4 Movie Reviews

சரி தனித்தனியா பதிவிடுவதை விட ஒரே போஸ்டில் போட்டு விடலாம். சினிமா, எப்படிச் சொல்வது? சினிமா அது சினிமா. ரொம்ப நாளைக்கு பிறகு பழையபடி ஒருநாள் விடாமல் படம் பார்க்க முடிந்தது. காரணம், இன்டர்நெட் கட். அப்படி இந்த வாரத்தில் பார்த்த படங்களை ஒரே பதிவின் மூலம் பார்த்து விடலாம் என்று நினைக்கிறேன். எந்தெந்த படங்களுக்கு தனிப்பதிவு தேவை என்று எழுதிக் கொண்டிருக்கும் போது விளங்கிவிடும்.

The Lake House (2006)

1848_7860.1 sheet_rev

Sandra Bullock, இவளுக்காகவே இந்த படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். காதல் – காத்திருப்பு இவையிரண்டும் காவியம் தொட்டு இன்று வரை இணைபிரியா கருவாக இலக்கியங்களில், சினிமாவில் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. என்ன அதையே தமிழ் சினிமாவில் ஓவராக காட்டி புனிதமாக்கி விடுவார்கள். காதலையும், காத்திருப்பையும் மையப்படுத்திய ஒரு டைம் ட்ராவல் திரைப்படம்.

ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு அருமையான காதல் திரைப்படத்தை பார்க்கக் கிடைத்தது சந்தோஷம். ஆனால், அந்த ஆர்வத்தில் வேறு எந்த காதல் திரைப்படங்களையும் பார்த்துவிடக் கூடாது. தெரியும்தானே.

இது பற்றி கருந்தேள்.

In the Mouth of Madness (1994)

mouth_of_madness_nocolor

John Carpenter, இவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். இரண்டாவது முறை பார்க்கும் போது பல விடயங்கள் விளங்கியது. ஸ்டீபன் கிங், லவ் க்ராப்ட் கலவை. புனைவுக்குள் ஒரு புனைவு. கிங்கின் கதைகளில் எழுத்து, எழுத்தாளர்கள், அதனுடன் சம்பந்தப்பட்டவர்களை சுற்றி நடக்கும் கதைகளுக்கு பிரதான இடமுண்டு. இது ஸ்டீபன் கிங் கதையில்லை என்றாலும் அவருடைய பாதிப்பு நிறைய தெரிகிறது.

ஆனால் இது ஒரு Lovecraftian Horror திரைப்படம். அவரது புனைவுலகை தழுவியே எடுக்கப்பட்டிருக்கிறது. கோரமான ஜந்துக்கள் அதிகம் சேர்த்திருக்கக் கூடிய கதைக்களமாக இருந்தாலும். Human Madness ஐயே மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. கார்பென்டரின் The Thing திரைப்படத்திலும் இதனை அவதானிக்கலாம். லவ்க்ராப்ட் கதைகளில் மேட்னஸ் இருக்கும். அவரை அதிகம் பாதித்த அலன் போ இதற்கு காரணமாக இருக்கலாம்.

அமெரிக்கன் ஹாரர் லவ்க்ராப்டில் இருந்தே துவங்குகிறது என்றும் சொல்வார்கள். லவ்க்ராப்ட் பற்றி நிறைய பேசலாம்… தனிப்பதிவுக்கு நேரம் வரட்டும்.

1994 படம் என்பதால் இப்போது பார்க்கும் போது சிரிப்பு வரலாம். கொஞ்சம் காலப்பயணம் செய்து பார்க்கவும். You need be to in the time to watch such films…

Dark Tales of Japan (2004)

Dark_tales_of_japan_dvd

தொலைகாட்சிக்காக எடுக்கப்பட்ட anthology திரைப்படம். மொத்தம் 5 கதைகள். ஒவ்வொன்றும் ஜப்பானிய நாட்டார் மரபில் இருக்கும் பேய்க்கதைகளை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பேயெழுத்தில் Kwaidan என்ற Anthology திரைப்படம் பற்றி கூறியிருக்கிறேன். அது ஒரிஜினல் கதைகள் என்றால் இவை தழுவி எடுக்கப்பட்ட கதைகள்.

ஒவ்வொரு கதையும் மயிர் கூசிடும் தன்மையுடன் இருக்கின்றது. எல்லாவற்றையும் விட இக்கதைகளை இணைக்கும் பஸ் பயணி ஒருவரின் கதைசொல்லல்… அட நீங்களே பாருங்க.

ஒரே ஒரு கதையை சொல்கிறேன்… சப்பாத்தை தட்டிவிட்டு போடச் சொல்வார்களே, ஏதேனும் ஜந்து உள்ளிருந்து கடித்துவிட்டால் அவ்வளவுதான். அப்படியான இடங்களில் இருந்து வரும் – உதாரணத்துக்கு வெடிப்புகள் – கை. மேற்கொண்டு சொல்வதற்கில்லை.

திரைப்பட உருவாக்க நேர்த்தி என்று பார்க்கும் போது ஏதோ குறைவது போல் தெரிந்தாலும், தொலைகாட்சிக்காக எடுக்கப்பட்டது என்பதால் அவ்வளவாக பிரச்சினையில்லை.

இந்த படத்தைப் பற்றி பேசும் போது “கதைசொல்லி” என்ற பாத்திரத்தை எமது கலாசாரத்திலிருந்து அழித்தொழித்துவிட்டோம் என்பது துலங்கும். கொஞ்சம் விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போம்.

Snowpiercer (2013)

snowpiercer-international-poster

Bong Joon-ho, இந்த பெயருக்கு சொந்தக்காரன் ஒரு கிறுக்கன். அதிரடி அறிவியல் அரசியல் அரைக்கிறுக்கு புரட்சித் திரைப்படம். தனியாகவே பதிவொன்றை இட்டு இதில் ஊடாடும் அரசியல் குறித்து நிறைய பேசலாம். ஆனால், அந்த மூட் இல்லை என்பதால் சுருக்கமாக பார்த்து விடுவோம்.

Le Transperceneige என்ற க்ராபிக் நாவலை அடியாகக்கொண்டு எடுக்கப்பட்டது இத்திரைப்படம். இம்மாதிரி புரட்சி கன்சப்ட்டுடன் ஏற்கனவே வந்த நாம் எல்லோரும் அறிந்த ஒரு திரைப்படம்தான் V for Vendetta. அதுவும் க்ராபிக் நாவலை மையமாக வைத்தே எடுக்கப்பட்டது. வென்டட்டாவின் சொந்தக்காரர் அலன் மூர், தன்னைத் தானே ஒரு அனாகிஸ்ட் என்று அழைத்துக் கொள்பவர். இந்நாவலிலும் சிந்தனைத் தாக்கம் இருக்கும். எங்க விட்டேன்.

Snowpiercer திரைப்படமும் அவ்வாறானதொரு பின்னணியுடைய கதைதான். கதைச் சுருக்கம் எனப்பார்த்தால், உரைநிலையில் இருக்கும் உலகில் மிச்சம் மீதியாக உள்ள மனிதர்களை தாங்கிக் கொண்டு ஒரு அதிவேக ரயில் உலகை சுற்றுகிறது. அந்த ரயிலை ஒரு நாடாக எடுத்துக் கொண்டால் (எந்த நாடாக இருந்தாலும் சரி செட்டாகும்) கீழ்த்தட்டு மக்கள், அடியாட்கள் அல்லது காவல்த்துறை அல்லது ராணுவம், பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் (உணவு, நீர்) முதலாளித்துவம், கல்வி – திட்டமிட்டு போதிக்கப்படும் கற்பிதங்கள் – வென்டட்டா படத்திலும் மக்கள் சிந்தனைகளை அரசாங்கம்தான் கட்டமைக்கும். ஒன்றுமே விளங்காமல் தருதலயாய் சுற்றும் மேற்டுக்குடி இளைஞர் கலாசாரம், அதுக்கு மேல் ஒரு அரசு… மறுபடியும் அந்த அரசு இயந்திரம் இயங்க அடித்தட்டு மக்கள் மாடாய் உழைக்க வேண்டும். இதுதான் இத்திரைப்படத்தில் மிகத் தெளிவாகவே முன்வைக்கப்படும் அரசியல். குறியீடு எல்லாம் ஒன்றும் இல்லை நேரடியாகவே இந்த அர்த்தத்தைத்தான் கொடுக்கிறது.

இவ்வாறான “ஒழுங்கை” களைத்துப் போடும் புரட்சி அடித்தட்டு மக்களிடமிருந்து வெடிக்கிறது. இங்கு புரட்சியைக் கூட அரசுதான் தீர்மானிக்கிறது என்கிற விடயமும் கடைசியில் புரியவருகிறது. இதனை சமகால அரபுவசந்தத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். (அமெரிக்க சதிவலை கைமீறிப் போனது வேறுவிடயம்)

இப்படியெல்லாம் இருந்தாலும் இத்திரைப்படமொன்றும் சமூக மாற்றத்தை கொண்டுவந்துவிடப் போவதில்லை. இது ஒரு Mass Entertainer, ஆனால் ஹாலிவூட் மசாலா குப்பையல்ல. இந்த வருடம் ஹாலிவூடில் ரிலீஸ் ஆகப் போகிறது, ஆனால் எந்தளவுக்கு எடுபடும் என்று தெரியாது. வென்டட்டாவின் ஹாலிவூட் வரவேற்பு எப்படியிருந்தது என்று தெரியும்தானே. சமீப காலமாக ஹாலிவூட் மீது கடும் எரிச்சலில் இருக்கிறேன்.

ரயில் வேகத்தில் நகரும் கதை.

இந்த படத்தை பார்த்தது கருந்தேள் விமர்சனம் படித்த பின்னர். இதோ…

அப்பாடா, முடித்துவிட்டேன். இப்போ எத்தனை வாக்கு கொடுத்து இருக்கிறேன் என்று பார்க்க வேணும்.

1. Lovecraftian Horror

2. கதைசொல்லி – ஜப்பானிய திகில் சினிமா

இது இரண்டும்தான் போலிருக்கு.

Advertisements

8 comments

 1. முதல் முறையாக இந்த லிஸ்ட்டில் இருக்கும் படங்களில் நான் பார்த்த படங்களும் இருப்பது கண்டு சந்தோஷம்.

  • எனக்கும் சந்தோஷம்… இதுக்கு பிறகு இப்படி நடக்காம பார்த்துக் கொள்றேன்… ஹி ஹி.

 2. இங்க பாருய்யா விஸ்வா.. இப்புடித்தான் நான் ஒரு காலத்துல இங்கிலிபீச்ல கிறுக்கும்போது கமெண்ட் பண்ணாரு.. 🙂

  Anyway, I cannot forget Lake house. Especially the Paul McCartney song. What a song !!

  • அந்த வடிவேலு கண்கலங்கி பாசத்தக் கொட்டுவாரே அந்த போட்டா கமெண்ட்ட ஞாபகப்படுத்திக் கொள்ளுங்க…

 3. //ஆனால், அந்த ஆர்வத்தில் வேறு எந்த காதல் திரைப்படங்களையும் பார்த்துவிடக் கூடாது. தெரியும்தானே.//
  ???

  Snowpiercer கருந்தேள் தளத்திலும் கேள்விப்பட்டு எப்படா பார்க்கலாம்னு வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். நேரம் கெடைச்சதும் அமுக்கிர வேண்டியதுதான் 🙂
  Dark Tales of Japan எவ்வளவு நிமிஷ கதைகள்னு சொல்ல முடியுமா? பார்க்கலாம் போல இருக்கு..

  • ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரி… சிலது சற்று பெரிது… ஆனா 10 – 15 நிமிடங்கள் இருக்கும்.

 4. இந்த ஐடியா நல்லா இருக்கு. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனியா பதிவு எழுதரத விட, 4,5 படங்களைச் சேர்த்து ஒரே பதிவா எழுதிரலாம்.. நானும் இதைக் கடைப்பிடிக்கிறேன்.

  btw, இதுல ஒரு படம் கூட நான் இன்னும் பாக்கலை. The Lake House கூட இன்னும் பாக்கலை. 😦

  • என்னது Lake House இன்னும் பாக்கலியா???? அப்ப நீங்க டைம் ட்ராவலர் இல்ல… 😛

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s