அதோ வர்றான் பூச்சாண்டி…

shh

பேயெழுத்து என்றாலே கியேர்மோ என்றாகிவிட்டது.

ஒரு படைப்பாளியின் பால்யகாலம் அவனது படைப்பில் எந்தளவு தூரத்திற்கு தாக்கம் செலுத்துகிறது? அது எவ்வாறு படைப்பின் ஒவ்வொரு இழையிலும் நுணுக்கமாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதனை சில இயக்குனர்களின் சினிமாக்களை பார்க்கும் போது துலக்கமாகும்.

பல இயக்குனர்கள் தமது திரைவாழ்வை குறும்படம் ஒன்றின் மூலம் துவங்கியிருப்பார்கள். ஸ்பீல்பெர்க் தனது தந்தையின் காமிராவை கொண்டு இயக்கிய யுத்த படம், டிம் பர்டனின் ஸ்டாப் மோஷன் திரைப்படமான வின்சன்ட் (Vincent), நோலனின் டூட்ல் பக் (Doodle Bug), கியேர்மோவின் ஜியோமெட்ரியா (Geometria) போன்ற உதாரணங்களை குறிப்பிடலாம்.

ஆரம்பகால படங்களிலிருந்தே (குறும்படங்கள் உட்பட) தமக்கான அடையாளத்தை உருவாக்கி இன்றுவரை தமது மேகிங் ஸ்டைல், காட்சியமைப்பு, கதைசொல்லல் உத்தி என்பவற்றை அதற்கேற்பவே கொண்டு செல்பவர்களுக்கு சிறந்த உதாரணம் கிறிஸ்டோபர் நோலன், டிம் பர்டன் மற்றும் கியேர்மோ டெல் டோரோ என்று அடித்துக் கூறலாம்.

நோலனின் புதிர்சுழல்களைக் கொண்ட திரைக்கதை, டிம் பர்டனின் பொம்மைகள் (Puppets), கியேர்மோவின் மன்ஸ்டர்கள் என்று இவர்களின் trade mark கொள்ளலாம். இதில் டெல் டோரோ எக்காரணம் கொண்டும் தனது அடையாளத்தை விட்டுக் கொடுக்காதவர். இம்மூன்று பேரினுடைய திரைமொழியும் வித்தியாசமானவை. எளிதான உதாரணத்துக்குத்தான் இவற்றைக் குறிப்பிட்டேன்… மற்றடி இன்னும் நிறைய இயக்குனர்கள் இருக்கின்றார்கள். உதாரணத்திற்கு Stanley Kubrick, Martin Scorsese, David Lynch, Quentin Tarantino, Wes Anderson.

சமீபகால இயக்குனர்களும் குறும்படம் மூலம் தம் திரைவாழ்வை துவங்கியிருக்கிறார்கள். District 9, Mama, 9 போன்றவை முதலில் குறும்படங்களாக இருந்து சினிமாவாக்கப்பட்டவைதான்.

தமிழ்ச்சூழலில் குறும்படம் மூலம் சினிமாவுக்கு வரும் இயக்குனர்கள் அதிகரித்து வருவதும் இங்கு குறிப்பிட்டுக் கூறத்தக்கது.

விசயத்துக்கு வருகிறேன்.

Shhh…., Monster மற்றும் Geometria இந்த மூன்று குறும்படங்கள் மற்றும் அவற்றுக்கிடையிலான தொடர்புகள் பற்றியும் இங்கு சற்று அலசலாம்.

“Shhh…” Short

சத்தம் போடாதே! கியேர்மோவின் பால்யகால திகில் அனுபவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட குறும்படமிது.

அவரது பேட்டிகளில் அடிக்கடி குறிப்பிடும் சம்பவம்… தனது சிறுவயதில் டாய்லட் செல்லவிடமால் பயமுறுத்திக் கொண்டிருந்த ஒரு மன்ஸ்டர். அதனுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மூலம் இனிமேல் நிம்மதியாக டாய்லட் போகலாம். மன்ஸ்டர்களுக்கும் டெல் டோரோவுக்குமான உறவு இவ்வாறுதான் துவங்கியது. அதனை அவரே குறிப்பிடுவார். அந்த ஒப்பந்தம் இன்று வரை தொடர்கிறது. இந்த சம்பவத்தை அடியாக் கொண்டு Freddy Chavez Olmos மற்றும் Shervin Shoghian எடுக்கப்பட்டது இக்குறும்படம்.

129096393_640

சிறுவன் கியேர்மோ இரவில் தூங்கச் செல்லும் முன் பாத்ரூம் செல்ல வேண்டும். ஆனால் அவன் பயப்படுகிறான். காரணம் அங்கிருக்கும் ஒரு மன்ஸ்டர். அதற்கு உணவாக தலைமுடியைக் கொடுத்தால்தான் அவனை நிம்மதியாக ஒன்றுக்கு போக விடும்.

அவனது அக்கா அவனை டாச்சர் செய்கிறாள். அவளுக்கு அவளது நகங்களும், நீண்ட அழகிய கூந்தலும்தான் முக்கியம்.

ஒரு சந்தர்ப்பத்தில் அவளது அக்கா அத்துமீறிச் செல்ல, தவறுதலாக அவளது நகக்கண் உடைந்து விடுகிறது. அக்கா எப்போதும் தலைவாரும் சீப்பில் அவளது முடி இருக்கிறது. அந்த நாள் பாத்ரூம் செல்லும் போது அவளது சீப்பை எடுத்துக் கொண்டு போகிறான் சிறுவன் கியேர்மோ. இதற்கு பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை எளிதாக ஊகித்துக் கொள்ளலாம்.

இக்குறும்படத்தில் சிறுவன் கியேர்மோவின் திறமைகள் காண்பிக்கப்படுகின்றது. ஓவியங்கள். கியேர்மோ டெல் டோரோவும் தனது வித்தியாசமான ஜந்துக்களை, மன்ஸ்டர்களை திரையில் உலாவவிடுவதற்கு முன்னர் அவரிடம் பிரத்தியேகமாக இருக்கும் நோட் புக்கில் வரைந்து கொள்வார், அதுபற்றிய குறிப்புகளை தேடி எடுத்து எழுதிக் கொள்வார். அக்குறிப்புகள் பழம்பெரும் தொன்ம நூற்களில் இருந்தோ, பழைய கறுப்பு வெள்ளை மன்ஸ்டர் திரைப்படங்களில் இருந்தோ, உலகப் புகழ் ஓவியர்களின் ஓவியங்கள் அல்லது திரைப்பட போஸ்டர்களில் இருந்தோ எடுத்துக் கொள்வார்.

கியேர்மோவின் நூலகம் இல்லை அது ஒரு பாதாள பங்களா முழுக்க முழுக்க புத்தகங்களாலும், 7000 இற்கும் அதிகமான டீவீடிக்களாலும், சிற்பங்கள், ஓவியங்கள், போஸ்டர்கள், காமிக்ஸ்கள்… என்று நிறைந்திருக்கும். இதற்கு Bleak House என்று பெயர் வேறு.

ஷ்ஷ்ஷ்…. இந்த படத்தில் வரும் மன்ஸ்டர் க்லேயால் செய்யப்பட்டது. அதனை உருவாக்கியது பற்றியும் படத்தின் மேகிங் வீடியோவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

vlcsnap-2010-06-03-10h25m41s36

அடுத்த குறும்படம்,

Jennifer Kent இன் Monster.

(Jennifer Kent “Monster” Short)

இக்குறும்படத்தை பார்க்க நேர்ந்தது The Babadook என்ற அவுஸ்ட்ரேலிய திகில் திரைப்பட ட்ரைலரை பார்த்த பின்னர்தான். அந்த ட்ரைலரைப் பார்க்கும் போதே டெல் டோரோ பாதிப்பு வெகுவாக காணப்பட்டது. அது பற்றி தேடிய போது Jennifer Kent தனது பாதிப்புகளாக குறிப்பிட்ட பழைய மன்ஸ்டர், திகில் படங்கள், the Orphanage, Let the Right One In போன்ற படங்கள் மற்றும் டெல் டோரோவினுடைய வார்த்தைகள்…,

‘I think horror and fantasy are arenas in which we can discuss anxieties, philosophical questions, and bring it almost to the level where abstraction becomes flesh. You know, you can, very much in the tradition of the Greeks, be able to manifest big ideas, big themes and make them reality.’- Guillermo Del Toro

கூகுளில் உலாவிய போது Jennifer Kent ஏற்கனவே எடுத்திருந்த குறும்படத்தை ஒட்டியே இத்திரைப்படத்தை எடுத்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. The Babadook திரைப்படம் ஃபில்ம் பெஸ்டிவல்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆஃபிஷியலாக ரிலீஸ் ஆகவில்லை. ஹாலிவூட் ரீமேக்கிற்கும் ரெடியாகிறது.

Monster

தாய், மகன் தனித்த வாழ்க்கை. ஒரு விநோத பொம்மை. கறுப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டிருக்கும் இக் குறும்படம் அந்த கால திரைப்படங்களின் பாணியிலும் இருக்கிறது. பயமுறுத்தும் நேரங்களில் அலறுவது, நடை எல்லாமே அந்த கால திகில் சினிமாவை ஞாபமூட்டுகிறது.

முரண்டு பிடிக்கும் சிறுவன், பூச்சாண்டித்தனமாக மன்ஸ்டர். இதுதான் கதை.

Shhh… மற்றும் Monster இரண்டு குறும்படங்களும் சிறுவர்களை மையப்படுத்திய கதைகளைக் கொண்டிருக்கிறது.

பொதுவாக வீடுகளில் சிறுவர்களுக்கு உணவளிக்கும் போது, தூங்கச் செல்லும் போது கூறப்பப்படும் கதைகளில் திகில் கட்டாயம் கலந்திருக்கும். இளவரசியை கடத்திச் செல்லும் அரக்கன், டிராகன், மோகினி, பூச்சாண்டி எல்லாம் திகிலின் கூறுகளைக் கொண்ட அல்லது மொத்தமாகவே திகிலைக் கொண்ட கதைகள். இவை கதைசொல்லிகளுக்கிடையே மாறுபட்டுக் காணப்படும். பாட்டி ஒருமாதிரி சொன்னால் பாட்டியின் அக்கா பாட்டி இன்னொரு வடிவத்தில் சொல்வார். சிறுவர்களின் நாடிதுடிப்பறிந்து கதைகளின் போக்குகளில் திடிர் திருப்பங்களும் உண்டு. “அப்ப நர நர என்று இரண்டு பெரிய பற்கள் இருக்குற டிராகன் பறந்து கொண்டே வந்து கிட்ட இருந்த காவல்காரனெல்லாம் நெருப்பால பொசுக்கிவிட்டு இளவரசிய தூக்கிக் கொண்டு போச்சாம்…” பேரன் (இது நான்) “பாட்டி அப்ப நல்ல டிராகன் இல்லியா…? நல்ல டிராகன் வந்து காப்பாத்தும் தானே?” இதற்கு பிறகு பாட்டியின் கதை சொல்லல் மாறுபடும்.

இரண்டு படங்களிலும் பூச்சாண்டிகள்தான் வருகிறார்கள். “இப்ப நீ சாப்பிடாட்டி பூச்சாண்டிட்ட புடிச்சி கொடுத்துடுவேன்” இந்த வார்த்தைகளில் வரும் அந்த பூச்சாண்டி இடத்துக்கிடம் மாறுபட்டும் வேவ்வேறு வடிவங்களிலும், கட்டிலுக்கு அடியிலும், கதவுகளுக்கு பின்னாலும், பழைய சமான் வைக்கும் பரணிலும், கப்பார்ட்டுக்குள்ளாலும், இனிப்புகள் வைக்கும் போத்தல்களின் பின்னாலும் இருப்பார்கள். 😉

இக்குறும்படங்களின் மூலம் இரண்டு விடயங்களை அவதானிக்க முடிகிறது நமது காதுகளுக்குள்ளேயே கதைகள் ஒளிந்து கொண்டு இருக்கின்றன. அது எமது கதைசொல்லிகளின் வாயிலாக நாம் பெற்றுக் கொண்டவை. மற்றது இவ்வாறான பல கதைகள் தமிழ்ச்சூழலில் நிறைந்து காணப்படுகிறது அவற்றையெல்லாம் விட்டு விட்டு இறக்குமதி பேய்களே இங்கு சுற்றிக் கொண்டிருக்கின்றது.

கடைசியாக,

Geometria 

இது கியேர்மோ டெல் டோரோவின் முதல் குறும்படம். அதாவது தற்போது கைவசம் உள்ள ஒன்று அதற்கு முன்னரும் சில குறும்படங்களை அவர் எடுத்திருக்கிறார் ஆனால் அதன் பிரதிகள் எங்கும் கிடைக்கவில்லை.

இந்த படத்திலேயே அவரது மன்ஸ்டர் அடையாளம் வெளிப்பட்டுவிடுகிறது. கணித பாடம் தெரியாத பையன், அடிக்கடி டாச்சர் செய்யும் பாட்டி, சூனியம், பாதாள உலகில் இருந்து ஒரு பேய்… இவ்வளவுதான்! ஆனால் படத்தை பார்த்தவர்களுக்கு டெல் டோரோவின் குசும்பு புரியும்.

இத்திரைப்படத்திற்கான ஸ்பெஷல் எஃபெக்ட் எல்லாம் அவரே செய்ததுதான். இன்றும் அவரது படங்களில் ஸ்பெஷல் எஃபெக்ட் வேலைகளை முன்னின்றே செய்வார். மேலே குறிப்பிட்டது போல அவரது நோட் புக்கில் வித விதமான ஜந்துகள் உலாத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியே விட்டுக் கொண்டிருக்கிறார்.

இம்மூன்று குறும்படங்களும் பால்யத்தின் கதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. முதல் இரண்டு படங்களுக்கிடையிலும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அது நம் காதுகளில் ஒளிந்து கொண்டிருக்கும் கதைகள்.

அதோ வர்றான் பூச்சாண்டி….

Advertisements

One comment

  1. //ஒரு படைப்பாளியின் பால்யகாலம் அவனது படைப்பில் எந்தளவு தூரத்திற்கு தாக்கம் செலுத்துகிறது? அது எவ்வாறு படைப்பின் ஒவ்வொரு இழையிலும் நுணுக்கமாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதனை சில இயக்குனர்களின் சினிமாக்களை பார்க்கும் போது துலக்கமாகும்.// (Y)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s