Yeti (Abominable Snowman)

yeti_by_seb_m-d33e9kr

Yeti, அல்லது நேபாளி மொழியில் மலை மனிதன். தொன்ம உயிரினங்கள் போன்றல்லாமல், இருக்கா இல்லையா? என்ற suspect list இல் இருக்கும் ஜீவன். புதுமைபித்தன் கூற்று ஒன்று ஞாபகம் வருகிறது, பேய் இருக்கா, இல்லையா என்று தெரியாது ஆனால் பயமாக இருக்கு. அதே போல் இம்மாதிரியான மர்ம உயிரினங்களைப் பற்றி படிக்கும் போது, இருக்கோ இல்லையோ நல்லா இருக்கு இல்ல.

Cryptozoology என்ற ஒரு துறை இருக்கின்றது. அத்துறையில், இம்மாதிரியான விலங்குகளைப் பற்றிய அத்தனை விடயங்களையும் சேகரித்து, ஆய்வுட்குட்படுத்தி வருகிறது. இவையெல்லாம் கட்டுக்கதை, புரளி என்று ஒதுக்கிய பல அனாதரவான விலங்குகள் இந்த Cryptozoology எனும் உலகில் தஞ்சம் புகுந்துவிடுகின்றன.

பனிப்பிரதேசங்கள், எப்போதும் கனவில் வரும் அற்புத உலகமாகவே இருந்திருக்கின்றது. இலங்கையில் பனிப்பிரதேசங்கள் இல்லையென்பதாலோ என்னவோ? பனி சூழ்ந்த வனம், மலைகள், ஓநாய்கள், கழுகு, கரடி, மான் இனங்கள், மலையாடுகள்… நதிகள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கதைகள் மாத்திரம் இல்லாம் இருந்திருந்தால், பனிப்பிரதேசம் என்ற ஒன்று இருக்கின்றது என்பதே தெரியாமல் போயிருக்கும். அதில் முக்கியமானது, டின் டின்.

TinTin-in-Tibet-front-cover

டின் டின் கதைகளில், Tin Tin in Tibet என்றொரு காமிக்ஸ் கதை இருக்கின்றது. இமயமலைப் பகுதியில் விபத்துக்குள்ளான விமானமொன்றில் பயணித்த நண்பன் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பும் டின் டின், அவனைத் தேடி பயணமாகிறான். அந்தக் கதையில் யெடி வருகிறது. முக்கிய பாத்திரமாக. இங்கு குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முக்கியமான விடயம். யெடியை ஹிரோ, வில்லன் என்று சித்தரிக்காமல், அப்படியே புதிராக விட்டு வைத்ததே. கதைக்குள் இருக்கும் அரசியலை தவிர்த்து விடுவோம். ஆரம்பகால டின் டின் கதைகள் அதிக நிறவெறி, இனவெறி கருத்துக்களை கொண்டிருந்தது என்ற விமர்சனமும் இருக்கின்றது. டின் டின் கதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான கதையிது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் உலகம் முழுக்க யெடி பிரபலமானது. யெடி பற்றிய கதைகள், அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தது. யெடி பற்றிய நம்பிக்கைகள், பௌத்தத்திற்கு முந்திய கால கட்டங்களில் இருந்தே இமயமலைப் பகுதிகளில் இருந்து வருகின்றது, யெடி, ஒரு பழங்குடி கடவுகளாக இருக்கலாம் என்ற ஆய்வும் இருக்கின்றது. அப்படி இரண்டு மரபுகளில் யெடி, நேரடியாக யெடி என்ற பெயர் இல்லாவிட்டாலும் “ரோங் (Rong People)” மக்களின் மரபுகளிலும், “போன் (Bon)” என்ற பழங்குடி மரபிலும் யெடி போன்ற ஜீவன் இருந்து வந்துள்ளது. போன் இன மக்கள், இந்த “காட்டு மனிதனை” அவர்களது வழிபாட்டு நிகழ்வுகளில் போற்றி வந்திருக்கிறார்கள். அந்த ராட்ச மனிதக் குரங்கு (ape) கையில் பெரிய கல்லாயுதம் ஒன்றினை வைத்திருப்பதாகவும், அதனைக் கொண்டு பயங்க விசில் சத்தத்தை ஏற்படுத்துவதாகவும் நம்பிக்கை இருந்து வந்துள்ளது. இங்கு விசில் சத்தம் என்றால், ஜாலியாக நினைத்துவிடுவார்கள்… இன்னும் கொஞ்சம் விபரமாக சொல்வதென்றால், பனிப்புயலைக் கிழித்துக்கொண்டு சீறி வரும் ஓலம்.

இப்படிப்பட்ட பிண்ணனிகளை வைத்துக் கொண்டு, எப்படியெல்லாம் திரைப்படங்களை எடுத்திருக்க முடியும். கொடுமை என்னவென்றால், இதுவரையில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவொரு யெடி திரைப்படமும் வரவில்லை. வந்தது அவ்வளவும் ஏனோ தானோ என்றுதான் இருக்கின்றது. எல்லாத்தையும் நாமலே வந்து பண்ண வேண்டி இருக்கு.

கீழேயுள்ள இந்த யெடி… (அல்லது சைடில் உள்ள) ஓவியம், பற்றியும் ஒரு சில வார்தைகள். Deviantart (www.deviantart.com) என்றொரு fan art site இருக்கு, அது எல்லோருக்கும் தெரியும். Fan Art என்றாலும், அதிக சிரத்தை எடுத்து செய்திருப்பார்கள் ஓவியங்களை. அதில் எனக்கு பிடித்த ஏரியா, இந்த மன்ஸ்டர் படங்கள் இருக்கும் பகுதி. யெடியைப் பற்றி தேடும் போது, இந்த ஓவியம் கண்ணில் பட்டது. எல்லா concept art களிலும், இது சிறப்பாக இருக்கக் காரணம், யெடியின் மரபை அப்படியே பிரதிபலித்ததுதான். அந்த பௌத்த பிக்கு, யெடியை சந்திக்கும் கணத்தில்… அவர் உணர்வுகள் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நம் மனங்களில் சளனத்தை ஏற்படுத்தி யூகிக்க வைக்கிறது. அடுத்தது, யெடியின் இருப்பிடம், அது பற்றிய கதைகள் தோன்றிய இடம் பற்றிய தெளிவான பார்வையில் வரையப்பட்டிருக்கிறது. இந்த லிங்கில் இதனைப் பார்க்கலாம்.

சரி, இவ்வளவும் இன்று பத்திரிகையில் “இமயத்தில் இளஞ் சிவப்பு உப்பு கண்டுபிடிப்பு” என்ற செய்தியை படிக்கும் போது தோன்றிய விடயங்கள். சிவப்பு உப்புக்கும் யெடிக்கும் என்னய்யா சம்பந்தம் என்று சிந்திப்பவர்கள், கொஞ்சம் என்னைப் போல் எடக்கு மடக்கா யோசித்து காரணத்தை அறிந்துகொள்ளவும்.

குறிப்பு – ஜெ.மோவின் கதையொன்று இப்பிண்ணனியில் இருக்கின்றது. படித்ததில்லை. படித்த நண்பர்கள் அது பற்றிக் கூறவும். பெயர் பனி மனிதன், குழந்தைகளுக்கான இலக்கிய வகை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s