Jekyll (Mini Series)

“I learned to recognise the thorough and primitive duality of man; I saw that, of the two natures that contended in the field of my consciousness, even if I could rightly be said to be either, it was only because I was radically both.”

“All human beings, as we meet them, are commingled out of good and evil: and Edward Hyde, alone, in the ranks of mankind, was pure evil.”

– Robert Louis Stevenson, The Strange Case of Dr. Jekyll and Mr. Hyde

jekyll_bbc_dvd

ராபர்ட் லுயிஸ் ஸ்டீவன்ஸன், ஆர். எல். ஸ்டீவன்ஸன். விக்டோரியன் எழுத்தாளர். இவர் எழுதிய கதைகள் புகழ்பெற்றவை. க்ளாஸிக். இவர் எழுதிய கதைகளில் அதிகம் பிரபலமான கதைகள் மூன்று, Treasure Island, Kidnapped மற்றும் The Strange Case of Dr. Jekyll and Mr. Hyde. முதலிரண்டு கதைகளில் இருந்தும் மாறுபட்டு, விசித்திரமான ஒரு திகில் கதையாக ஜிகில், ஹைட் கதை திகழ்கின்றது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், நல்லவன் கெட்டவன் என்கிற இரண்டு பாத்திரங்கள் உண்டு. அவற்றை தனித்தனியாக பிரித்தால் என்னவாகும் என்பதே இந்தக் கதையின் சாரம்.

டாக்டர் ஜிகில், மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை வெளிக்கொனர எடுக்கும் முயற்சியில், ஒரு முழு கெட்டவனை, மிருகத்தை, pure evil உருவாக்கி விடுகிறார். இந்த கதை ஒரு துப்பறியும் கதைப்பாணியில் சொல்லப்படுகிறது. கதை கடைசிவரை யார் அந்த ஹைட் என்று தெரியாமலேயே செல்கிறது. அதாவது கதையில் வரும் பாத்திரங்களுக்கு. கடைசியில் மிருகத்தை அழிக்க, ஜிகில் தன்னைத் தானே சுட்டுக்கொல்வதுடன் கதை முடிகிறது. இறுதிவரை மனிதனில் இருக்கும் மிருகத்தை அவர் எவ்வாறு வெளிக்கொனர்ந்தார் என்பதை காட்டுவதில்லை. அந்த ரகசிய பானம் இன்றுவரை மர்மமாகவே இருக்கின்றது. இதே போல் இன்னொரு கதையிலும், ஒரு அறிவியல் ரகசியம் பற்றி கடைசிவரையிலும் சொல்வதில்லை. அதுதான் மேரி ஷெல்லியின் ப்ராகின்ஸ்டீன். அந்த கதையிலும் உயிர் உருவாக்கத்தின் ரகசியத்தை, டாக்டர் ப்ராகின்ஸ்டீன் சொல்வதில்லை.

நிற்க.

இந்த விக்டோரியன் கால கதையை மையமாக வைத்து, அதன் பின்னணியை மீள் புனைவு செய்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மினி தொலைக்காட்சி தொடர்தான் Jekyll. BBC நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு, ஆறு பாகங்களாக 2007 இல் ஒளிபரப்பாகியது.

ஜிகில் வம்சாவழியைச் சேர்ந்த ஒருவன், இன்று அதே குணாதிசயங்களை கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? இந்த ஒன்லைனை வைத்துக்கு கொண்டு, மர்மம், சைகலாஜி, கொலை, சஸ்பென்ஸ் என்று தொடரை கொண்டு சென்றிருக்கிறார்கள். கதையை எழுதியிருப்பவர் ஷெர்லாக் புகழ் Steven Moffat.

Steven Moffat மற்றும் Mark Gatiss இருவரும் நவீன கால ஷெர்லாகை உருவாக்கியவர்கள். படு இன்டலிஜன்ட்டான எழுத்து இவர்களுடையது. ஜிகில் தொடரைப் பார்க்கும் போது இதனை உணராலம். கச்சிதமாக பின்னப்பட்டுக் கொண்டே வரும் புதிர்களும், விக்டோரியன் கால க்ளாஸிக்குகளை நவீனகாலத்துக்கு ஏற்ற விதத்தில் மாற்றி மீள் புனைவாக்கம் செய்வதிலும் இவர்கள் இருவரும் விற்பன்னர்கள். ஜிகில், ஷெர்லாக், சமீபத்தில் வந்த எம். ஆர். ஜேம்ஸின் பேய்க்கதை என்று விக்டோரியன் காலத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் கங்கனம் கட்டிக் கொண்டு இருவரும் அழைகிறார்கள். சுருக்கமாக சொன்னால், BBC யை போட்டு வாங்கு வாங்குனு வாங்குகிறார்கள்.

கதைக்கு வருவோம், James Nesbitt இவர்தான் ஜிகில் மற்றும் ஹைட்டாக பைத்தியம் பிடித்து அழைந்து கொண்டிருக்கிறார் கதை முழுவதும். இவரைச் சுற்றிதான் கதை நிகழ்கிறது. விழித்தால் ஜிகில், தூங்கினால் ஹைட். ஜிகில் ஒரு விஞ்ஞானி, ஹைட் “கெட்ட பய சார் இந்த காளி”.

கதைக்கு வருவோம் என்று சொன்னேன் இல்லியா? அப்படி கதையை சொன்னால் பார்ப்பவர்களுக்கு எந்த சஸ்பன்ஸும் இருக்காது, இன்னொரு காரணம் நானொரு சோம்பேறி.

தொடரை ஷெர்லாக் மாதிரி எதிர்பார்த்து பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். காரணம் இது வேகமாக செல்வதில்லை, James Nesbitt ஐத் தவிர மற்றவர்கள் கொஞ்சமாகத்தான் நடிக்கின்றார்கள். ட்ராமடிக் தன்மை கொஞ்சம் அதிகமாக இருக்கு (மிகவும் கொஞ்சம்). அதற்காக மோசமான சீரீஸ் என்று இல்லை. அமெரிக்கத்தன டீவி சீரீஸ்களுக்கு மத்தியில் இது ஒரு அருமையான மிஸ்டரி, சஸ்பன்ஸ், த்ரில்லர்.

Robert Louis Stevenson
Robert Louis Stevenson

ஆனால், இந்த தொடரைப் பார்ப்பதற்கு ஸ்டீவன்ஸனின் கதையை படித்திருக்க வேண்டும். அநேகமானோர் படித்திருக்கும் நாவல்தான். கொஞ்சம் கதைப்பற்றிய பின்னணியும் அறிந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

கடைசியா Steven Moffat, Mark Gatiss மற்றும் BBC யை கேட்டுக்கொள்வது என்னவென்றால், இன்னும் அதிகம் அதிகம் இதே போன்ற சீரீஸ்களை உருவாக்கி கலக்க வேண்டும். இன்னும் M.R. James, EAP போன்ற விற்பன்னர்களை மீள் புனைவாக்கம் செய்து சமூக தொண்டாற்ற வேண்டும். டீலா நோ டீலா?

Advertisements

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s