திகில் சினிமாவும் நானும்

Image

இத சொல்லியே ஆகனும் என்று நீண்ட நாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்தேன் ஆனா டைம்தான் கிடைக்கவில்லை.

சிறுவயது முதலே எனக்கு திகில் சினிமா மற்றும் இலக்கியங்கள் மீது ஆர்வம் மிகுதியாகவே இருந்தது. ஆர்வக் கோளாறு என்று சொன்னாலும் பரவாயில்லை. முதலில் பார்த்த திகில் படம் ஞாபகத்தில் இல்லை, ஆனால் ஒரு திரைப்படத்தை நினைவுகூற முடிகிறது அது ஒரு டிராகுலா திரைப்படம். இப்படியான இந்த திகில் பயணம் தொர்ந்தது… முதன் முதலில் எல்லோரையும் போலவே ஹாலிவூட் பேய்படங்கள்தான் எனக்கும் அறிமுகமாகிறது. The Evil Dead திரைப்படத்தைப் பற்றி பள்ளியில் படிக்கும் போது நண்பர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். வழக்கம் போலவே அவர்களுக்கு ஆங்கிலப்படங்களில் பெயர் தெரியாது, ஆனால் டிராகுலா படம் இதுதான் எல்லா பேய்ப்படங்களையும் குறிக்கும் பொதுச்சொற் பிரயோகம். அன்றைய நாட்களில் வீட்டில் டீவி இருக்கவில்லை, அதனால் பக்கத்து வீடுதான்… பொதுவாக இரவில்தான் பேய்படம் போடுவார்கள் என்பதால் நைட் பார்த்துவிட்டு திரும்பி வருவது என்பது கேமரா, லைட்டிங், இசையில்லாத திகில் சினிமா அனுபவமாக இருக்கும். திகில் சினிமா என்றால் பயம் வரவேண்டும், அப்போதைய அனுபவங்கள் பயத்தை ஏற்படுத்தியது. இரவு தூக்கத்தை சந்தேகத்துடனேயே கழித்தேன், டிராகுலா திரைப்படமொன்றை பார்த்து விட்டு வந்து அன்றைய இரவு தூங்கும் போது உண்மையிலேயே ஒரு வௌவால் வந்தது பயங்கரம். அன்று நைட் தூங்கினேனா? ம்ஹ்ம்…

புத்தகங்கள் என்று எடுத்துக்கொண்டாலும் முதன் முதலில் அறிமுகமாகிய அல்லது தேடிப்பிடித்து படித்தவை எல்லாம் திகில் சம்பந்தப்பட்டவையே…

தமிழில் திகில் சினிமா, திகில் இலக்கியம் என்று பார்க்கும் போது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. ஆனால் உண்மையில் அதற்கான களமும், பாரம்பரியமும், கதைகளும் நிறையவே இருக்கும் ஏரியாக்கள் என்றால் தென், தென்கிழக்காசிய நாடுகளைக் கூறலாம். ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் ஹாரர் படங்கள் எல்லாம் அவர்களின் பாரம்பரிய கதைகளில் இருந்தே உருவாக்கப்படுகிறது. அப்படியான கதைகள் நம்சூழலில் எக்கச்சக்கமாக இருக்கின்றது, மோகினி, நொண்டிபேய், கொல்லிவாய்… இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நம் முதியோர்கள் சொல்லும் ஏராளமான கதைகளில் இருந்து நமக்கான கதைகளை உருவாக்கி அதிலிருந்து ஏன் படைப்புகளை உருவாக்காமல் இறக்குமதி பேய்களாகவே இருக்கிறது நம் திகில் சினிமா மற்றும் திகில் இலக்கியங்கள். எனக்கு city பேய்களில் அவ்வளவு பயம் வருவதில்லை, அதாவது தமிழில் ரீசண்டாக வந்த திரைப்படங்கள்… ஷாக், அது, யாவரும் நலம் (இதில் யாவரும் நலம் சூப்பர்) எல்லாம் இறக்குமதி பேய்கள், யேங்க உள்ளூரில் பேய்களே இல்லியா?

அப்புறம் என்ன நடந்தது, க்ளாசிக்கல் ஹாரார் திரைப்படங்களை அதிகம் பார்த்தேன். கேஸட்களுக்கு பஞ்சம் இல்லாத காலம் அது. The Omen, The Exorcist, The Texas Chainsaw Massacre என்று உலகப்புகழ் திரைப்படங்கள், பழைய க்றிஸ்டோபர் லீ, பெலா லகுஸி போன்றோர்களின் திரைப்படங்கள் அந்த டைமே அறிமுகமாகியிருந்தது. அறியா வயசுல உலக சினிமா எல்லாம் தெரியாது என்பதால் பெஸ்ட் என்பதெல்லாம் அறியாமலேயே நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன்… அதில் முக்கால்வாசிக்கும் மேல் மொக்கைகள் என்பது பிற்பாடு அறிந்து கொண்டேன்.

தமிழ் சினிமாவில் திகில் திரைப்படங்களுக்கென்று தனி வகைமை இல்லாதது வருத்தமளிக்கின்றது. எனது அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்ட விடயங்களில் ஒன்று பொதுவாக இராக்கதைகள் பேசும் பழக்கம் இருக்கும் கிராமப்புறங்களில் கண்டிப்பாக பேய்க்கதைகள் ஒழிந்துகொண்டு இருக்கும். மரணவீட்டில் அடக்கம் செய்து விட்டு வந்த பிற்பாடு கதையளந்து கொண்டே போகிற போக்கில் நள்ளிரவு கடக்கும் போது பேய்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும். கொஞ்சம் யோசித்து பார்த்தால் அவ்வாறான கதைகள் நிறைய இருக்கின்றது. அதில் ஒன்றை எடுத்து கதையமைத்து படமாக்கினால் நமக்கமான திகில் சினிமாவை உருவாக்கிவிடலாம். எங்கள் ஏரியாக்களில் எல்லாம் நண்பர்கள் சேர்ந்து மரண வீட்டில் உதவி ஒத்தாசைகள் செய்துவிட்டு… நடுரோட்டில் விடிய விடிய பேசிக் கொண்டு இருப்போம். சரியா மணி 12 கடந்த பிறகு பேச்சு சுடுகாட்டு பக்கம் போகும்.

ஹாரர் சினிமாவில் ஹாலீவூட் கோலோச்சிய காலம் மாறி ஆசியா பக்கம் காற்று வீசத் துவங்கியது… ஏற்கனவே வீசிக் கொண்டிருந்தாலும் 1960களின் பின்னரே அது உலகுக்கு கொஞ்சம் கொஞ்சமா அறிமுகமாகத் துவங்கியது. அது இப்பொழுதெல்லாம் அங்குள்ள திரைப்படங்களை அட்டக்காப்பி அடிப்பதும், ரீமேக் செய்வதும், இயக்குனர்களை அப்படியே ஹாலிவூட் பக்கம் கடத்துவதும் சர்வசாதாரணமாக போய்விட்டது. முதன் முதலில் ஆசிய திகில் அனுபவம் ஹாலிவூட் பக்கம் இருந்தே வந்தது… அது the Ring திரைப்படம் மூலம். என்னடா இது வித்தியாசமாக இருக்கிறதே என்று அறிந்து கொண்டு தேடிய போது கிடைத்த விடைதான் ஆசிய திகில் சினிமா. திகில் சினிமா செத்துக்கொண்டிருந்த காலத்தில் அலைபோல் பரவிய பீதிக்காற்று! எப்படித்தான் கதை பிடிக்கிறார்கள் என்று பார்த்தால் அது அவர்களின் பாரம்பரியத்திலே உள்ளவை என்பது தெளிவாகியது. அவர்களது நாட்டார் கதைகளில் நிறைய பேய்கள் உண்டு. அவற்றை வைத்துக் கொண்டு உலகையே பயமுறுத்துகிறார்கள்.

உலக சினிமாவும் நானும் என்ற உப தலைப்பை போட்டு அதில் இருந்து கொண்டு திகில் சினிமாவை பேசலாம் என்றால்… இல்லையில்லை இங்கேயே பேசிவிடுவோம். பொதுவாக திகில் சினிமாவை உலக சினிமாவுடன் சேர்ப்பதில்லை அதனை ஒரு மூன்றாந்தர அல்லது இரண்டாந்தர சினிமாவாக மனித மனத்தின் பயத்தை வைத்துக் கொண்டு படம் காட்டும் cheap thrill ஆகவே பார்த்து வந்த காலத்திலும் நிலைத்து நின்று திகிலின் அழகியலை உணர்த்திய இயக்குனர்களும் இருக்கிறார்கள். இங்கு நான் யாரைச் சொல்கிறேன் என்று தெளிவாக தெரிந்திருக்கும். கியர்மோ டெல் டோரோவின் படைப்புகள்… திகிலின் அழகியலை பேசியது, அதே நேரம் உலகத்தரமான junk ஆகா இருந்தது… சராசரி திகில் சினிமா ரசிகனுக்கும் உலகசினிமா ரசிகனுக்கும் இடையில் அல்லது முற்றிலும் வேறு கோணத்தில் இருந்தது அவரது திரைப்படங்கள். அவர் படங்கள் பேசும் அரசியல், மனிதம், அறம் போன்றவை ஏனைய திகில் சினிமாக்களில் காணமுடியாது என்பதாலே என்னவோ அவரை எனக்கு மிகவும் பிடித்து போனது. பிற்பாடு கியர்மோவை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு எனக்கான அடையாளமாக அல்லது முன்மாதிரியாக அவரை கொண்டேன்.

அடுத்து நொஸ்பெராடு – ஹெர்ஸாகின் டிராகுலாவை குறிப்பிட்டே ஆக வேண்டும். திகில் சினிமாவில் ஒரு உலக சினிமா… கின்ஸ்கியின் நடிப்பில் அசாத்தியமானதொரு சாதனை. இனி யாரும் இப்படி ஒரு டிராகுலா பாத்திரத்தை செய்து விட முடியாது என்கிற அளவுக்கு இருந்தது அத்திரைப்படம். இந்த காலகட்டத்தில்தான் திகில் சினிமாவின் மீதிருந்த காதல் வெறித்தனமாகியது…

திரும்பவும் தமிழ் சினிமாவுக்கே வருகிறேன், ஏன் தமிழில் ஒரு சிறந்த திகில் சினிமாவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறேன் என்று யோசிக்கும் போது… கிடைக்கும் ஒரு விடைதான் “பயம்” சொந்த மொழியில் கிடைக்கும் பய அனுபவம் வேறு மொழியில் கிடைக்காது என்பதுவே. எவ்வளவுதான் வேற்று மொழி படங்களைப் பார்த்தாலும் தமிழில்தான் பயப்படுகிறோம். நமக்கென்றே ஆயிரம் பேய்கதைகள் கிராமப்புறங்களில் ஒழிந்துகொண்டு இருக்கும் போது கதைக்கு என்ன பஞ்சம்… கொஞ்சம் சிரத்தை பாராமல் பேப்பர் பேனாவுடன் போங்களேன் ராசா… டீவீடி பார்த்து பார்த்து எவ்வளவு நாளைக்குத்தான் காப்பி தண்ணி குடிப்பீர்கள். முக்கியமான கன்டிஷன் ஒன்று இருக்கு அப்படி தேடிப்பிடித்து எடுக்கும் கதையை சொதப்பாமல் இருக்க வேண்டும்.

அப்புறம் இன்னைக்கு அவ்வளவுதான். குட் நைட்.

இன்னும் கொஞ்சம் இருக்கு… லிஸ்ட்.

Alien

The Exorcist

The Texas Chainsaw Massacre

The Evil Dead

El Orfanato

The Omen

The Devil’s Backbone

Blade II

Pan’s Labyrinth

Nosferatu – the Vampyre

Nosferatu – the Symphony of Horror

The Cabinet of Dr. Caligari

The Thing

The Fly

Susperia

Diabolique

House on the Haunted Hill

Onibaba

Kwaidan

The Ring

Insidious

Tale of Two Sisters

Night of the Living Dead

The Shining

The Others

The Grudge

The Terror

The Innocents

It goes… couldn’t stop… so MUTE. 😉

— the list is incomplete —

Advertisements

14 comments

 1. தமிழில் பேய் மற்றும் திகில் சம்பந்தமான படைப்புகள் குறைவென்று யார் சொன்னது ? இன்று இரவுக்குள் அந்த லிஸ்ட்டை உங்களுக்கு இதன் அடுத்த கமென்ட்டில் தருகிறேன். 3;)

  • தமிழ் திகில் சினிமா… தமிழ் சூழலுக்கு ஏற்ற மாதிரி இல்லாமல் இறக்குமதி ஐட்டங்களாகத்தான் இருக்கு! அப்படிப்பார்த்தால் குறைவுதானே!

 2. உங்களின் அனுபவம் பற்றி முதல் முறை படிக்க ஆர்வமாக இருந்தது , எனக்கு கூட திகில் படம் பிடிக்கும் பேய் இல்லாத திகில் படமா இருக்கணும் அப்போ தான் ஏன்னா சின்ன வயசுல உங்கள போலவே கதை கேட்டு வளந்தவன் தான் புலியமரதுக்கும் பேய்க்கும் எவ்ளோ சம்மந்தம் எனக்கு சொல்லப்பட்ட கதைகளில் அப்படி தான் உசுப்பிவிட்டங்க எங்க கிராமத்தில் வீட்டுக்கு பின்னாடி 48 புளியமரங்கள் பேய் வரும் பார்க்கணும் பார்க்கணும் என்று ஏங்கி போனது தான் மிச்சம் இதுல நண்பர்களோட சேர்ந்து மரத்துல ஆணி அடிச்சிட்டு கொஞ்சம் ரத்தத்த சிந்த விட்டு ஓடி போய் மறைந்து பார்த்ததுலாம் இப்போ ஞாபகம் வருது. அதே போல ஊர்ல பேய் சிலருக்கு பிடிக்கும் ஆர்வமா போய் வேடிக்கை பார்ப்போம் ஆனா அதுக சாராயமும் சுருட்டும் குடிச்சிட்டு போய்டும் சப்புன்னு போய்டும் எங்களுக்கு. இப்படி உங்க கட்டுரையின் வாயிலாக என் பால்யத்தை நினைக்க வைத்ததுக்கு மிக்க நன்றி நண்பா பார்ப்போம் தமிழ்ல ஒரு அட்டகாசமான பேய் படம் பார்க்க எனக்கும் மிக ஆவல் தான்பா ….

  • அப்படி வரவேண்டும் என்றுதான் இப்படி ஒரு மூலையில் இருந்து கத்திக் கொண்டு இருக்கிறேன்… பார்ப்போம்.

 3. அருமையான நினைவுப்பயணம். எனக்கும் இதுபோன்ற கதைகேட்ட அனுபவங்கள் நிறைய இருக்கு. சின்ன வயசுல எங்க சொந்த வீட்டிலேயே இருட்டின பிறகு லைட் போடாத ரூமுக்குச் செல்ல ரொம்ப பயப்படுவேன். புளியமரத்த வச்சு சொன்ன பேய்க்கதைகள் மட்டுமில்லாம குளத்தங்கரைய வச்சு சொன்ன முனிக்கதைகள் எங்க ஊருல ஜாஸ்தி. அதுவும் இந்த பனிக்காலங்கள்ல நைட் ஆச்சினா எல்லாரும் வெளில வந்து நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து கொண்டே இந்தமாதிரி பேய்க்கதைகள் பேசுவாங்க. அதைக் கேக்கவே எனக்கு ரொம்ப பயமாயிருக்கும். அந்தக்கதைகள்லாம் தமிழ்ப்படங்கள்ல கரெக்டா சொன்னாங்கன்னா நமக்கு வெரைட்டி வெரைட்டியான பேய்ப்படங்கள் கிடைக்கும். ஆனா ஒருத்தரும் கண்டுக்கறதில்ல..

  • அப்படி ஒரு அனுபவத்தை பதியுங்களேன் நண்பா? நெருப்பு மூட்டி, குளிர்காய்ந்து கேட்கவே அருமையாக இருக்கு..

 4. நான் பார்த்த முதல் பேய்ப் படம் Evil Dead என்று ஞாபகம்… அட்டகாசமாக உணர்ந்தது The Ring… இடையே ஜெகன் மோகினி, 13ஆம் நம்பர் வீடு, etc. எல்லாம் பார்த்திருக்கிறேன்… நான் வாழ்ந்த வேதரண்யத்தில் ஒரு முறை பேயைத் தேடி கிளம்பியிருக்கிறேன்… அந்த அனுபவம் கீழே…

  http://www.nvkarthik.com/2010/06/devil-in-vedaranyam.html

  • எல்லோரும் முதலில் பார்த்த பேய்படமாக நினைவில் கொள்வது Evil Dead படத்தைத்தான்…

 5. நம்ம ஊர்ல திகில் படங்களுக்கு இருக்கிற முக்கியமான பிரச்சனை வந்து, இதுலாம் டகால்டிபா.. இதை போய் எடுத்திருக்காங்க அப்படினு சொல்லுவாங்க, இதையே வெளி நாட்டுல எடுத்தா தேடி போய் பார்ப்போம்.. நிலையான் மார்கெட் உருவாகலை.. அப்புறம் “the host” மாறி பகடிகளோடு நிறைந்தப் திகில் படங்களை பத்தி உங்க கிட்ட இருந்து ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்..

 6. மிக அழகான பதிவு ஒமர். கழுகுப்பார்வையில் திகில் சினிமா உலகின் லேண்ட்ஸ்கேப்பை குறித்துக்காட்டியுள்ளீர்கள். உண்மைதான் தமிழ் சினிமா காதல், ஆக்ஷன், ஹீரோ வொர்ஷிப் தாண்டி பல ஜெனிரேக்களில் ஆழம் பார்க்கவேயில்லை. அதில் ஹாரர் / திகில் சினிமா மிக முக்கியமானது. ஜென்ம நட்சத்திரம் படம் ரொம்ப டெரரா இருந்தது. ஆனா அது இறக்குமதி சரக்குன்னு தெரிந்தப்ப வெறுத்துப்போனது.

  • நன்றி, ஜானகிராமன்… இது மிகவும் மேலோட்டமான பார்வை மாத்திரமே. இன்னும் நிறைய விடயங்களை விட்டு விட்டேன்,

 7. அருமையாகச் சொன்னாய் நண்பா! என்கிட்ட ஒரு பேய்க்கத இருக்கு! டிஸ்கஷன் போடுவோம்.

 8. //அறியா வயசுல உலக சினிமா எல்லாம் தெரியாது என்பதால் பெஸ்ட் என்பதெல்லாம் அறியாமலேயே நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன்… அதில் முக்கால்வாசிக்கும் மேல் மொக்கைகள் என்பது பிற்பாடு அறிந்து கொண்டேன்.// same pinch…. நமக்கும் பேய் படங்களுக்கும் ரொம்ப தூரம்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s