The Xenomorph

2900848-2862764-15265_aliens_xenomorph

முதன் முதலாக பார்த்து பயந்த திரைப்படம் எது? இந்தக் கேள்வியை கேட்டால் கண்டிப்பாக பதில் சொல்வது கடினமாகத்தான் இருக்கும். சிறுவயதில் யார்தான் திரைப்படத்தின் பெயர்களை மனப்பாடமாக்கி வைத்திருப்பார்கள். என்னைக் கேட்டால், அந்த அனுபவம் “ஏலியன்” திரைப்படத்தில் இருந்து என்பதை அடித்துச் சொல்வேன்.

எத்தனையாம் ஆண்டு என்று சரியாக நினைவில்லை. ஆனால் வயது பத்துக்குள்தான் இருக்க வேண்டும். வீட்டில் அப்போதிருந்த டீவியில், அதாவது டீவிப் பெட்டியில் அரசாங்க சேனலில் போட்டார்கள். ஏற்கனவே ட்ரைலர் போட்டுப் போட்டு ஆசையை கிளறிவிட்டதாலும் ஆர்வமாக காத்திருந்து பார்த்தேன். திரையில் தோன்றிய சிங்கள எழுத்துருக்கள் என்ன சொல்கிறது என தந்தையிடம் கேட்டால், “இதயம் பலவீனமானவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்கள் இத்திரைப்படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்” என்று போட்டிருந்தார்களாம். ஆனாலும் விடவில்லை, அடம்பிடித்து பார்த்தேன். அந்த முதல் 20 நிமிடங்கள் (சரியாக எத்தனை என்று தெரியாது) நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. சாப்பாட்டு மேசையில் அவன் கீரைகளை தின்றுகொண்டிருக்கும் போது, எதற்கு இவனையே காட்டுகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அவன் திணறினான். அவன் வாயில் கரண்டிகளை போட்டு திணிக்கும் போது, வயிற்றில் மெலிதாக ரத்தம் கசியும்… திடிரென பிய்த்துக் கொண்டு வரும் அந்த ஜந்துவை பார்த்தகணம்தான் வாழ்வில் முதன் முதல் அனுபவித்த திடுக் சந்தர்ப்பம். தந்தை அல்லது தாய் (படத்தைத் தவிர எதுவும் நினைவில்லை) பயமா இருக்கு இப்ப போய் படு என்று கூறினார்கள். கேட்கவில்லை, (அந்தகாலத்துலயே ஹாரர் மீது அப்படியொரு ஈர்ப்பு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்) படம் முடியும்வரை இருந்து பார்த்துவிட்டுதான் படுத்தேன். அப்படி, அந்த திரைப்படத்தில் பல இடங்களில் பயந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது.

alien_movie_poster

ஏலியன், இந்த பெயர் அந்தநாள் முதல் என்னை கவர்ந்தே வந்துள்ளது. அந்த creature இன் தோற்றமும், அதிபயங்கரமாக கொல்லும் செயற்பாடுகளும் என்னை மிகவும்… என்ன சொல்றது ஒன்னுக்குள்ள ஒன்னாயிட்டோம். மன்ஸ்டர்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும், இன்னொருத்தருக்கும் பிடிக்கும். அவர் ரொம்ப பேமஸ். அதிலும் பிரதானமாக இந்த ஏலியன்தான் முதலிலும் சரி இப்பவும் சரி ரொம்ப பிடித்துப் போனது. அல்லது அதற்கு என்னைப் பிடித்துப் போயிருக்க வேண்டும்.

இங்கு இன்னொன்றையும் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன், அதாவது சினிமா, கதைகளின் மன்ஸ்டர்கள் தவிர்த்து… நேரடியான சில அனுபவங்களும் உண்டு. அதெல்லாம் புனைவில். மன்ஸ்டர்கள் என்று இல்லை சில “உருவங்கள்” என்று வைத்துக் கொள்ளலாம்.

ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ஏலியன் வந்த ஆண்டு 1979. நம்ப முடியாது, அந்த காலகட்டத்தில் இப்படியொரு அசாத்தியம் நிகழ்ந்தது எப்படி. விண்வெளியின் Jaws என்று கூட சொல்வார்கள். ஆனால் Jaws ஐ விட ஏலியன் திகிலின் உச்சம் எனக் கொள்ளலாம். “In Space no one can hear you scream” என்ற திகிலின் அனுபவத்தை உணர வைத்த திரைப்படம்.

இத்திரைப்படம் நான்கு பாகங்களாக வந்தது. ரிட்லி ஸ்காட் எடுத்த முதல் பாகத்துடன், ஜேம்ஸ் கெமரோனின் ஏலியன்ஸ் நிறைவு பெறுவதாகவே இருந்தது. அதுதான் சரியும் கூட. ஆனால், ஹாலிவூட் வெறிபிடித்து அடுத்த இரண்டு பாகங்களையும் எடுத்தது. முதலிரு பாகங்கள் பெற்ற வரவேற்பை அவை பெறவில்லை. பிறகு இன்னொரு அரக்கத்தனமான மன்ஸ்டர் Predator ஐயும் சேர்த்து AVP எடுத்து ரிட்லி ஸ்காட் மற்றும் கெமரோன் இருவரின் வயிற்றெரிச்சலையும் வாங்கிக் கட்டிக் கொண்டனர். எப்படிச் சொல்வது திரையுலகில் எப்படி இரண்டு லெஜன்ட்களை ஒப்பிட முடியாதோ அப்படித்தான் ஏலியனையும் ப்ரேடேடரையும் ஒன்றாக பார்ப்பது. (ஆனால் Dark Horse காமிக்ஸில் இரண்டு மன்ஸ்டர்களையும் இணைத்து கதைகளை நகர்த்திச் செல்கிறார்கள்.)

முக்கியமாக இங்கு படத்தை பற்றி பேச வரவில்லை. பேசவந்தது, Xenomorph என்ற ஏலியன் life form பற்றி. (கன்பர்ம்டா இவன டாக்டர்கிட்ட காட்டவேணும்) Xeno என்றால் Stranger, Alien, Foreigner என்று அர்த்தப்படும் Morph என்றால் Shape, Form (உருவம், தோற்றம்) என்று அர்த்தப்படும். இரண்டும் கிரேக்க மொழி சொற்பிரயோகங்கள். பெயருக்குள்ளேயே விடயம் அடங்கியிருந்தாலும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

Alien-The_Chestburster

The Xenomorph, என்றால் (கொலைவெறி என்றும் பொருள் கொள்ளலாம்) வேற்றுகிரக endoparasitoid (ஒரு உயிரில் வாழ்ந்து, வளர்ந்த பின் அதற்கே ஆப்படிக்கும் இனம்) உயிரி. இது பல வாழ்க்கை வட்டங்களை கொண்டது. வண்ணாத்துப் பூச்சியின் வாழ்க்கை வட்டம் போன்றது. இது ப்ரோதியஸ் (Proteus) என்ற கிரகத்தில் தோன்றியது. அதிபயங்கரமான இந்த ஜந்து தனது இனத்தைப் பெருக்க அல்லது வாழ்க்கை வட்டத்தில் அடுத்தக் கட்டத்தை அடைய இன்னொரு உயிரில்தான் வளர்கிறது (Host). அதாவது ஒட்டுண்ணி என்று வைத்துக் கொள்ளலாம். என்ன வளர்ந்தால் உங்க உயிர் போயிடும் அவ்வளவுதான். இதன் தோற்ற அமைப்பு அது தங்கியிருக்கும் உயிரின் உயிரியலுக்கேற்பவே அமையும். உதாரணத்துக்கு மனித உயிரில் வளர்ந்த ஏலியன் அவனது தோற்றத்தை ஒத்ததாக இருக்கும் (ஏலியன்). அல்லது ஒரு நாயின் உடலில் host ஆக இருந்தால் அதன் தோற்றத்தை ஒத்ததாகவே இருக்கும் (ஏலியன் 3 அல்லது Alien Resurrection).

இதன் தோற்றம் மற்றும் கொலைவெறி மாத்திரம் கோரமாக இருந்தால் பிரச்சினையில்லை சமாளித்துவிடலாம். ஆனால், துரதிஷ்டவசமாக (நமக்குத்தான்) செம இன்டலிஜன்ட் மற்றும் அதிவேகமாக நகரக்கூடியது. அதான் படங்களில் சாகடிக்க ரொம்பவே கஷ்ப்படுகிறார்கள். நானாக இருந்தால் அந்தப் பக்கம் போகமாட்டேன். இந்த ஹாலிவூட்காரர்களைப் பற்றி தெரியும்தானே… எதற்கெடுத்தாலும் மூக்கை நுழைப்பதே வேலையாகப் போய்விட்டது.

aliens__xenomorph_evolution_by_hellraptor-d5588ih

Xenomorph இன் ஆரிஜின் பற்றி கடைசியாக வந்த Prometheus படம் கொஞ்சம் பேசுகிறது. முழுமையாக இல்லாவிட்டாலும் அவற்றின் “டிசைனர்ஸ்” யார் என்பது பற்றி கொஞ்சம் புரிந்துகொள்ளலாம். Mala’kak (என்ஜினியர்கள்) என்பவர்கள் உயிர் உருவாக்க செயற்பாட்டில் விட்ட கோளாறின் காரணமாக தோன்றியவை இந்த Xenomorph கள் என்பது ஒரு கதை. ஆனால் ப்ரோமேதியஸ் திரைப்படத்தில் இது சற்று மாற்றப்பட்டு எடுக்கப்பட்டிருக்கும். அதாவது Deacon என்கிற இனமே ப்ரோமேதியஸ் படத்தில் காட்டப்படுகிறது. Xenomorph இன் தோற்றத்துக்கு முன்னர் நடப்பதாக இது சித்தரிக்கப்பட்டுள்ளது.

Xenomorph கள் முன்பு அதிஉயர் அறிவு படைத்த இனமாக இருந்து வந்ததாகவும், பின்னர் ஒருவித தொற்று நோயால் அவற்றின் மூதாதையர்கள் அழிந்து பின்னர் இப்படியானதாகவும் ஒரு கதை இருக்கு. ஆனால், Mala’kak களின் விண்வெளி ஓடத்தில் எப்படி இந்த முட்டைகள் வந்தன? என்ற கேள்வி எழுகிறது. அதற்கான காரணம், Mala’kak கள் Xenomorph களின் கிட்டத்து சொந்தக்காரர்களாக இருப்பார்கள் அதாவது மூதாதையர்கள்.

AVP Universe இல் இருந்தே இவற்றின் ஆரிஜின் கதைகள் வருகின்றன. ஆசிட் இரத்தம், தேனீக்கள் போன்ற வாழ்வமைப்பு (ராணி ஒன்று இருக்கும்), மனிதர்கள் என்றாலே அலர்ஜி, ப்ரேடர்ஸ்களுடன் பங்காளிச் சண்டை என்று சுவாரஷ்யமான உலகைக் கொண்டமைந்தது இந்த யுனிவெர்ஸ்.

HR_Giger_2012

சரி, இப்பேர்பட்ட உலகை கண்டுபிடித்து அறிவியல் சேவை செய்த மேதை யார்? அவர்தான், H. R. Giger என்ற சர்ரியலிஸ ஓவியர். இவருடைய மூளையை கழற்றி ஆய்வு செய்ததில் ஆசிட் இரத்தம் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது. என்னவொரு அபாரமான ஆற்றல். ஏலியன் மற்றும் அதன் விசுவல் எஃபெக்ட்களை உருவாக்கியவர் இவரே. அதாவது ஏலியன் விண்ஓடம் எல்லாம் இவர் கைவண்ணமே. லவ்க்ராப்டின் பாதிப்பை இவர் படைப்புகளில் அதிகம் காணலாம். Necronomicon, என்ற லவ்க்ராப்ட் படைப்பின் பாதிப்பில் உருவானதே Necronom IV. இது ஒரு கன்சப்ட் ஆர்ட் சீரீஸ். அதிலிருந்து படிப்படியாக தனது வாழ்க்கை வட்டத்தை திரைப்படங்களில் மற்றும் வீடியோ கேம்களில் ஏலியன் பெருக்கிக் கொண்டது. Alien (Series), Promatheus, Poltergiest, Species போன்ற படங்களில் இவரது கைவண்ணத்தைக் காணலாம்.

திரைப்படத்தில் கன்சப்ட் ஆர்ட் என்பது எந்தளவுக்கு முக்கியம் என்பதும் அவை இல்லாமல் இருந்தால் படம் எவ்வளவு மொக்கையாக இருக்கும் என்பதும் தெளிவாக புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. முக்கியமாக, பென்டஸி, அறிவியல் புனைவு, திகில் (மன்ஸ்டர்) திரைப்படங்களில் இவை ஊன்றி கவனிக்கப்பட வேண்டும் இல்லையென்றால் பௌதீகவியலில் டிகிரி முடிக்க வேண்டி இருக்கும்.

இந்த Xenomorph என்ற உயிரியின் தோற்றம் (Origin), உயிரியல், அது செயற்படும் விதம், அதன் இன்டலிஜென்ட், வாழ்வியல்… என்று எமது பௌதீக உலகைப் போலவே உருவாக்கப்பட்டன. போல என்றால் அதே போல் அல்ல, இப்படியொரு ஜீவராசி இருந்தால் அவற்றின் பௌதீக உலகு எவ்வாறு இருக்கும் என்று யோசித்து பல்துறை அறிஞர்களிடம் விவாதித்து கற்பனையில் உதித்த கன்சப்ட்டுக்கு உயிர் கொடுக்கப்பட்டது.

பென்டஸி திரைப்படங்களை எடுத்துக் கொண்டாலும் இதே விதி பொறுந்தும். லார்ட் ஆப் த ரிங்ஸ் நாவல்களை எடுத்துக் கொண்டால் Middle Earth எப்படியிருக்கும், Arda எப்படி தோன்றியது, அவர்களின் மொழி, கலாசாரம், புவியியல், மொழியியல்… இன்னபிற எல்லாம் உருவாக்கபட்டு அவற்றிலேயே கதைகள் உலாவவிடப்பட்டன.

திரைப்படம் என்றால் இன்னும் மெனக்கெட வேண்டும்.

டைப் செய்து முடித்ததும்… அட இன்னும் நிறைய விட்டுவிட்டோமே என்று தோன்றுகிறது. பரவாயில்லை தேவையானவர்கள் கூகிளில் அடிச்சி தேடவும்.

காய்ச்சல், தடிமல் வந்தாலே புத்தி இப்படித்தான் சுத்தியடிக்கிறது.

Advertisements

4 comments

  1. தலைவருக்கு காய்ச்சல் என்றாலும் மற்றவர்களை சும்மா விடுவதில்லை…

  2. ஏலியன் படத்தையும் அதனை சார்ந்த நினைவுகளையும் கிளப்பிவிட்டது இந்த பதிவு.

    நன்றி ஒமார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s