Cronos: ஒரு கதைசொல்லியின் கதை

Image

Guillermo del Toro இன் முதல் திரைப்படம். ஸ்பானிய மொழியில் தயாரிக்கப்பட்ட இந்த வெம்பயர் திரைப்படம் ஏனைய வெம்பயர் கதைகளில் இருந்து மாறுபட்டு ஒரு அற்புதமான தேவதைக் கதையாக திகழ்கின்றது.

டெல் டோரோவின் படங்களில் எப்பொழுதும் ஒரு கதைசொல்லியின் பிரசன்னம் இருந்து கொண்டேயிருக்கும். முதல் படத்தில் இருந்தே இது தொடர்கிறது.

கதைசொல்லியின் கதையிது, 1536 இல் ஒரு ரசவாதி சாகாவரம் பெற்ற நித்திய வாழ்வை வழங்கும் ஒரு கருவியை கண்டுபிடிக்கிறான். இந்த கருவி 1937 ஆம் ஆண்டில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து ஒரு ரசவாதி இறக்கிறான். அவன் இதயம் கட்டிட சிதைவுகளால் துளைக்கபட்டே இறந்திருக்கிறான். ஆய்வாளர்கள் அந்த கட்டிடத்தில் இருந்து எதனையும் கண்டுபிடிப்பதில்லை.

நிகழ்காலத்தில் ஒரு பழம்பொருள் விற்பனையாளன் archangel சிலையொன்றின் அடியில் இருந்து 450 வருடம் பழமையான வண்டு வடிவிலான ஒரு கருவியை கண்டுபிடிக்கிறான். அந்த தங்கவண்டை பார்த்தக்கொண்டு இருக்கும் போது, அது இயங்குகிறது அப்படியே அவனது உள்ளங்கையை கவ்விக் கொண்டு ஒரு ஊசி முனை மூலம் அவன் உடலில் ஏதோ ஒன்று பாய்ச்சப்படுகிறது.

Image

இந்த தங்கவண்டினுள் ஒரு பூச்சி இருக்கின்றது. இது பற்றி அறியாத அந்த வயதான பழம்பொருள் விற்பனையாளன், தன் உடல் மற்றும் உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்கின்றான். அவன் இளமை திரும்புகிறது. உற்சாகம், பலம், பெண்கள் மீதான ஈர்ப்பு எல்லாம் வளர்கிறது. கூடவே இரத்தம் மீதான ஈர்ப்பும் வருகிறது. முதலில் இதனையிட்டு அருவருப்படையும் அவன் இதனை தவிர்ந்து கொள்ளப்பார்க்கிறான்.

அதேநேரம் இறக்கும் தருவாயில் இருக்கும் பணக்கார முதலாளி, இந்த device ஐ வெகுகாலமாக தேடிக்கொண்டு இருக்கிறான். அது ஒரு archangel சிலையில்தான் இருக்கின்றது என்பது அவனுக்குத் தெரியும். ஆள் (Ron Perlman) அனுப்பி அந்த சிலையை வாங்கிக் கொண்டு வந்த பின்னர்தான் தெரிகிறது அந்த கருவி பழம்பொருள் விற்பனையாளனிடம் இருக்கின்றது என்று.

மிக அருமையான திரைப்படம். வெம்பயர் பற்றி தெரிந்தவர்களுக்கு பொதுவாக அது எப்படி மனிதர்களுக்கு பரவுகிறது என்பது தெரியும். பிரதான வெம்பயர் ஒருத்தனை கடித்து அதன் மூலம் அவன் இறந்து பின்னர் கல்லறையில் இருந்து எழுவான். இப்போ இது மாறி கடித்து சில மணிநேரங்களிலேயே மாற்றமடைந்து விடுகிறார்கள். என்ன செய்ய எல்லாவற்கும் அவசரம்.

இந்த படத்தில் வெம்பயர் கடத்தியாக செயற்படுவது ஒருவித பூச்சி, அது சரியாக வேலை செய்ய ஒரு கருவி, அந்த கருவி சில்லுகளால் ஆனா வைன் கொடுக்கும் கடிகார தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கின்றது. பழைய சாவிகொடுத்து இயங்கும் பொருட்கள் எப்போதும் அலாதியான, அமைதியான பொழுதுபோக்குசார் விருப்புகள். எங்கள் தாத்தாவிடமும் அப்படியொரு சுவர்கடிகாரம் இருந்தது ஒரு நாளைக்கு ஒரு தடவை வைன் கொடுக்க வேண்டும். வாரமொருமுறையேனும் அதனை எண்ணெயிட்டு துடைத்து வைப்பார். அவர் மரணித்ததின் பின்னர் அந்த கடிகாரம் எனது பெரியப்பாவிடம் போனது. அவரும் தாத்தாவைப் போலவே வைன் கடிகாரம், கைக்கடிகாரம், பேனைகள் சேகரிப்பதில் ஆர்வமுள்ளவர். இன்னும் கூட அந்த கடிகாரத்தை கவனித்துக் கொண்டுதான் பராமரித்துக் கொண்டுதான் இருக்கிறார். இம்மாதிரியான ஆர்வமுள்ளவர்களிடம் அசாத்தியமானதொரு பொறுமையைக் காண்கிறேன்.

Image

பழம்பொருள் வியாபாரி கொஞ்ச கொஞ்சமாக மாறுவதும். அந்த மாற்றத்தால் தன் பேத்திக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று பயப்படுவதும். தங்கவண்டு செலுத்திய ரசத்தால் ஏற்படும் வெம்பயர்தனங்களும் – இளமை, பெண்கள், திடம், இரத்தம் மீதான நாட்டம் – தனது நடிப்பால் தத்ரூபமாக வழங்கியிருக்கிறார் Federico Luppi. இவர் கியர்மோ டெல் டோரோவின் மூன்று ஸ்பானிஷ் படங்களிலும் நடித்துள்ளார். Pan’s Labyrinth இல் வரும் Faun மற்றும் Pale man இரண்டு மாய உலகின் ஜீவன்களும் இவர்தான் என்பது சற்றே ஆச்சரியப்படவைக்கும் செய்தி. The Devil’s Backbone இல் வரும் கதைசொல்லியும் இவரே.

டெல் டோரோ உலகுடன் இணைந்தபடி வேலை செய்ய சிலரால் மாத்திரமே முடியும். அது அவரை நன்றாக புரிந்து கொண்டவர்களால் மாத்திரமே. இந்த படத்தில் இருந்தே Guillermo Navarro கூட்டணி துவங்கிவிடுகிறது. டெல் டோரோவை மிகச்சரியாக புரிந்துகொண்டவர்.

ரான் பெர்ல்மன் பற்றி என்ன சொல்ல. இது இன்னொரு கூட்டணி.

சில்லுகள், பூச்சிகள், ஆதி வெம்பயர் புத்தகங்கள், பழைய பொருட்கள், தேவதைக் கதை முதியயோர் சிறியோர் உறவு என்பவற்றை கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த படத்தில் வரும் சிறுமிக்கும் பழம்பொருள் விற்பனையாளனான அவளது தாத்தாவுக்குமான உறவு டெல் டோரோவின் வாழ்வுடன் பிணைந்தது. அவரது பாட்டியின் மரணத்திற்கும் இந்த படத்திற்கும் நெருக்கமான உறவு இருந்தது என்பதை டெல் டோரோ ஒரு பேட்டியில் குறிப்பிடுவார்.

Image

இத்திரைப்படத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள், காட்சிகள் அனைத்தும் ஒரு சில்லு கடிகாரத்தைப் போல் அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் கடைசி காட்சியில் கண்கள் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை. அந்த சிறுமியின் பாத்திரம் அழகாக இருக்கிறது. ஆனால் இத்திரைப்படம் ஏற்படுத்திய வடு இன்னும் மறக்கமுடியவில்லை என்பதுவே டெல் டோரோவின் பதிலாக இருக்கின்றது. காரணம் முதல் திரைப்படம் என்பதால் எதிர்பார்த்த அளவு பணம் கிடைக்கவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்து முடித்தார். ஆனாலும் இத்திரைப்படம் உலக வெம்பயர் படங்களில் ஒரு மாஸ்டர்பீஸ். டெல் டோரோ தரப்படுத்தலில் Pan’s Labyrinth, Devil’s Backbone மற்றும் Hellboy: the Golden Army இவைதான் இருக்கும். ஏன் Cronos இல்லை என வினவிய போது அவர் சொன்ன பதில் திருப்திகரமாக இல்லை என்பதுவே. ஒரு கலைஞனின் நேர்மை இது. அவர் எடுக்க நினைத்த படி எடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இத்திரைப்படம் பத்து வருடங்களுக்கு பிறகு Anniversary Edition ஆக வெளியிடப்பட்டது. 2010 இல் வெளியான Blu-Ray இல் டெல் டோரோவின் நேர்காணல்களுடன் அவரது குறும்படமான Geometria உம் இணைக்கபட்டு வெளிவந்தது.

கியர்மோவின் ஆர்வங்கள் சுத்தப் பைத்தியக்காரத்தனமானவை. அப்படித்தான் எல்லோரும் கூறுவார்கள். அவரது படங்களை பார்க்கும் எவரும் இதனை உணரமுடியும். ஆனால் அதனை அழகியலாக மாற்றி அற்புதத்தை நிகழ்த்தியிருப்பார். தொன்மங்களில் (mythology) கதைசொல்லியாக வரும் பாத்திரங்கள் இருக்கும், பழம் கதைகளிலும் இதனை காணலாம். ஆயிரம் இரவுகளும் ஓர் இரவும் கதையில் வரும் ஷெஹர்ஷாத் போல் சமகாலத்தில் இயங்கும் ஒரு தொன்மங்களின் கதைசொல்லியே டெல் டோரோ என்பதை யாரும் மறுக்க முடியாது.

– இந்த பதிவை பேஸ்புக்கில் போட்டுவிட்டு பின்னர் விரிவாக எழுதலாம் என்றுதான் எழுதினேன். ஆனால் டெல் டோரோ அல்லவா அப்படியே கை டைப் பண்ணிக் கொண்டே போய்விட்டது.

Advertisements

2 comments

  1. Cronos இன்னும் பார்க்கவில்லை! ஆர்வத்தை தூண்டிவிட்டாய் நண்பா! பதிவு முழுமையாக அட்டகாசமாக இருக்கு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s