒரு கேபினை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கும்.

இம்மாதிரியான படங்களின் கதை கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகவே இருக்கும். கொடுக்கப்படும் விதத்தில்தான் ஏனைய படங்களில் இருந்து மாறுபட்டு காணப்படும்.

விடுமுறையை கழிக்கவரும் சில இளசுகள், (மூணு பையன், ரெண்டு பொண்ணு) நடுக்காடு, ஒற்றையடிப்பாதை (இது போதும் எனக்கு, இது போதுமே, வேறெண்ண…), தனித்த வீடு, சுற்றுவட்டாரம் தொன்னுத்தாறு கிலோமீற்றருக்கு எந்த உதவி ஒத்தாசைகளும் இருக்காது. (இருந்தா கிக் ஏது?)

சமான்களை வண்டியில் இருந்து இறக்கிக் கொண்டிருக்கும் போது, ஒருத்தருக்கு (பெரும்பாலும் ஒருத்திக்கு) விசித்திரமான சத்தம், அமானுஷ்ய உணர்வு ஏற்படும். கேங்கில் யாரும் நம்ப மாட்டார்கள். அல்லது அவள், “No… just, nothing, never mind” என்று சொல்லிவிடுவாள். அப்பவே நம்பியிருந்தால், பேசாமல் பெட்டி படுக்கைகளை கட்டிக் கொண்டு ஓடியிருக்கலாம். அமெரிக்கன் படமாச்சே, “அமெரிக்க குடிமகன், குடிமகள், குழந்தைகள் அனைவரும் FBI ஊழியர்கள்” என்ற கோட்பாட்டுக்கு இணங்க கதை மேலும் நகரும்.

வீட்டினுள், ஒரு பூட்டப்பட்ட அறை, அண்டர்க்ரவுண்ட் ரகசிய அறை, பூட்டப்பட்ட ஒரு பெட்டி, தோலினால் அட்டைப் போடப்பட்ட புத்தகம், என்று ஏதாவது “திறக்கக் கூடாத மர்ம” பொருட்கள் இருக்கும். திற! என்பதுதான் அவை சொல்லும் பில்லி சூனிய மந்திரம். இவை விடுவிக்கப்பட்டவுடன், தொடர்தேச்சையான அமானுஷ்ய நிகழ்வுகள், மரணங்கள் நிகழ. கடைசியில் ஹிரோ, ஹிரோயின் தப்பிப்பிழைக்க. சுபம். கறுப்பு திரை வந்து ஒரு நொடியும் ஆகியிருக்காது… க்ர்ர்ர், கொர்ர்ர், ஊஊஊஊஊஊ இப்படி ஏதாச்சும் SFX உடன் படம் முடியும். பார்ட் 2.

இவ்வளவுதான், இந்தவகை திகில் திரைப்படங்களின் டெம்ப்ளேட். நிற்க.

அப்படியிருந்தும், அசத்தலாக எடுத்து வெளிவந்த திகில் திரைப்படங்களும் இல்லாமல் இல்லை.

MV5BNTUxNzYyMjg2N15BMl5BanBnXkFtZTcwMTExNzExNw@@._V1_SX640_SY720_

இம்மாதிரியா பல திரைப்படங்களின் “க்ளிஷேக்களை” மற்றும் கதைத்தளங்களை உள்வாங்கி, பகிடி செய்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான், The Cabin in the Woods. அரதப் பழசான கதைத்தளத்தை தூசுத்தட்டி எடுத்து, அட்டகாசமாக எடுக்கப்பட்ட திரைப்படமிது. மர்மங்களை பின்னியமைக்கப்பட்ட திரைக்கதையின் மூலம், பல திகில் திரைப்படங்களை திகிலுடனேயே பகிடி செய்துள்ளது. கமெடியள்ளாத பகிடி, புரியலியா? எனக்கும்தான் புரியல.

The Cabin in the Woods ஆரம்பத்தில் சாதாரண பேய் திகில் திரைப்படமாக போனாலும், படிப்படியாக மர்ம ஆய்வகம், அதில் இந்த கேபினை கட்டுப்படுத்தும் செயற்பாட்டாளர்கள், என்று விஞ்ஞான புனைவு தளத்திற்கு நகர்கிறது. அப்படியே போனால், மறுபடியும் அதிரடி திருப்பங்கள்… கடைசியில் ஒட்டுமொத்த திகில் திரையுலகத்திற்கே வைப்பார்கள் ஒரு ஆப்பு! அங்கதான் படம் அட போட வைக்கிறது.

மறுபடியும் நிற்க.

இது The Cabin in the Woods திரைப்படத்தைப் பற்றிய பதிவல்ல. ஆனால், அதே போன்று ஒரு கதைத்தளத்தை வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு Indie திரைப்படம்தான் Resolution. 2012 இல் வெளியாகிய இத்திரைப்படத்தை இயக்கியவர்கள், Justin Benson மற்றும் Aaron Scott Moorhead.

இரண்டு நண்பர்கள் பற்றிய கதை. போதைபொருளுக்கு அடிமையான நண்பனை மீட்பதற்காக போகிறான், மற்றவன். அவன் இருக்கும் இடம் பற்றிய தகவலை அவனே ஈ-மெயில் (வீடியோ) மூலம் அனுப்புகிறான். குறித்த இடத்தை அடைந்த பின்னர் நடைபெறும் சம்பவங்களே மீதிப்படம். இப்படி சிம்பளாக சொல்லிவிட்டதால், படமான்றும் சாதாரண திகில் படமல்ல.

இத்திரைப்படத்தின் முக்கிய அம்சம், என்னதான் மர்மம் என்று யோசிக்க விடுவதேயில்லை. திகில் திரைப்படங்களில் முக்கிய விடயமாக இருப்பது “மர்ம ஆசாமிகள்”, ஒரு பாரில் வயதான ஒருவர் இருந்து கொண்டு, இளசுகளை பயமுறுத்துவார். ஒரு ஷெரீபாக இருப்பார். வயதான பாட்டி… இப்படி பலர் இருப்பார்கள். இவர்கள் திரைப்படத்தில் அவ்வப்போது தலைகாட்டி கதையின் போக்கை தீர்மானிப்பவர்களாக இருப்பர். ஆனால், இந்த திரைப்படம் அந்த க்ளீஷேவை எடுத்துக் கொண்டு, கதையின் போக்கை தீர்மானிக்கும் பாத்திரம் ஒரே ஒரு தடவை மாத்திரம் வருவதாக அமைத்திருக்கின்றனர். இது ஒரு இடத்தில் அல்ல இரண்டு மூன்று இடங்களில் நடக்கின்றது. ஒரு காட்சியில்… வேணாம்.

திகில் திரைப்படமொன்றை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணம், என்னைக் கேட்டால் இத்திரைப்படத்தைத்தான் சொல்லுவேன். திகிலையும், சஸ்பன்ஸையும் கச்சிதமாக பொருத்தி எடுக்கப்பட்ட திரைப்படமிது.

Found footage பாணியிலான திரையாக்கம். அதுவே படத்தில் ஒரு பாத்திரமாகிறது. அல்லது அதுவே கதையாகவும் பயணிக்கின்றது. சுத்த ஜீனியஸ்தனம்.

இத்துடன் முடித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு வரியாக டைப் செய்ய எத்தனிக்கும் போது படத்தின் முக்கியத்தளங்களை சொல்லிவிடுவேனோ என்ற பயம்.

திரைக்கதை, ஒளிப்பதிவு, காஸ்டிங் எல்லாம் மிகக்கச்சிதமாக பொருந்திவருகிறது.

திகில் திரைப்படத்தில், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு இவையனைத்தும் கதையாகவே இருக்க வேண்டும். கதையிலிருந்து துருத்திக் கொண்டோ, அல்லது மேம்போக்காகவோ இருந்துவிடக் கூடாது. அப்படியிருக்கும் பட்சத்தில் மேற்கூறிய ஏதாவது ஒன்றிற்காக மாத்திரமே பயம் ஏற்படும். மாறாக இம்மூன்றும் ஒருங்கே அமையும் பட்சத்தில்… பயம் நெஞ்சில் விதையும். வளரும்.

Advertisements

4 comments

  1. அட்டகாசமான அறிமுகம் படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டுகிறது.

  2. Cabin in the Woods அட்டகாசம். அதேமாதிரியான கதைக்களம் என்றா நிச்சயம் இதையும் பார்த்தாகனும் !

    //திகில் திரைப்படத்தில், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு இவையனைத்தும் கதையாகவே இருக்க வேண்டும். கதையிலிருந்து துருத்திக் கொண்டோ, அல்லது மேம்போக்காகவோ இருந்துவிடக் கூடாது.// (Y)

    • Cabin in the Woods ற்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது… இது அந்தளவுக்கு அருமையாக எடுக்கப்பட்டிருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s