Blade II: காட்டேரி வேட்டையன்

nh6niat1-blade2_movies_635x400

காமிக்ஸிலிருந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களில், அசல் காமிக்ஸ் உணர்வை கொடுத்த திரைப்படங்கள் வெகுசிலவே. அந்தவகையில் Frank Miller இன் Sin City, காரணம் மில்லர் ஒரு காமிக்ஸ் கலைஞர். இன்னொன்று கியேர்மோ டெல் டோரோவின் Blade II.

என்னடா 2002 இல் வெளிவந்த படத்தைப் பற்றி இப்போ விமர்சனம் செய்கிறானே என்று யோசிக்கத் தேவையில்லை. பேயெழுத்து, திகில்தான் அதன் அடிப்படை. ஏனைய படங்கள், பதிவுகள் எல்லாம் விதிவிலக்குகள்தான். இங்கு பதியப்படும் படங்கள் பார்த்தவையாக, எல்லோருக்கும் தெரிந்தவையாகக் கூட இருக்கலாம். இன்னொரு மிகப் பிரதானமான காரணம் இந்த twilight series தாங்க முடியல. வெறும் டீன் ஏஜ் காதல் அலப்பறைகளுக்கு வெம்பயர் சாயம் பூசப்பட்டு வெளிவந்து கோடிக்கனக்கான பிரதிகள் விற்பனையாகி சாதனைப் படைத்த ஒரு pulp fiction. ப்ராம் ஸ்டாகரின் டிராகுலாவில் அடிநாதமாக இருந்த நூற்றாண்டு கால காதல் – விரகம், அற்புதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அன்றைய கால கட்டங்களில் erotic எழுத்து முறைகளுக்கு ஏராளமான தடைகள் இருந்ததால் ஸ்டாகர், இப்படி ஒரு உத்தியை பயன்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், டிராகுலாவின் அடிநாதம் பயம்தான் என்றும் ஒருசாரார் குறிப்பிடுகின்றனர். நான், இரண்டாவது கருத்தில்தான் உடன்படுகிறேன்.

ப்ராம் ஸ்டாகரின் டிராகுலாவிற்கு பிறகுதான் உலகம் முழுக்க இரத்தக் காட்டேரி பீதி தொற்றிக் கொண்டது. ஆனால், உண்மையில் அதற்கு முன்பிருந்தே வெம்பயர் கதைகள் வெளியாகியிருக்கின்றன.

இந்த twilight series ஏன் கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியது? என்று கேட்டால், இன்றைய உலகம் ரொம்ப சுருங்கிப் போய்விட்டது என்றுதான் கூறமுடியும். அது வியாபார அரசியல் தந்திரம். அசல் திகில், வெம்பயர் விரும்பிகளுக்கு இது கண்டிப்பா ஒத்தே வராதா புத்தகங்கள். பென்டஸி வகை இலக்கிய பிரதிகளுடனும் சேர்க்க முடியாது. Twilight ஐ தொடர்ந்து வந்த அல்லது அதன் வெற்றிக்கு பிறகு புகழ்பெற்ற pulp எழுத்துக்களின் மூலம், என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? என்ற சிந்தனைதான் மேலெழுகிறது.

இது ஒரு வித்தியாசமான சூழல். தீவிர இலக்கியம், கொஞ்சம் தீவிரம் குறைந்த இலக்கியம், இலக்கியம், ஜனரஞ்சக இலக்கியத்திலும் தரமானதாக வரும் இலக்கியம், மூன்றாந்தர இலக்கியம்… என்று வெவ்வேறாக பிரிக்க முடியாமல் எல்லாவற்றையும் ஒரே தராசில் வைத்து அளவிடப்படும் சூழல் உருவாகியிருக்கின்றது. சினிமாவிலும் இதே கதைதான். எழுத்துலகில் வித்தியாசங்கள் தகர்க்கப்பட்டு – ஒரு எடக்கு மடக்கான காலம் உருவாகியிருக்கின்றது. மாற்று சினிமா, சினிமாவின் மூலம் சமூக மாற்றத்தை, புரட்சியை, கலகத்தை ஏற்படுத்த முடியும் என்ற எண்ணக்கருக்கள் இன்று கேள்விக்குள்ளாகி வருகிறது. இந்த பின்நவீன உலகம் (அப்பாடா கடைசியா நானும் இந்த வார்த்தைய பாவிச்சிட்டேன்) எப்படியானதாக மாறியிருக்கிறது? கேள்விகளை மாத்திரம் முன்வைத்துவிட்டு படத்துக்குள் செல்வோம்.

blade_25

Reapers என்ற புதுவகை இனம் நகருக்குள் பரவி வருகின்றது. அவை வேட்டையாடுவது வெம்பயர்களை. வெம்பயர் உலகம் இவற்றை அழிக்க Blade இன் உதவியை நாடுகிறது. இதுதான் படத்தின் ஒருவரிக் கதை.

Reapers

படத்தின் ஆரம்பமே ஒரு வெம்பயர் இரத்தவங்கியில் இருந்து துவங்குகிறது. இரத்தவங்கி என்றால், வெம்பயர்களின் இரத்தப் பசிக்கு மனிதர்களின் இரத்தத்தை வாங்கி விற்பது.

Blade உலகம் பற்றி அறியாதவர்களுக்கு, மனிதர்களின் உலகம், அசுத்தமான வெம்பயர்கள், சுத்த வெம்பயர்கள் (Pure Blood) இவற்றுக்கு நடுவில்  Blade, வெம்பயர்களால் Daywalker என்றழைக்கப்படும் காட்டேரி வேட்டையன்.

ஒரு அந்நியன், இரத்தம் வழங்க இரத்த வங்கிக்கு வருகிறான். பேச்சின் இடையே இவனுக்க சொந்த பந்தம், அடையாளங்கள் இல்லை என அறியவருகிறது. பயந்துகொண்டே உள்ளே நுழைய, அவனது இரத்தத்தை பரிசோதிக்கும் வெம்பயர் வியாரிகள். உன்னோட இரத்தம், வித்தியாசமாக இருக்கு, நல்ல விலைக்கு விற்கலாம். என்ற தொனியில் பேசிக் கொள்கின்றனர்.

பயந்த மாதிரி நடிக்கும் அந்த அந்நியன். திடிரெனப் பாய்ந்து அத்தனை வெம்பயர்களையும் குரூரமாக கொன்றுவிடுகிறான். அப்படியே சர்வைலன்ஸ் கேமராவை நோக்கி,

I hate vampires… (I hate Edward)

Reapers இந்த புது வெம்பயர் இனம் ப்ளேட் உலகிற்கும் புதிது, சினிமா உலகிற்கும் புதிது. New Line Cinema விடம்தான் ப்ளேட் உரிமைகள் இருக்கின்றது. 2002 காலகட்டங்களில் New Line Cinema மிக மிக முக்கியமான படத்தில் தங்கள் கவனத்தை குவித்துக் கொண்டிருந்த சமயம்தான் இந்த படத்தை இயக்க கியேர்மோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த படம்தான், The Lord of the Rings. கம்பனிகாரர்களுக்கு, ப்ளேடை கவனிக்க நேரமிருக்கவில்லை. என்னமோ பண்ணிக்கொள்ளுங்கப்பா என்று தயாரிப்பாளர்கள் காசைப் போட்டுவிட்டு The Lord of the Rings ஐ வேடிக்கை பார்க்க கிளம்பிவிட்டார்கள். ஏற்கனவே, Mimic கொடுத்த கடுப்பில் இருந்து மறுபடியும் ஸ்பானிஷ் சினிமாவுக்கே சென்றுவிட்டவருக்கு, இது பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்டது.

Blade II, கியேர்மோவுக்கு Lab Rat போன்ற ஒரு படம். என்னவெல்லாம் செய்துபார்க்க நினைத்தாரோ, அடுத்த படமான ஹெல்பாய்க்கு தேவையான பயிற்சிகள் என்று ஒரு experimental laboratory மாதிரி படத்தை உபயோகித்துக் கொண்டார். Reaper வெம்பயர்கள் நீண்ட காலமாக டெல் டோரோவின் notebook இல் இருந்த கன்சப்ட். அதையும் படத்தில் சரியாக பயன்படுத்திக் கொண்டார். சொல்லப்போனால் படத்தின் ஹைலைட்டே இந்த Reaper தான்.

வாய் நாடியில் ஒரு கோடு மாத்திரம் (Scar) இருக்கும். உடலில் முடி இருக்காது. இதயம் எழும்பு போல் கடினமாக இருக்கும். சாதாரண வெம்பயர்களைக் கொல்வது போல் இவற்றைக் கொல்ல முடியாது. எப்பொழுதும் இரத்தப்பசி இருந்து கொண்டேதான் இருக்கும். ஏனைய வெம்பயர்கள் வாரத்துக்கு ஒருமுறை என்றால் இவற்றுக்கு தினமும் இரத்தம் தேவை. அதுவும் வரையறைகள் கிடையாது. வாய் நாடி, அப்படியே பிளந்து பூப்போல் விரிந்து கடித்துக் குதறும் காட்சி, திகில்.

blade2_reaper-bust_03

மேலுள்ள படம், Reaper இன் மாடல் பொம்மை. இப்போ புரிகிறதா? நாடி, நரம்பு, நாளம், இரத்தம் எல்லாம் திகிலில் ஊறிப்போன ஒருவரால் மாத்திரமே இம்மாதிரியான மன்ஸ்டர்களை உருவாக்க முடியும். (உபயம்: ஜானகிராமன்)

இதே Reaper Concept ஐ மையப்படுத்தியதாகத்தான் கியேர்மோ டெல் டோரோவின் The Strain (Novels) இல் வரும் வெம்பயர்களின் தோற்றம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த கோடை விடுமுறைக்கு The Strain டீவி சீரீஸ் வரவிருக்கிறது. அட்றா!

டெல் டோரோவிடம் நடிகர்களை தேர்வு செய்வதில் வித்தியாசமான ஸ்டைல் இருக்கும். ஹெல்பாயில் ரான் பெர்ல்மன், இவரைத்தான் இந்தப் பாத்திரத்துக்கு போட வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தவர். விளைவு படத்தில். அதேபோல் ப்ளேட் 2 வில், Nomak ஆக நடித்திருப்பவர் Luke Goss. இவர் அவ்வளவு பிரபலமானவரும் அல்ல. ஹெல்பாயில் Prince Nuada ஆக நடித்திருப்பவரும் இவரே. Ron Perlman, Luke Goss, Doug Jones (Pale Man, Fuan) என்ற மன்ஸ்டர்களுக்கான நடிகர் தேர்வு ரொம்ப freakish ஆக இருக்கும்.

Monster களின் மீது பித்துபிடித்தவர் டெல் டோரோ என்பது அவரது பென்டஸி உலகை அவதானிப்பவர்கள் புரிந்துகொள்ளலாம். ஏனைய ஹாலிவூட் மன்ஸ்டர் படங்கள், ஹாரர் படங்கள் எல்லாம் மூன்றாம்தர சினிமாக்கள் என்ற வரையறைக்குள்ளே காலகாலமாக இருந்து வந்திருக்கின்றது. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சினிமா மேதமையை டெல் டோரோவின் படங்களில் காணலாம்.

Blade2Blade

Marco Beltrami

Nomak இன் அறிமுகக்காட்சிக்குப் பிறகு டைடில் போகும். அதன் போது Blade தனது கதையைக் கூறுவான். அப்ப அதிரடியாக இறங்கும், Marco Beltrami இன் தீம் இசை. Marco Beltrami யுடனான, டெல் டோரோ பயணம் Mimic, Blade II, Hellboy என்று போனது. பெரும்பாலும் டெல் டோரோ தனக்கென்று ஒரு ஆஸ்தான டீமை வைத்திருப்பவர். அதில் Marco Beltrami யும் ஒருவர்.

ஒளிப்பதிவு

கியேர்மோவிடம் ஒரு கெட்ட பண்பு இருக்கின்றது. ஒளி (நிறங்கள்) என்று வரும் போது யார் பேச்சையும் கேட்கமாட்டார். அதில் அவரது தீர்மானங்கள் என்றும் அற்புதமான அனுபவமாகவே இருக்கும். பொதுவாக பகல் காட்சிகளுக்குப் பாவிக்கப்படும் நிறக்கலவையை Blade II இல் இரவுக் காட்சிகளுக்குப் பயன்படுத்தியிருப்பார். எல்லாம் தலைகீழ். இதற்குக் காரணம், வெம்பயர்களின் உலகம் இருளின் உலகம். இரவுதான் அவர்களுக்குப் பகல்.

கதைசொல்லல் பாணி, அல்லது மேக்கிங்.

இந்த படத்தில் David S. Goyer இன் Blade கதைக்கு ஏற்ப, காமிக்ஸில் உள்ளபடியே காட்சிப்படுத்தியிருப்பார். அதாவது காமிக்ஸ் வடிவை ஒத்ததாக படம் இருக்கும். Action Sequence எல்லாம் ஜப்பானிய Anime ஸ்டைலில் இருக்கும்.

Wesley Snipes பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டிய ஒன்று. அவர்தான் ப்ளேட். அவ்வளவுதான். மார்வெல்லின் ப்ளேட் பாத்திரத்துக்கு அவரைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை.

டெல் டோரோ படங்களில் Special Effects, Production Design எல்லாம் பெரும்பாலும் அவர் கை நேரடியாக பங்குபற்றியிருக்கும். காரணம் முதலில் அவர் Special Effects கலைஞராகத்தான் பணியாற்றியிருந்தார். அவர் எடுக்கும் கதைகளுக்கு Special Effects அத்தியாவசியமான ஒன்றாக இருக்கின்றது. அதனால் அவற்றை கற்றுக்கொண்டார். இன்னுமொருவரும் Special Effects, Production Design இவற்றில் விற்பன்னர், அவர்தான் Peter Jackson. இருவருக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்றால் கியேர்மோ டெல் டோரோ ஒரு ஜீனியஸ், விஷனரி. ஹாபிட் திரைப்படம் அவர் இயக்குவதாகத்தான் இருந்தது. அந்த நேரங்களில் Smaug (டிராகன்) ஐ உருவாக்க 800 வருட டிராகன் தொன்மங்களை வாசிப்பு செய்திருக்கிறார். தொன்மங்கள், நாட்டார் மரபுகளில் ஆழமான பரிட்சயம் இருந்தால் மாத்திரமே இம்மாதிரியான மாஸ்டர் பீஸ்களை உருவாக்க முடியும்.

ஏன் ப்ளேட்?

இந்த handsome vampires தொல்லை தாங்க முடியல…

af029c14c0ba49a90267139e643cb969d28576df9f1f7a4c3af7cb3617440513

We need a Blade Reboot தல!

Advertisements

One comment

  1. தல நீங்க குறிப்பிடுற படத்துல ஒருசிலதுதான் பார்த்து இருப்பேன் அதுல இதுவு ஒன்னு ….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s