மௌனவெளி: the Chimpanzee Complex

Science fiction is any idea that occurs in the head and doesn’t exist yet, but soon will, and will change everything for everybody, and nothing will ever be the same again. As soon as you have an idea that changes some small part of the world you are writing science fiction. It is always the art of the possible, never the impossible. – Ray Bradbury

“What we observe is not nature itself, but nature exposed to our method of questioning.”

– Werner Heisenberg (German Physicist)

அறிவியல் புனைவுகள் விஞ்ஞானத்தின் கதவுகளை அகலத்திறந்து கொடுத்தது என்றால் மிகையாகது. பல்வேறு வடிவங்களில், இலக்கியத்தரமிக்கதாகவோ, அல்லது மூன்றாந்தர pulp வகைமை சஞ்சிகைகளில் வந்த கதைகள் மூலமாகவோ அவை உருவாக்கிய சிந்தனைகள், கோட்பாடுகள் அறிவியலின் பல்வேறு சாத்தியங்களை முன்கூட்டியே அடையாளப்படுத்தியது. அறிவியல் புனைவின் ஆரம்பம் எது என்பது பற்றி பல்வேறு சர்ச்சைகளும் ஆய்வுகளும் இருந்தாலும் முதல் அறிவியல் புனைவு என்று அடையாளங்காணப்பட்ட படைப்பாக மேரி ஷெல்லியின் ப்ராங்கின்ஸ்டைனை சொல்லலாம். அது மனித மனத்தின் ஆழமாக பதிந்திருக்கும் உயிர் பற்றிய கேள்வியை அடிப்படையாக கொண்ட இலக்கியம். இலக்கியத்தில் அறிவில் புனைவு என்ற வகைமை தன்னகத்தே பல்வேறு உட்கூறுகளைக் கொண்டு அமைந்திருக்கின்றது. அதில் முக்கியமான ஒரு பிரிவுதான் விண்வெளி அறிவியல் புனைவுகள். விண்வெளிப் பயணம், செவ்வாய்வாசிகள், புதிய கிரகங்கள், ஏலியன்ஸ், ஸ்டார் ட்ராக், விண்வெளிப்பயணச் சிக்கல்கள், கருந்துளை, வோர்ம் ஹோல் என்று இப்புனைவுகளின் கருக்கள் அமைந்திருக்கும்.

Image

சந்திரனுக்குச் செல்வதையும், விண்வெளிப்பயணத்தையும் முன்கூட்டியே பதிவு செய்த இலக்கியங்கள் ஏராளம் இருக்கின்றன. மனிதன் தனது யுகப்பாய்ச்சலை நிகழ்த்திய 1961 ஆம் வருட சந்தரப்பயணம், அதற்கு முன்னரே யூரி ககாரரினின் விண்வெளிப்பயணம், ரஷ்ய – அமெரிக்க பனிப் போர் இவை மனிதனின் வியத்தகு விஞ்ஞான தொழில்நுட்ப அறிவை பரைசாற்றுகின்ற அதேவேளை பல்வேறுபட்ட சிக்கல்களும், மர்ம முடிச்சுகளும் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றது. சந்தரனில் முதல் மனிதன் மர்மம், அவன் உண்மையில் சென்றானா? என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க அப்படிச் செல்ல முடியுமான தொழில்நுட்ப அறிவு அன்று இருந்ததா என்ற முக்கியமான கேள்வியும் கூடவே எழுகின்றது.

அப்பலோ 11 விண்கலத்தில் பயணித்த ஆட்ரினும் ஆம்ஸ்ட்ரோங்கும் சந்தினில் இருந்து திரும்பிவரவேயில்லை அல்லது வந்தது வேறு யாரோ? இப்படியொரு சிக்கலை வைத்து பின்னப்பட்ட கதையே The Chimpanzee Complex.

2035 ஆம் வருடம் இந்து மகா சமுத்திரத்தில் இனங்காணப்பட முடியாத ஒரு விண்கலம் (Capsule) வீழ்கிறது. மீட்பு பணிக்கு பின்னர் அதிலிருந்து இரண்டு விண்வெளி வீரர்கள் வெளியே வருகிறார்கள். அதே நேரம் செவ்வாய் பயணக்கனவில் இருக்கும் ஹெலனுக்கு நாஸாவிலிருந்து திடிர் அழைப்பு வருகிறது. அவளுக்கு ஒரே மகள் சோபியா, அவளுக்கு தாய் தன் கூடவே இருக்க வேண்டும் என்ற ஏக்கமும் ஆசையும் இருக்க ஹெலனோ தன் இலட்சியங்களுக்கும் அன்பு மகளுக்கும் நடுவே தள்ளாடுகிறாள். மகளை விட்டுச் செல்ல எடுக்கும் அந்த ஒரு முடிவு நீண்டதொரு பிரிவை வேண்டி நிற்கும் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. நாஸாவின் அழைப்பை ஏற்றுச் செல்லும் ஹெலன் சந்திக்கும் இரு நபர்கள் ஆட்ரின் மற்றும் ஆம்ஸ்ட்ரோங்! இதனை நம்ப மறுக்கும் நாஸா மற்றும் ஹெலன் இதற்கான காரணமாக Chimpanzee Complex ஐ முன்னிறுத்துகின்றனர், விண்வெளி பயணங்களின் போது ஏற்படும் மனப்பிறழ்வை இது குறிக்கும். முதன் முதல் சிம்பன்ஸி ஒன்றை வைத்து ஆராய்ந்த போதுதான் இப்படியொரு சின்ட்ரோம் இருப்பது தெரியவந்தது அதனால்தான் இப்பிறழ்விற்கு இப்பெயர் வந்தது. ஆனால் அந்த இரண்டு வீரர்களது டீஎன்ஏ மற்றும் அவர்கள் வந்த கலத்தின் என்ஜின், பாகங்களின் நம்பர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது 100 வீதம் அசலுடன் ஒத்துப்போவதை கண்டு குழம்பிப் போகும் நாஸா திரும்பவும் அவர்களை விசாரிக்க போக… வருடக்கணக்கில் இறந்து கிடந்த மம்மி போல அவர்கள் இறந்து விட்டடிருக்கிறார்கள். இச்சிக்கலை அதன தன்மையை விளங்கிக் கொள்ள ஒரே வழி 1961 பயணத்தின் போது என்ன நடந்து என்பதை அறிந்து கொள்ள வேண்டும், அதற்கு சந்திரனுக்கு பயணிக்க வேண்டும். ஏற்கனவே பலமுறை விண்பயணம் மேற்கொண்ட ஹெலனுக்கு இது பெரிய விஷயம் இல்லை ஆனால் அதிகாரபூர்வமற்ற இப்பயணம் எங்கு இட்டுச் செல்லும் தன் மகள் பற்றிய கவலை என வாட்டுகிறது. சந்திரனை நோக்கி கலம் பயணிக்கின்றது. இக்கலம் செவ்வாய் பயணத்திற்கு தயார் செய்யப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட ப்ராஜக்ட். சந்திரனில் அப்பலோ 11 தரையிறங்கிய இடத்தில் மம்மியாக்கப்பட்ட இரண்டு சடலங்கள் – ஆட்ரின் மற்றும் ஆர்ம்ஸ்ட்ரோங்! கூடவே அப்பலோ மொடியூல்… (Capsule) அதில் மைகல் கொலின்ஸ். ஆச்சரிய அதிர்ச்சி! அந்த கேப்ஸ்யூலின் உள்ளேயிருந்து எடுக்கப்படும் ஒரு ரேடியோ சிக்னல் கருவியில் ரஷ்ய மொழியில் ஒரு தகவல் பதிவாகியிருக்கிறது… “This is Mars, This is Mars, Save us, Comrades” சந்திரப்பயணம் செவ்வாய் நோக்கிச் செல்கிறது… மகள் தனியாக வானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்! இத்துடன் The Chimpanzee Complex இன் முதல் பாகம் Paradox நிறைவு பெறுகிறது.

Sons of Ares மற்றும் Civilization ஏனைய இரண்டு பாகங்கள். இந்த நாவலின் முழுக்கதையைம் சொல்லிவிட்டால் நாவலை வாசிக்கப் போகிறவர்களுக்கு சங்டமாக இருக்கும் என்பதால் அதனை தவிர்த்து விடலாம். முதல் பாகம் ஒரு ஆரம்பம் மாத்திரமே.

மூன்று பாகங்களைக் கொண்ட இந்த க்ராபிக் நாவல் விண்வெளி பயணத்தையும் மனித உறவுகளையும் பிணைக்கின்றது. பூமியின் கூரைகளில் இருந்து இரவு வானத்தின் நட்சத்திரங்களை கண்டு அந்த தொலைதூர பயணத்தை சாத்தியமாக்க முடியுமா என்று சிந்திக்கும் மனிதர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். இந்த பிரபஞ்ச வெளி கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும், கோள்களையும், கேலக்ஸிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. விடைகாண முடியா சிக்கல்கள்களும் மர்மங்களும் இருண்ட பக்கங்களும் நிறைந்த இந்த மௌனவெளியில் சாத்தியங்களுக்கு என்ன வரையறை இருக்கப் போகிறது? நாம் இவ்வுலகில் இருக்கும் போதான எமது பௌதீகம் விண்வெளியில் அவ்வாறே இருக்குமா? விண்வெளிப் பயணம் எமது பௌதீக விதிகளை மாற்றி அதற்கேயுரிய ஒழுங்கில் அல்லது ஒழுங்கற்ற தன்மைக்கும் ஏற்ப அமைந்துக்கொள்ளுமா? நாமும் மௌனவெளியில் ஓர் அங்கமாகிவிட்டால்? இவ்வாறான விஞ்ஞானத்தின் மிகச்சிக்கலான கேள்விகளை கொண்டு அமைந்திருக்கின்றது இந்த க்ராபிக் நாவல் அதே நேரம் அது பாடம் எடுக்கவும் இல்லை. பிரபஞ்சம் எவ்வளவு அற்புதமானது, அதிசயங்களை கொண்டது, முடிவுறாத பயணங்களையும் எண்ணற்ற சாத்தியங்களையும் கொண்டது ஆனால் அப்படியொரு பயணத்தின் போது கோடானகோடி நட்சத்திரங்களுக்கு மத்தியிலும் பல அதிசயங்களுக்கு மத்தியிலும் இந்த நீலக் கிரகத்தை நோக்கியே மனம் வீற்றிருக்கும்… பூமி அதுதான் இந்த புனைவு நமக்கு சொல்லவருவது. பூமிக்கும் மனிதனுக்குமிடையிலான பந்தம் பிணைப்பு விளங்கமுடியாத புதிர் அது இழப்பின் போதுதான் தெரியும் என்பது எவ்வளவு துரதிஷ்டவசமானது.

எழுத்துவடிவில் அல்லது சினிமாவில் அறிவியல் புனைவை அற்புதமாக சித்தரித்துவிட முடியும் ஆனால் க்ராபிக் நாவலில் (காமிக்ஸ் வடிவில்) சித்தரிப்பது என்பது சற்றே கடினமான காரியம். The Chimpanzee Complex நிகழ்த்தியிருப்பது ஒரு சாதனை. இந்த நாவலின் தன்மையும், அதன் ஓவியங்களும் கதையில் நம்மை ஒன்றித்திருக்க வைக்கிறது. க்ராபிக் நாவல்கள் அல்லது காமிக்ஸ்களில் நம் மனத்துடன் பேசும் தன்மையை உருவாக்குவது கஷ்டம் ஆனால் இந்தப் பயணம் மௌனவெளியை ஞாபகமூட்டுகிறது. இன்னும் திரைப்பட இயக்குனர்களுக்கு இந்த கதை கண்ணில் படமால் இருப்பது ஆச்சரியமே அப்படி கொண்டு வந்தால் அற்புதமான ஒரு திரையனுபவத்தைக் கொடுக்கலாம்.

மௌனவெளியின் இருளும், இருளின் தனிமையும், தனிமையின் ஏக்கமும், ஏக்கத்தின் வலியும் உணர முடிந்த இந்த க்ராபிக் புனைவு மனத்தை விட்டு அகல மறுக்கிறது.

குறிப்பு:

  1. வெர்னர் ஹெய்ஸன்பெர்க் என்ற ஜேர்மனிய பௌதீகவியளாலரின் கோட்பாட்டினை மையமாகக் கொண்டு இந்நாவல் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த கோட்பாடு கதையின் முக்கியப்புள்ளி என்பதால் அதனை இங்கு கூறவில்லை. சஸ்பென்ஸ் உடைந்துவிடும். இருந்தாலும் Uncertainty Principle பற்றி இணையத்தில் தேடிப்பார்த்துக் கொள்ளவும். அது தெரியாவிட்டாலும் கதைபுரியும்.
  2. இது இரண்டாவது காமிக்ஸ் / க்ராபிக் நாவல் பற்றிய கட்டுரை.
  3. Richard Marazan தான் இந்த கதையை எழுதியவர், இவர் பற்றி இணையத்தில் தேடியதில் அவ்வளவாக தகவல்கள் கிடைக்கவில்லை ப்ரான்ஸை சேர்ந்த இவர் நிறைய காமிக்ஸ்கள் மற்றும் க்ராபிக் நாவல்களை உருவாக்கியிருக்கிறார். ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் காமிக்ஸ்களில் The Chimpanzee Complex (3 Albums) மற்றும் Gemetiks (3 Albums) இரண்டும் அடக்கம். Gemetiks ஜீன்ஸ் சம்பந்தமானா ஒரு மெடிகல் த்ரில்லர்.
  4. Jean-Michel Ponzio இந்த அல்பத்தின் ஓவியர் – எழுத்தாளரும் ஓவியரும் சரியாக வேலை செய்து இருப்பது இந்த அல்பத்தை வாசிக்கும் போது விளங்கும். இவர் நிறைய புத்தகங்களுக்கும் ஓவியங்கள் வரைந்துள்ளார். இவரது ஓவியங்களை இங்கே பார்க்கலாம். 
Advertisements

8 comments

  1. நாவல் விமர்சனம் ஒரு திரைப்படம் கண்ட அனுபவம் தருகிறது, அருமை நண்பா தொடரட்டும் உங்கள் பகிர்வுகள் 🙂

    • நன்றி நண்பா… இன்னும் பகிர வேண்டும் அதற்கு நம் சோம்பல் இடம்கொடுப்பதில்லை… எழுந்து வா! கொட்டாவி

  2. //விடைகாண முடியா சிக்கல்கள்களும் மர்மங்களும் இருண்ட பக்கங்களும் நிறைந்த இந்த மௌனவெளியில் சாத்தியங்களுக்கு என்ன வரையறை இருக்கப் போகிறது? நாம் இவ்வுலகில் இருக்கும் போதான எமது பௌதீகம் விண்வெளியில் அவ்வாறே இருக்குமா? விண்வெளிப் பயணம் எமது பௌதீக விதிகளை மாற்றி அதற்கேயுரிய ஒழுங்கில் அல்லது ஒழுங்கற்ற தன்மைக்கும் ஏற்ப அமைந்துக்கொள்ளுமா? நாமும் மௌனவெளியில் ஓர் அங்கமாகிவிட்டால்? இவ்வாறான விஞ்ஞானத்தின் மிகச்சிக்கலான கேள்விகளை கொண்டு அமைந்திருக்கின்றது இந்த க்ராபிக் நாவல்//
    மீண்டும் ஒருமுறை உங்கள் தமிழ் லாவகம் கண்டு பொறாமை கொள்கிறேன்..!!

    • ரொம்ப கஷ்டப்பட்டு எழுதினது ஆனா இன்னும் அதன் ஆழமான அர்த்தம் வெளிப்படவில்லை என்ற ஏக்கமும் இருக்கு…

      ரொம்ப நன்றி ஜி… உங்க தயவால நானும் பெரிய ரைட்டர் ஆகி… அப்படியே இலக்கிய சர்ச்சைகள்ல மூழ்கி பேமஸ் ஆயிடனும்.. ஹி ஹி.

  3. ஆங்கில கிராபிக் நாவலா ?!? அப்டின்னா நமக்கு கொஞ்சம் டர்ருதான்.. ஆனா கதையைப் பாத்தா எனக்கு ரொம்ப புடிக்கும்னு தோணுது.. நெட்ல கிடைக்குதா இது ? நீங்க எப்டி படிச்சீங்க ?

  4. முதல் ஆங்கில கிராபிக் நாவல் உமர நம்பி வாசிக்க போறன்.. எப்டியும் மாசகணக்கு ஆகும் (வருடகணக்கானாலும் ஆச்சரியப்படுரதுக்கில்ல)… எனி வே உங்க எழுத்து வாசிக்க அலாதியானதுனு சொல்லியா தெரியனும்…(எழுத்து வித்தகன் ஐயா நீர்) – ரொம்ப ‌ஐஸ் வக்கிறனோ.. 😛

    • எழுத்து வித்தகன் இது நல்லா இருக்கே… ஆனா அதுக்கு நாம இன்னும் வளரணும் ஐயா! நன்றிஹை!

  5. நல்ல விமர்சனம் … படிக்கும் போது நான் உணர்ந்த பல விஷயங்களை பிரதிபலித்துள்ளீர்கள் … !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s