துப்பி துலக்குவோம்: திகில் சினிமாவின் க்ளிஷேக்கள்

Image

நெடுநாளாய் எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த விடயம். திகில் சினிமா எனும் போதே சில விடயங்கள் டக்கென்று மனதில் தோன்றி மறையும். இரவு, ஒரு பாழடைந்த வீடு, தனியே ஒரு பெண் (அழகிய), திடிர் திடிர் சப்தங்கள், கோர முகம்… என்று பலவற்றைக் கூறலாம். க்ளிஷேக்கள் மிக அதிகமாக இருக்கும் திரைப்படங்கள் என்றால் சந்தேகமேயில்லாம் திகில் படங்கள் என்று சொல்லலாம்.

குறுக்குமறுக்கு: திகில் சினிமாவின் உயிர் (சாவு) நாடியே இசைதான். இசையை மறந்து விட்டு இவ்வளவு பெரிய பதிவை எழுதிவிட்டேன் பின்னூட்டத்தில் பின்மண்டையில் தட்டிய அர்ஜித்துக்கு நன்றிகள். அதனால் இங்கு ஒரு தனி பந்தியை செருகுகிறேன். 

திகில் என்றாலே இசை என்பது அதிகப்படியான ஒன்றாகவே படுகிறது. சினிமாவில் ஒலி கலவை கண்டுபிடிக்கப்படும் முன்னர் மௌனயுக திகில் சினிமாக்களை எடுத்துக் கொண்டால் அதில் ஒலியை விட ஒளியே மிக முக்கியப்பங்கு வகித்தது. முர்னாவின் நொஸ்பராடு, வெய்னரின் கலிகரி போன்ற திரைப்படங்களே இதற்கு சாட்சி. ஜெர்மன் எக்ஸ்பரனிஸம் ஏற்படுத்திய அலை சினிமாவின் ஒளிப்பதிவில் அசாத்திய சாதனைகளை நிகழ்த்தியது. இந்த மாற்றம் திகில் சினிமாவிலேயே முதலில் நிகழ்ந்தது. 

பின்னணி இசை என்ற ஒன்று வந்ததுதான் தாமதம் திகிலுக்கு ஒரே குஷி. காரணம் சப்தங்கள்தான் பள்ஸை எகிற வைக்கும். வீட்டில் தனியே இருக்கும் போது ஏற்படும் சிறு சிறு ஒலிகள் கூட யாரோ டீடிஎஸ் சவுன்டை வீட்டில் செட் பண்ணி விட்டு இருப்பார்களோ என்ற சந்தேகம் வருமளவுக்கு இருக்கும். தனியே காட்டில் நின்று கொண்டிருக்கும் போது கேட்கும் விநோத ஒலிகள் என்று எம்மை திகிலடையச் செய்யும் சப்தங்கள் ஏராளம். இதற்கு காரணம் அவ்விதமான ஒலிகளை நாம் எங்கும் கேட்டிராததே. (உளவியலாளர்களிடம் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்). 

இப்படியாக திகில் சினிமாவிற்கு கிடைத்த வரமாகவே பின்னணி இசை அமைந்தது. க்ளிஷேக்கள் எனப் பார்த்தால் முதலாவது வருவது அதிர்ச்சி இசை ஷாக் ட்ரீட்மெண்ட் பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளின் சப்தங்களை வைத்து மிரட்டுவது. சமையல் கட்டின் தப்புத்தாளங்கள். க்ரட்ஜ் திரைப்படம் வந்ததுதான் வந்தது க்ர்ர்ர்ஆர்ர்ர்ர் நர நர சப்தத்தை காப்பியடித்து அடித்து நிறைய திகில் படங்களில் புகுத்தி சாதனை படைத்து விட்டார்கள். அப்பா போதும். (திகிலிசை என்று ஒரு தனிப்பதிவு வரும்)

முதலில் சில உலகப் புகழ் திகில் க்ளிஷேக்களைப் பார்த்துவிட்டு சிலபல விஷயங்களைப் பேசுவோம்.

1. We should split up – முட்டாள்த்தனமான கதாபாத்திரங்கள்

திகில் சினிமாவின் தவிர்க்கவே முடியாத க்ளிஷே, முட்டாள்த்தனமான என்றால் கதையின் மாந்தர்கள் எடுக்கும் முடிவுகள் அடிமுட்டாள்த்தனமாக இருக்கும். உதாரணத்திற்கு யாருமே இல்லாத வீடு, அதில் ஒரு கீழ் தட்டு அறை. சத்தம், க்ரீச் இன்னபிற அமானுஷ்யங்கள் எல்லாம் நடந்திருக்கும். ஏன் மிகவும் க்ளோஸான பாத்திரமே மண்டையைப் போட்டு இருக்கும் அப்பவும் அரைவேக்காட்டுத்தனமாக உள்ளே போவாள் ஒரு அழகிய பெண். We should split up என்று முடிவெடுக்கும் முட்டாள்களும் இருப்பார்கள். திரைப்பட உதாரணம் கிட்டத்தட்ட எல்லாப் படமுமே.

2. Shit… car isn’t starting – வண்டி ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ணுதல்

இதெல்லாம் சொல்லியா புரிய வைக்கனும். படத்தின் ஆரம்பத்திலிருந்து வண்டி நல்லாத்தான் ஓடிக்கொண்டிருக்கும் ஆனால் முக்கியமான தப்பித்தல் தருணத்தில் மாத்திரம் மக்கர் பண்ணும். அநேகமாக பக்கத்து சீட் பாத்திரத்துக்கு சங்கு ஊதப்படும். அது எப்பேர்பட்ட வண்டியாக இருந்தாலும் சரியே! The Texas Chainsaw Massacre படத்தை பார்க்க.

3. No Signal – Not Reachable – நல்ல மொபைலா வாங்குங்கய்யா

காலைல இருந்து பாய் ப்ரெண்ட் கூட நல்லாத்தான் பேசிக் கொண்டு வருவாள். அல்லது அம்மாவிடம் No mom… nothings gonna happen… yeah alright I got to go சொல்லிவிட்டு வரும் போதெல்லாம் சிக்னல் நல்லாத்தான் இருக்கும் கொலைக்காரன் அல்லது பிசாசு விரட்டிக் கொண்டு வரும் போது மட்டும் சிக்னல் இருக்காது. பெட்டரியும் கட்டையில் போக என்று ஒத்த கம்பாக நிற்கும். அடுத்த தடவை ஒரு புறாவை வாடகைக்கு பிடித்துக் கொள்ளுங்கள்.

4. The Ruiner – சுடுமூஞ்சி

எல்லாம் ஓகே. நல்லபடியா போற மாதிரி இருக்கும் ஆனா திரைக்கதைக்கு ஒரு ட்விஸ்ட்டு வேண்டும் இல்லியா? அதுக்கு ஒரு பாத்திரம், பொதுவாக கதையில் ஹிரோவோடு முட்டிக் கொண்டிருக்கும் பாத்திரம் ஒரு ஐடியா அல்லது முடிவெடுக்கும் அப்புறம் நடக்குறதே படத்தின் க்ளைமேக்ஸ். அதாவது அந்த பாத்தரம் உட்பட மீதி உள்ள அனைவரையும் காவு வாங்கும் ட்விஸ்ட். டோன்ட் வொர்ரி எப்படியும் 3 பேராச்சும் தப்பிச்சுருவாங்க. இரண்டுதானே என்று கேட்டால் அந்த மூன்றாவது ஆள் தயாரிப்பாளர் (ஸ்டூடியோ).

4. கொலையாளி அல்லது பிசாசு அல்லது அது

இதுகளுக்கு சாவே கிடையாது. கடைசி நிமிடத்தில் அல்லது க்ரெடிட் முடிந்த பின்னர் திடுக் காட்சி ஒன்றை வைத்து பார்ட் 2 வுக்கு ரெடியாகி விடுவார்கள். அப்புறம் என்ன 3, 4, 5 என்று ஓட்ட வேண்டியதுதான்.

5. Guest Appearance to Die

தப்பித்து ஓடி வரும் போது ஒரு ஆள் அகப்படுவார் அநேகமா பொலிஸ்கார் அதுவும் அந்த நைட்ல தனியா ரோந்து பணியில் இருப்பார் (எங்க ஊர்ல எல்லாம் அப்படி இல்லிங் பொலிஸ்கார்) அவருக்கு பின்னால ஒளிந்து கொள்வார்கள். கஷ்டகாலம் பொலிஸ்காரை போட்டு தள்ளிவிடுவான் கொலையாளி.

6. ஹி ஹி அந்த நேரத்துல

அது நடப்பதற்கு அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தாலே மரணம் கன்பர்ம்… ஒன்னு அவள் இல்லை அவன். (நமக்கு நாமேதானே பாஸ் சென்சார்)

7. Run Lola Fall – ஓடி ஓடி விழுக

அநேகமாக எல்லா பெண் பாத்திரங்களும் ஓடும் போது கண்டிப்பா விழுவார்கள். ஆணாதிக்கமாக இருக்குமோ?

8. அம்மா அப்பா பசங்க பேச்சை எப்பத்தான் கேட்டு இருக்காங்க

பிள்ளை பயந்து போய் வந்து சொல்ல. We should show him to a psychiatrist என்று கூறி தட்டிக்கழித்து விடுவார்கள். எப்படியும் படத்தின் பாதிக்கு பிறகு நம்புவார்கள்.

9. அந்த 6 பேர்

நிறைய படங்களில் க்ரூப் க்ரூப்பாத்தான் போய்ச் சாவுவாங்க. எல்லாம் கலந்த கலவையான க்ரூப்பா இருக்கும் ஆண், பெண், கறுப்பு, வெள்ளை… எப்படியும் அழகான ஆணும் பெண்ணும் காப்பாற்றப்படுவார்கள். கறுப்பர்கள், ஆசிய இனத்தவர்கள் எப்போதும் மரிக்கும் கூட்டமாகவே இருக்கும்.

Image

10. துப்பி துலக்குவோம்

பொலிஸாகவும் இருக்கமாட்டாங்க, எப்.பீ.ஐ நோ, ப்ரைவேட் டிடக்டிவ் ச்சேச்சே… அப்புறம் என்னத்துக்கு துப்பறிய கிளம்பிட்டீங்க? எனக் கேட்டால் We are Americans and We all are F.B.I Agents 😛

11. ஓடுறதுக்கு காடுதான் கிடைத்ததா?

நல்ல அழகான ரோடு, வீடு எல்லாம் இருக்க அது ஏன் காட்டுக்குள்ளயே ஓடுறாங்க.

12. புத்துமண் புத்திசாலியாதல்

படத்தின் ஆரம்பப் பகுதிகளில் அவரேஜுக்கும் குறைவான அறிவு படைத்த பெண் பாத்திரம் படத்தின் இறுதியில் லாரா க்ராப்ட் ரேஞ்சுக்கு மாறிவிடுவாள்.

13. ரொமான்ஸ்ஸ்ஸ்

பேய் அதன் உக்கிரத்தை அடைந்து ஆளாளுக்கு போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கும் ஹிரோவும் ஹிரோயினும் லவ் பண்ணுவாங்க.

14. கண்ணாமூச்சி ரே ரே

கூட இருப்பவர்கள் காணாமல் போக அவர்களை தேடிப் போகும் ஒருவர் இந்த இடத்தில் பேய் விளையாட்டுக் காட்டும்.

15. சயன்ஸு

ஒரு விஞ்ஞானி, We should catch it alive… or We should keep him alive  என்று கண்டிப்பாகக் கூறுவார். இவரும் முன்னர் சொன்ன அந்த ட்விஸ்ட் சுடுமூஞ்சி பாத்திரம் போலத்தான்.

16. என்ன சத்தம் அந்த நேரம்

இரண்டு பேர் போச்சல… ஒரு சத்தம் கேட்டுச்சாம் “என்ன சத்தம் அது…???” அவள் கேட்க. “ஆ.. அது அந்த பேய்தான்… நம்மல சாவடிக்கத்தான் வருது வா ஓடிப் போய்றலாம்…” இப்படிச் சொல்லமாட்டான். “அது சும்மா காத்து சத்தம்..” அப்புறம் உங்க இஷ்டம்.

17. வழிகாட்டி

பாதையில் எங்கையும் யாரிடமும் தப்பித்தவறிக் கூட வழி கேட்டு விட வேண்டாம். அப்படி கேட்டால் எப்படியும் அவர் குறுக்குபாதைப் பற்றி சொல்வார்… அப்புறம் நடப்பது மீதிப் படம். இல்லாவிட்டால்… இவர்களே தெளிவான பாதையிருக்க குறுக்குப் பாதை கேட்டு, எச்சரிக்கையும் பின்பற்றாமல் போவார்கள். இதுக்குத்தான் சொல்வது கேட்டுத் தின்ற பருப்பு.

18. கும்மிருட்டு

அங்க இங்க என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கும் பேய்… திடிரென்று டார்ச் லைட் புட்டுக்கும். அது வேலை செய்யும் போது மவனே நீ காலி.

19. ஆயுதம் செய்

அரசாங்கத்தால் இம்மாதிரியான ஆயுதங்கள் வைத்திருந்தால் அள்ளிக் கட்டிக் கொண்டு போய்விடுவார்கள் எனும் அளவுக்கு ஆயுதங்களை வைத்திருப்பார்கள் பிசாசு பிடித்த வீட்டின் ஓனர்.

20. கொட்டாவி அதிர்ச்சிகள்

அநேகமாக பேயின் ஒரிஜினல் அபியரன்ஸ் வரும் முன்னர் எலி, பூனை, கரப்பான், க்ளாஸ் விழுதல், பாய் ப்ரெண்ட் வந்து தோலில் கைவைத்தல் போன்ற அற்ப காரணங்களை வைத்து திடுக் எஃபெக்ட் கொடுத்து இருப்பார்கள். ஒரு வேளை பேய்க்காக தயார்படுத்துகிறார்களோ.

Image

சரி, இவ்வளவு போதும். இணையத்தில் தேடிப்பார்த்தால் எக்கச்சக்கமாக கிடைக்கின்றது. ஒரு உதாரணத்திற்காகவே இவை.

இம்மாதிரியான க்ளிஷேக்களைப் பார்த்து பார்தது அழுத்துவிட்டதால்தான் சமகால திகில் திரைப்படங்களின் வாழ்வு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. மச்சான் பயமே இல்லடா? என்று கமெண்ட் வருவதற்கு காரணமும் இதுதான். மேலே குறிப்பிட்ட உதாரணங்கள் எல்லாம் பெரும்பாலும் ஹாலிவூட் திரைப்படங்களுக்கே பொறுந்தும். ஆனால் ஆசிய திகில் சினிமாக்கள் புது மாதிரியாக தெரிவதற்கு காரணம் அதன் ஒரிஜினாலிட்டியும் ஸ்பூகி தன்மையும்தான்.

திரும்பத் திரும்ப கோர உருவங்களையே பார்த்துப் பார்த்து சளித்துப் போன அமெரிக்க ரசிகர்களுக்கு ரிங் திரைப்படம் ஏற்படுத்திய அலை ஆசிய திகிலின் மீது கவனத்தை குவிக்க வைத்தது. (இது குறித்து பிரிதொரு பதிவில் விரிவாக அலசாலாம்)

உண்மையில் க்ளிஷேக்கள் இல்லாமல் திகில் சினிமா எடுக்க முடியாதா? அல்லது மடத்தனமான க்ளிஷேக்களை தவிர்த்துவிட்டு மாத்திரம் எடுக்க முடியுமா? இதெல்லாம் ஸ்டூடியோக்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. அமெரிக்க திகில் சினிமாவின் இடங்களை இன்று ஆசிய, ஸ்பானிய திகில் பிடித்துக் கொண்டிருக்கின்றது. அவற்றின் கதைத்தளம், க்ளிஷேக்கள் அற்ற தன்மை… பாத்திரங்களின் உளவியைலை கட்டமைத்து பார்வையாளர்களை ஒன்ற வைத்தல், ஹிட்ச்காக் ரேன்ஞ் ட்விஸ்ட் என்று அது அசத்திக் கொண்டிருக்கின்றது.

சில க்ளிஷேக்களை எப்பவும் தவிர்க்க முடியாது என்பது உண்மை. ஆனால் அவை க்ளிஷேக்கள் அல்ல திகில் சினிமாவுக்கென்றே சில சூழல்கள் இருக்கின்றன  எமது பொதுப்புத்தியிலும் இம்மாதிரியான இடங்களில்தான் பேய், பிசாசுகள் இருக்கும் என்கிற நம்பிக்கை ஆழமாக வேரூன்றி புதைக்கப்பட்டிருக்கின்றது. பாழைடந்த வீட்டில்தான் பேய் இருக்கும் என்ற நம்பிக்கையை வைத்து உருவாகும் படைப்புகளில் இருக்கும் திகில் அனுபவம் அலாதியானது. அதனை புது வீடுகளில் அல்லது ரொம்ப காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வீடுகளில் என்றால் நம்ப வைப்பதற்கு அநியாயத்துக்கு ப்ளாஷ் பேக் கதைகளை புகுத்த வேண்டியிருக்கும். அதற்குத்தான் நிறைய படங்களில் ஏற்கனவே கொலை, தற்கொலை நடந்த வீடுகளை நோக்கிய குடி போகிறார்கள். அல்லது வெளியில் இருந்து ஒரு பேயை இம்போர்ட் செய்கிறார்கள். இதற்கு Mama திரைப்படம் ஓர் உதாரணம். என்றாலும் அது சுவாரஷ்யமாக அமைந்ததற்கு காரணம் அதில் கதை இருந்தது என்பதும் தாய் சென்டிமென்ட் அருமையாக பின்னப்பட்டிருந்தது என்பதும்தான்.

திகில் சினிமா என்றால் பயம் மட்டும்தான் என்ற கற்பிதம் உடைந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. இப்போ யார் அதனை அழகியலாக உருவாக்கி வெற்றியடைகிறார்களோ அவையே ஏனைய சினிமாக்களுடன் ஒப்பிடத்தக்கதாக மாறும். Evil Dead, The Exorcist, Innocents போன்ற காலத்தை தாண்டியும் நிலைத்திருப்பதற்கு என்ன காரணம் என்பதையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தோமானால் விளங்கும். இன்று வருடத்தில் 200 அல்லது 300 திகில் படங்கள் உலகம் முழுக்க இருந்து வருகின்றது என வைத்துக் கொண்டாலும் அவற்றிலிருந்து ஒரு Sixth Sense, El Orfeneto, The Others, The Devil’s Backbone, The Ringu, Tale of Two Sister’s எல்லாம் எப்படி வெற்றியடைகிறது? மனதுடனும் பேசும்படியாக இருக்கிறது என்பதையும் சற்று நோக்க வேண்டும்.

திகில் சினிமா குறித்து அடுத்தடுத்து வரவிருக்கும் பதிவுகளில் நிறைய பேசலாம்.

Advertisements

11 comments

 1. மேலாக்குல வாசிச்சன்… தலைப்ப பாத்ததுமே புரிச்சிருச்சி மேட்டர் என்னான்னு…. ஆனா அந்த 10,11,13 பாயின்ட் செம…
  அப்பால ஒரு மேட்டர் இதுக்கு முதல் இருந்த டெம்ளேட் நல்லா இருந்திச்சி… தளத்துக்கும் பொருத்தமா இருந்திச்சி… இது கொஞ்சம் உருத்தலா இருக்கு…

  • நான் என்னமோ நீங்க நம்ம பதிவுலதான் குறை சொல்றீங்களோ என்டு பார்த்தேன்… சாரி, டெம்ளேட் விஷயத்த கவனிக்கிறேன்.

 2. கிளிஷேவ சொல்லுறதை விட அதை நீங்க பகடி செய்யுறது தான் நல்லா இருந்துச்சு ப்ரோ , திகில் சினிமாவின் நாடியே இசை தான் அதை வைத்து தான் பலரும் தப்பித்து கொண்டு இருக்கிறார்கள் அதை முதல் பேராவில் சொல்லிவிட்டு பின் அதயும் பகடி செய்வீங்கன்னு எதிர்பார்த்தேன் இல்லையே பாயிண்ட் 20 நெருங்கிருக்கு 🙂

  • அட ஆமா, இசையை மறந்து விட்டேன் அதனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனி.

 3. நான் பார்த்த வரையில் உண்மைச் சம்பவங்களுக்கு மிக அருகில் பின்னப்பட்ட கதைகளும், உளரீதியாக பாதிக்கப்படும் வலுவான கதாப்பாத்திரமொன்றைக் கொண்ட கதைகளுமே ரசிக்கும்படி இருக்கின்றன. வழக்கமான பழிக்குப் பழி வாங்கும் பேய்களின் காலம் ஓய்ந்துவிட்டது போலத் தோன்றுகின்றது.. எனக்கு mama படம் பிடிக்கவில்லை நண்பா. இப்போதெல்லாம் ஸ்பானிஷ் ஹாரர்களைத் தான் நம்பி வாழ வேண்டியுள்ளது..

  • //நான் பார்த்த வரையில் உண்மைச் சம்பவங்களுக்கு மிக அருகில் பின்னப்பட்ட கதைகளும், உளரீதியாக பாதிக்கப்படும் வலுவான கதாப்பாத்திரமொன்றைக் கொண்ட கதைகளுமே ரசிக்கும்படி இருக்கின்றன.// அதுவும் ஒன்று… பழிக்கு பழி பேய் எல்லாம் வீக் பாய்ண்ட்தான் ஆனா பேய் என்றாலே ரிவென்ஜ் என்ற எண்ணம் டீப்பா போயிருக்கு,

   Mama படம் எனக்கு பிடித்த காரணம் அதன் fairy tale தன்மை பயம் என்று பார்த்தால் அதில் எதுவும் இல்லைதான் நண்பா

  • தமிழில் திகில் திரைப்படங்கள் குறித்த பதிவொன்று எழுத வேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணம் இருந்து கொண்டே இருக்கு… போர்ப்போம். வருகைக்கு நன்றி

 4. In 18 point “அது வேலை செய்யும் போது மவனே நீ காலி.”
  12th pointla “இறுதியில் லாரா க்ராப்ட் ரேஞ்சுக்கு மாறிவிடுவாள்.”
  ஒன்னு அவள் இல்லை அவன். (நமக்கு நாமேதானே பாஸ் சென்சார்)
  1st point. all are awesome.

  Nice way to turn back and see. Love to see more

 5. Light poda ma room kulla poi paakuradhu.
  Camera thirupura varai ulla irukura charachter ku pakathula paei iruku ne theriyadhu oru udans viduvaanga..
  Dracula naale kaluthai kadikum.
  jannal ku pinaadi nadakuradhu.
  edho satham nu keela poi theda pona. paei ivanga indha pakam thirumbuna adhu andha pakkam pogum. avanga andha pakkam thirumbuna idhu indha pakkam pogum. (night la urgent ah bathroom ku pogumo illa bathroom poravana paathu thookumonu ennaku doubt. vera enna velaiya iruka pogudhu.)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s