Afflicted (2013)

Afflicted-poster-web

Found footage / Travelogue வகையில் வெளிவந்திருக்கும் ஒரு வெம்பயர் திரைப்படம். வெம்பயர் என்றால், பழைய பஞ்சாங்கம் அல்ல. கொஞ்சம் மாறுபட்ட விதத்தில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம். எப்படியென்று பிறகு சொல்கிறேன்.

இரண்டு நண்பர்கள் (Derek Lee and Clif Prowse), நிஜ வாழ்விலும் இவர்கள் திரைப்பட (குறும்படங்கள்) இயக்குனர்கள். தாங்கள் போகும் பயணத்தை படம் பிடித்து, அவ்வப்போது இணையத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். டெரெக்கிற்கு மூளையில் ஏதோ ஒரு நோய். உயிர் வாழப் போவது எத்தனை நாள் என்பதனை கணக்கிட்டுக் கொண்டிருப்பவன். அதன் காரணமாகத்தான், இந்த சாகஸ பயணத்தை மேற்கொள்கிறான்.

உலகம் முழுக்க சுற்றுவதாக திட்டம். ஆனால், பாரிஸ் நகரில் ஒரு பெண்ணை சந்தித்த பின்னர் கதை மாறுகிறது. டெரெக்கிற்கு சில symptoms தோன்றுகிறது. திரைப்படத்தில் இது படிப்படியாக காட்டப்படுகிறது. இணையத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்களை பார்த்துவிட்டு, பார்வையாளர்கள் ஒவ்வொரு காரணங்களை சொல்கிறார்கள். அசூர பலம், வேகம் என்று அவனது உடல் மாற்றத்துக்கு உள்ளாகிறது. ஒரு பக்கத்தில் எதையும் சாப்பிட முடியாமல் அவதிப்படுகிறான். ஒரு கட்டத்தில் டெரெக், தனது கையில் இருந்து வடியும் இரத்தத்தை நக்குவதைப் பார்த்துவிட்டு. Commenters’ இது வெம்பயர் symptoms எனக் கூற, கதை அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. அவனுக்கு இரத்தம் தேவை. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் மீதி.

இது ஒரு independent film (or student film). அசல் வெம்பயர் கதைகளின் சாரத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஒரிஜின் திரைப்படத்தை எடுத்து இருக்கிறார்கள். அதுவும் found footage வடிவில். ஹாரர் திரைப்படங்களுக்கு புதிய அடையாளமாக இருப்பது இந்த found footage திரைப்படங்கள்.  இதன் இயல்பு தன்மை, அதாவது hand-cam, non-professional, நம்பகத்தன்மை போன்றவற்றினால் ஹாரர் திரைப்படங்களுக்கு ஏற்ற வடிவமாக இருக்கின்றது. மிக முக்கியமாக திடுக் எஃபெக்ட்களுக்கு அதிகம் பயன்படும் உத்திகள் இந்த வகையில் அதிகம். Blair Witch Project தான் இந்த found footage வகையறாவுக்கு ஆரம்பம் எனச் சொல்லலாம். Paranormal Activity வந்ததுதான் தாமதம், அதன் பின்னர் எக்கச்சக்கமாக found footage திரைப்படங்கள் வரத்துவங்கி விட்டன.

இத்திரைப்படங்களில் காணப்படும் மிகப்பெரிய குறை என்னவென்றால், கதையை நாம் தான் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் காலப்போக்கில் புத்திசாலித்தனமான திரைக்கதையால் இது படிப்படியாக முன்னேற்றமடைந்தது.

Afflicted, found footage திரைப்படங்களின் குறை – நிறைகளை அறிந்து கொண்டு, அதற்கேற்ப திரைக்கதையை அமைத்து வெற்றி கண்டிருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். திரைக்கதையின் ஓட்டத்திலேயே கதையும், பாத்திரத்தின் நோக்கமும் விளக்கப்படுகின்றது. அடுத்து சீரியஸான ஒரு வெம்பயர் கதைப் பின்னணி அல்லது ஒரிஜின் அலசப்படுகிறது.

மாற்று வெம்பயர் திரைப்படங்கள் சமீப காலங்களில் அதிகம் எடுக்கப்படுகிறது. நாஸ்பெராடு போன்ற ஒரிஜினல் மாஸ்டர் பீஸ்களுக்கும், சமீபமாக வந்த Thirst (Korean), Let the Right On In, Byzantium போன்ற வித்தியாசமான வெம்பயர் கன்சப்ட்டுகள் உடன் வெளிவந்த படங்களுக்கும் இடையிலான காலம், ரொமான்ஸ் விட்டுக் கொண்டு இருக்கும் வெம்பயர் லவர்களின் காலமாகவே இருந்தது. Finally vampire tales are on the right track.

இந்த திரைப்படத்தின் கதையும், Cronos மற்றும் Thirst திரைப்படங்களின் ஒன்லைனும் கிட்டத்தட்ட ஒன்று. இவ்விரண்டு திரைப்படங்களில் இருந்தும் இது எவ்வாறு வேறுபடுகிறது என்றால், அதன் மேக்கிங்கினால் மாத்திரமே.

முக்கியமாக குறிப்பிட்டு சொல்லக் கூடிய விடயம், ஒளிப்பதிவும், லொகேஷன்களுமே. ஹாரர் திரைப்படங்களுக்கு ஏற்ற விதத்திலும், ஏற்கனவே வந்த ஹாரர் திரைப்படங்களுக்கு மாற்றமாகவும் இது எடுக்கப்பட்டுள்ளது. Camera கோணங்கள் எல்லாம் அங்கும் இங்கும் அழைகின்றது.

குறையென்று வரும் போது, நடிப்புதான் பிரச்சினையாகிறது. இவர்கள் இருவரும் தொழில்சார் நடிகர்கள் இல்லையென்பதால் பிரச்சினையை அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம்.

Found footage – Horror combination இல் ஒரு அருமையான திரைப்படம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s