Ernest & Celestine

Ernest-et-Celestine_1

ஒரே ஒரு ஊரில் ஒரு குட்டி எலி இருந்திச்சாம், அந்த குட்டி எலிக்கு பெய்ண்டிங் என்றால் நிறைய ஆசையாம். ஆனா அந்த எலிக்கும் யாரும் இல்லியாம். பெய்ண்டிங்க பண்ணா கைய ஒடிச்சி போடுவாங்க என்று ஒளிச்சி ஒளிச்சி பெய்ண்ட் பண்ணுச்சாம்.

எலியூர் பெரிய ஊர், முந்தி மாதிரி இல்லாம இப்ப நல்லா இருக்குற ஊர். முந்தியெல்லாம் எலிப்பல்லு விழுந்த உடனே எலியெல்லாம் செத்துப் போறதாலதான் எலியூர் பின்தங்கின நிலையில இருந்திச்சாம். இதனால பெரிய பெரிய எலிகள் எல்லாம் சேர்ந்து மேலூரான கரடியூர்ல இருந்து கரடிப்பல்லெல்லாம் பொறுக்கி வந்து பல்லுவிழப் போகும் எலிகளுக்கு போடுறதுக்கு எலிப்பல்லு கட்டுற இடத்துல கொண்டு போய் கொடுக்கனும் என்று சின்ன எலிகள பழக்கினாங்களாம். கரப்பல்லு பொறுக்குறதுதான் குட்டிஎலிகளோட வேலை. அதைத் தாண்டி வேற ஒன்றும் செய்யப்படாதாம்.

கரடி என்றாலே எலிக்குட்டிகள விழுங்கிவிடும் என்று எலிக்கிழவி குட்டி எலிகளுக்கு கதை சொல்லிச்சாம். பயங்காட்டிச்சாம்.

எலிக்கிழவி சொல்லிச்சாம் கதைகள்ல மட்டும்தான் எலியும் கரடியும் ப்ரெண்ட்ஸா இருக்க முடியும் என்று.

குட்டிஎலி செலஸ்டீன் மட்டும் கரடி ப்ரெண்ட் ஒன்றை வரைந்து வச்சிச்சாம். செலஸ்டீன் எலிக்கு, கரடி ப்ரெண்ட் ஒன்றை பார்க்கனும் என்று ஆசையாம்.

இப்படி இருக்கும் போது ஒருநாள், மேலூர் கரடியூர்ல எர்னஸ்ட் என்ற பெருங்கரடி பெருங்குறட்டை விட்டுக் கொண்டு ஒழுகும் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்திச்சாம். ஓட்டைக் கூரையில் இருந்து பனித்துளி எர்னஸ்ட் கரடியோட மூக்கில் விழுந்திச்சாம். பெரிய தும்மல்.

அப்படியே விடிஞ்ச போது வீடு முழுக்க தேடியும் தின்றதுக்கு ஒன்னுமே இல்லியாம். பசியாம். எர்னஸ்ட் கரடி, அதோட ட்ரம் செட், மற்ற இசை சமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு டவுனுக்கு போச்சாம். பாட்டு படிச்சி காசு சேர்த்து சாப்பாடு வாங்குறதுக்த்தான். ஆனா பனிக்காலம் என்றதால ரோட்ல யாரும் இல்லியாம். காசும் இல்லியாம். குப்பையெல்லாம் தேடித் துலாவியதாம். அப்ப ஒரு குப்பைத் தொட்டியில குட்டி எலி செலஸ்டீன் தூங்கிக் கொண்டு இருந்திச்சாம். அதை அப்படியே எடுத்து வாயில் போட…

ஆ… உமர் மாமா, குட்டி எலி செலஸ்டீன் எப்படி அங்க வந்துச்சி?

பெரிய கரடி வாயில போட்டு தின்றுச்சா? பாவம் எலிக்குட்டி.

கரடிக்கும் பசிதானே.

Ernest et Celestine ஓவியமும், இசையும் சங்கமிக்கும் ஓர் உறவைப் பற்றிய திரைப்படம். மிகவும் எளிமையான கதை. ஒரு வகுப்பில் எல்லா மாணவர்களையும் வைத்தியர்களாக அல்லது என்ஜினியர்களாக உருவாக்க வேண்டும் அதற்காகவே உருவாக்கப்பட்ட சடவாத பாடத்திட்டங்கள், ஆசிரியர்களின் தூண்டுதல், பெற்றோர்களின் நச்சரிப்புகள் சிறுவர்களது கனவுகளை சிதைத்து புதைத்துவிட்டு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கனவுகளில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானதொரு சூழலில் இருந்து தனியாக பறக்க எத்தனிக்கும் ஒரு குட்டிஎலியின் கதையே இது.

அழகான ஓவியம், பொறுத்தமான இசை… இந்த 2டீ அனிமேஷன் திரைப்படம்.

Advertisements

7 comments

  1. Ernest et Celestine ஓவியமும், இசையும் சங்கமிக்கும் ஓர் உறவைப் பற்றிய திரைப்படம். மிகவும் எளிமையான கதை. ஒரு வகுப்பில் எல்லா மாணவர்களையும் வைத்தியர்களாக அல்லது என்ஜினியர்களாக உருவாக்க வேண்டும் அதற்காகவே உருவாக்கப்பட்ட சடவாத பாடத்திட்டங்கள், ஆசிரியர்களின் தூண்டுதல், பெற்றோர்களின் நச்சரிப்புகள் சிறுவர்களது கனவுகளை சிதைத்து புதைத்துவிட்டு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கனவுகளில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானதொரு சூழலில் இருந்து தனியாக பறக்க எத்தனிக்கும் ஒரு குட்டிஎலியின் கதையே இது.// சூப்பர்..

  2. //ஆ… உமர் மாமா, குட்டி எலி செலஸ்டீன் எப்படி அங்க வந்துச்சி?// அருமை. இது போன்ற படங்களை நிறைய ரெஃபர் பண்ணுங்கள்… நன்றாக இருக்கிறது..

  3. உங்களுக்கும் 2டி அனிமேஷன் திரைப்படங்களில் ஆர்வம் இருப்பது மகிழ்ச்சியூட்டுகிறது. இந்தப்டத்தைப் பற்றி இன்னும் கேள்விப்பட்டதில்லை. ஸ்க்ரீன்ஷாட்டே அருமயாக இருக்கிறது. நிச்சயம் பார்க்கிறேன்..
    *அந்த குட்டிஎலி அங்க வந்ததுக்கும் கரடியோட தும்மலுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கும் 🙂

    • இருக்கும் இருக்கும்…. இருக்கு குட்டி சம்பந்தம் இருக்கு. 😉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s