மெயிக்கோ காட்டேரி

இலக்கியங்கள், சினிமா இவை இரண்டையும் கடந்து பின்னோக்கிச் செல்பவை வெம்பயர் பற்றிய தொன்மங்கள். இருண்ட யுகம் தொடக்கம் இந்த இனம் பற்றிய கதைகள் பல்வேறு வடிவங்களில் இருந்து வருகிறது. ப்ராம் ஸ்டோகரின் டிராகுலா நாவல் வெம்பயர் பற்றி ஏற்படுத்திய பீதி கலை, இலக்கியம், சினிமா போன்ற தளங்களில் படைப்புருவாக்கம் எடுத்துள்ளது. ஸ்டோகரின் டிராகுலாவுக்கு முன்னரே பல்வேறு கதைகள் வெம்பயரை வைத்து எழுதப்பட்டு இருந்தாலும் இலக்கியத்தரத்திலும் அதன் வடிவத்திலும் தூங்கவிடாமல் செய்ததிலும் டிராகுலா வெற்றி கண்டது. இவ்வளவு இருந்தும் சினிமாவில் வெம்பயர் மிகவும் சிலாகித்து போற்றத்தக்க படைப்புகளாக மூன்று படங்களை குறிப்பிடலாம் Nosferatu: the symphony of horror, Bram Stoker’s Dracula மற்றும் Nosferatu: the vampyre. இது தவிர வெம்பயர் / டிராகுலா மையப்படுத்தி எடுக்கப்பட்ட அத்துனை படங்களும் பெரும்பாலும் (மேற்சொன்ன மூன்று திரைப்படங்கள் உட்பட) ப்ராம் ஸ்டோகரின் நாவலை தழுவியதாகவே அமைந்திருந்தது. முர்னாவ், ஹெர்சாக், கொப்பாலா போன்றவர்களின் வெர்ஷன் வீரியம் மிக்கதாகவும் சிறப்பாகவும் அமைந்திருந்தது. இந்த சிறிய பின்னணியுடன் நிறுத்திக் கொண்டு நாம் சற்று பின்னோக்கிச் செல்லலாம். இது ப்ராம் ஸ்டோகரின் டிராகுலாவுக்கு முந்திய காலம்.

Image

வெம்பயர்கள் என்பது விலாத் டிராகுலா என்ற ரோமானிய மன்னனின் வாழ்வுடன் மாத்திரம் தொடர்பான ஒரு இனம் அன்று. பல்வேறு தொன்மங்கள் மற்றும் நாட்டார் மரபுகளில் பழங்காலம் தொட்டே புழக்கத்தில் இருந்து வரும் ஒன்று. பிற உயிர்களில் இருந்து இரத்தம் குடிக்கும் இந்த இனம் பல்வேறு பெயர்களில் பல்வேறு கலாச்சாரங்களில் இருந்து வரும் ஒன்றே. சில தொன்ம கதைகளில் மனிதர்களின் ஆன்மாவை உறிஞ்சி வாழும் என்றும் இருக்கிறது. மொஸபதேமிய, பண்டைய ரோம நாகரீங்களிலும் இது பதிவாகியிருக்கிறது. இங்கு நான் இந்த இனம் இருக்கிறதா இல்லையா என்ற ஆராய்ச்சிக்கு செல்லவில்லை. பண்டைய தொன்ம புத்தகங்கள், நாட்டார் மரபு கதைக் குறிப்புகள், வெம்பயர் பற்றிய விஞ்ஞானம் என்று தேடத் துவ ங்கினால் எமது ஆயுளை அதற்கேன்றே ஒதுக்கி வைத்துவிட வேண்டும். இப்படியான பழம் இலக்கியங்கள், தொன்மங்கள், நாட்டார் மரபுகள், புத்தகங்கள் போன்றவற்றில் முயங்கிக் கிடந்தாலே ஒழிய Cronos, Pan’s Labyrinth, Blade II, Hellboy: the Golden Army போன்ற திரைப்படங்களை படைக்க முடியும். கூடவே தெளிவான அரசியல் பார்வையும் இருக்க வேண்டும்.

கியர்மோ டெல் டோரோ ஹாலிவூடின் தனித்த பயணி, தொன்மங்களின் கதைசொல்லி, இருண்ட யுகங்களுக்குள் மறைந்திருக்கும் ஜீவராசிகளை கைபிடித்து அழைத்து வருபவர். இவரது திரைப்படங்களில் வரும் Creatures சிலவேளைகளில் நாங்கள் கேள்விபட்டே இருக்க மாட்டோம். அல்லது Pan’s Labyrinth இல் வரும் faun இதுநாள் வரை நாம் கற்பனை செய்து வைத்திருந்ததை விட வேறுமாதிரி இருக்கும். காரணம் அவர் அதன் மூலத்திற்கே சென்று எடுத்து வந்திருப்பார். இந்த படத்தில் இருக்கும் fairy, pale man இரண்டும் காதிக் ஹாரரின் கலைச் சித்திரங்கள். கோயாவின் இருண்ட ஓவியங்களின் பாதிப்பு இந்த படத்தில் காணப்படும். டெல் டோரேவிற்கு மிகவும் பிடித்தமான ஓவியர் கோயா மற்றும் ஹொகுசாய். தொன்மவியல், நாட்டாரியல், இலக்கியங்கள், ஓவியங்கள் மீதிருக்கும் அபரிமீதமான வாசிப்பனுபவத்தை இவரின் படங்களில் காணலாம்.

Cronos, Blade II மற்றும் The Strain (Trilogy – The Strain, The Fall & The Night Eternal) இம்மூன்று படைப்புகளும் வெம்பயர் இனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள். Cronos டெல் டோரோவின் முதல் திரைப்படம். வெம்பயர் பரவல் பொதுவாக ஒரு வெம்பயர் இரத்தம் குடித்து மரணித்த பின் விழித்தெழுவதன் மூலம் நிகழும். பின்னர் வந்த படங்களில் சட்டென்று மாறும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் இந்த படத்தில் பண்டைய கால ரசவாதி ஒருவன் நீண்ட கால தேடலின் விளைவாக என்றும் சாஸ்வதமாய் நிலைத்திருக்கக் கூடிய வாழ்வை கண்டுபிடிக்கிறான். அது ஒரு மெகானிஸம், அந்த காவி ஒரு பூச்சி. Crons Device என்றழைக்கப்படும் இந்த கருவி ஒரு தங்க வண்டு வடிவில் காணப்படும். அதனுள் இருக்கும் ஒரு சிறிய பூச்சிதான் இதனை இயக்கும் அதாவது சாஸ்வத வாழ்வின் காவி. அதை உபயோகிப்பவரின் இரத்தத்தை உறிஞ்சி தனக்குள் இருக்கும் ஒருவித சக்தியை அவனுள் செலுத்துகிறது. இத்திரைப்படம் ஒரு குட்டிக்கதை போன்றது. நம் வீட்டில் பாட்டி சொல்லும் கதையை ஒத்தது. வெம்பயர் மீதான ஒரு புதிய பார்வையை இத்திரைப்படம் வழங்குகிறது. பூச்சியியல், Clockwork Mechanism, Alchemy இப்படி பின்னோக்கிச் சென்று வெம்பயர் இனத்தின் மூலங்களை நமக்கு கொண்டு வந்து தருகிறார் டெல் டோரோ.

Image

Blade II, நான் இது டெல் டோரோ படம் என்று தெரியாமலேயே பல தடவைகள் பார்த்திருக்கின்றேன். இத்திரைப்படம் இதன் முந்தைய பாகம் மற்றும் மூன்றாவது பாகம் இவற்றிலிருந்து வேறுபட்டு தனித்துத் தெரியக்காரணம் டெல் டோரோ இதற்கு வழங்கியிருக்கும் புதிய Origin or Dimension. பாதி மனிதன் பாதி வெம்பயர் பகலிலும் நடமாடும் Daywalker இந்த ப்ளேட். இதில் டெல் டோரோ அறிமுகப்படுத்தியிருக்கும் விடயங்கள் Reaper Virus புதுவகை வெம்பயர் breed கிட்டத்தட்ட super vampires மிகவும் கொடூரமானவை காரணம் இவை மனிதர்களை மாத்திரம் வேட்டையாடாமல் வெம்பயர் இனத்தையும் சேர்த்து துவம்சம் செய்யபவை. இந்த நாசகார இனங்களை அழிப்பதற்கு Bloodpack என்ற வெம்பயர் assassin களுடன் ஒன்று சேர்கிறான் ப்ளேட். இதில் புதிய வகை ஆயுதங்கள் நிறைய வரும். நல்லவன் கெட்டவன் என்ற இரண்டு எதிர் எதிர் துருவங்களை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கும் சினிமாக்களுக்கு மத்தியில் டெல் டோரோவின் இந்த படம் அப்படி வரையறை செய்வதில்லை. மாறாக விசாரனைகளையே முன்வைக்கின்றது. பொதுவாக டெல் டோரோ படங்களில் வரும் மன்ஸ்டர்கள் இவ்வாறுதான் அடையாளப்படுத்தப்படுகின்றன. தீய சக்தி, நல்ல சக்தி என்றெல்லாம் இல்லை எமது புரிதலில்தான் இருக்கின்றது என்பார் டெல் டோரோ.

The Strain இது டெல் டோரோவின் கன்சப்ட். இது தொலைக்காட்சித் தொடருக்கென்றே உருவாக்கப்பட்டது. ஸ்டியோக்கள் இதனை ஒரு காமெடி தொடராக மாற்றக்கோரியதால் அந்த முயற்சியை கைவிட்டார். நமது டெல் டோரோவுக்கு இந்த வெம்பயர் காதல், Werewolf Romance போன்ற வகையறாக்கள் சுத்தமா பிடிக்காது என்பதாலோ என்னவோ? (Ref. Twilight)  பின்னர் Chuk Hogan உடன் சேர்ந்து இதை நாவலாக கொண்டுவந்தார். மூன்று பாகங்களை கொண்ட இந்த நாவல் பண்டைய வெம்பயர் இனம் ஒன்று சமகால உலகை ஆக்கிரமித்து இருண்ட யுகமாக மாற்றிவிட எடுக்கும் பிரயத்தனங்களை தடுக்க CDC ஐச் சேர்ந்த Dr. Ephraim, யூத இனப்படுகொலையின் போது தப்பிய ரகஸியங்களை கொண்ட Abraham Setrakian மற்றும் இன்னும் சிலர் சேர்ந்து நடத்தும் போராட்டமே இந்த நாவல். இதில் டெல் டோரோ வெம்பயர் இனத்திற்கு முழுப்பரிணாமத்தையே வழங்கியிருக்கிறார். பண்டைய காலம் நவீன காலம் என்று மாறி மாறிச் செல்லும் இந்த நாவல் சாதாரண வாசிப்புக்கு ஏற்ற புனைவு ஆனால் அதில் அடங்கியிருக்கும் ஆயிரம் வருட தொன்ம அறிவு வியக்கத்தக்கது. அதுதான் டெல் டோரோ.  Cronos, Blade II போன்ற திரைப்படங்களின் நீட்சியே ஒருவிதத்தில் இந்த The Strain வெம்பயரிஸம், நவீன விஞ்ஞானம், பண்டைய நாட்டார் மரபு, தொன்மங்கள் என்று டிராகுலா என்ற புனைவிலிருந்து நம்மைத் துண்டித்து துவக்கத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது இம்மூன்று நாவல்களும் மற்றும் திரைப்படங்களும்.

டெல் டோரோவின் திரைப்படங்கள் அனைத்தும் உச்சபட்ச திகிலை கொடுக்கக் கூடிய கதைக்களத்தைக் கொண்டவை ஆனால் அவ்வாறு அவை பயமுறுத்துவதில்லை மாறாக மாபெரும் அழகியல் அனுபவமாக மாறிவிடுகிறது. அதுதான் மெஜிக்.

Note: இன்னும் டெல் டோரோ பற்றி பேச நிறைய இருக்கின்றது. அவர் படங்களில் வரும் ஒவ்வொரு ஜீவன்களை பற்றியும், அவரது யுனிவர்ஸ் பற்றியும் பேசுவோம். இந்த கட்டுரையை விரிவாக எழுத வேண்டும். வெம்பயர் பற்றிய சிறு அறிமுகம் மாத்திரமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. The Strain நாவல் மூன்று பாகங்கள் கொண்டது அதனை முழுதாக இங்கு சொல்ல முடியாது.

இந்த கட்டுரை சம்பந்தமாக முகப்புத்தக சாட்டில் உதவிய நண்பன் Saran Kumar இற்கு நன்றிகள்.

Advertisements

13 comments

 1. டெல் டோரோவின் படங்கள் கிராமியக் கதைகளுடன் கூடிய ஒரு தேர்ந்த பார்வையும், அழகியலுடன் கூடிய உன்னத உணர்வும் தான் சிறப்பு.

  • இவர் படங்கள் பற்றி பேசப் போனால் நிறைய விடயங்கள் இருக்கின்றன. டெல் டோரோவை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஜீனியஸ். விஷனரி.

 2. கொஞ்சம் விட்டா நீங்களும் வேம்பயரா மாறிடுவீங்க போல..!! இவ்ளோ ரத்த வெறியா.. 😛 🙂 (சரனு நீங்களும் இதுக்கு உடந்தையா..!!)

  அப்றம் ஒரு டவுட்டு.. அடிக்கடி உங்க பதிவுகள்ல நாட்டாரியல்-னு குறிப்பிடுறீங்களே..? அப்டின்னா என்ன ? கொஞ்சம் புரியற மாதிரி எளிமையா சொன்னா புரிஞ்சுக்குவேன்.

  • நாட்டாரியல் என்றால் folklore – பாடல்கள், நாட்டுபுற கதைகள், கட்டுக்கதைகள், பழமொழிகள், பெயாரி டேல்ஸ்… இப்படி நீண்டு கொண்டே போகும். உதாரணத்துக்கு கதைவழிப் பாடல்களில் சொல்லப்படும் சிறு தெய்வங்களின் வரலாறு அல்லது லெஜண்ட்ஸ். உங்கள் ஊரில் உள்ள பாட்டிகள் சொல்லும் பேய்க்கதைகள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நாட்டார் மரபு, நாட்டார் பாடல், சித்தர் பாடல்களும் இதில் அடக்கம். தொன்மங்கள் என்றும் சொல்வேன் அது mythology.

   பாஸ் நான் ஆல்ரெடி ஒரு வெம்பயர்.

 3. ஏதோ சொல்ல வர்றீங்க என்னன்னு முழுசா எனக்கு புரியல…
  இருந்தும் இத வாசிச்சதுக்கு காரணம்… உங்க எழுத்துநடை…
  i really like it…

  • எது புரியல என்று சொல்லுங்க? புரியாவிட்டால் என் எழுத்தில் குழப்பம் என்றுதான் அர்த்தம். 😦 விளங்கபடுத்த முடிந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

 4. அருமையான ஒரு ஒப்பீட்டு கட்டுரை. ரசித்துப் படித்தேன். என் மனதின் பொருள் தேடல் வரிசைகளில் இடம் பெற்றிருப்பவர்களில் டெல் டோரோவும் ஒருவர்.

  • இன்னும் கியர்மோ டெல் டோரோ பற்றி பேச நிறைய இருக்கிறது ஒவ்வொன்றாக வருவோம். இப்போதைக்கு இது ஆரம்பம் மட்டுமே.

 5. மிக அருமையான கட்டுரை Del Toro அவர்களை பற்றி ரொம்ப அழகா சொல்லி இருந்திங்க. முக்கியமா இந்த இரண்டு விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது:

  1. // இருண்ட யுகங்களுக்குள் மறைந்திருக்கும் ஜீவராசிகளை கைபிடித்து அழைத்து வருபவர்// – எப்படி உங்களால மட்டும் இந்த மாறி அழகா எழுத முடியுது.

  2. // டெல் டோரோவின் திரைப்படங்கள் அனைத்தும் உச்சபட்ச திகிலை கொடுக்கக் கூடிய கதைக்களத்தைக் கொண்டவை ஆனால் அவ்வாறு அவை பயமுறுத்துவதில்லை மாறாக மாபெரும் அழகியல் அனுபவமாக மாறிவிடுகிறது. அதுதான் மெஜிக்.//

  • வருகைக்கும் கருத்துக்கு நன்றி கீர்த்தி, முக்கியமா எனக்கு இந்த மாதிரி இருண்ட வார்த்தைகளை தேடிப்பிடித்து வருவதுதான் விருப்பம் அதான் அப்படி. மற்றபடி பெரிதாக ஒன்றுமில்லை.

   • இது போல் ஒரு அற்புதமான கட்டுரையை எழுதியதிற்கு, நான் உங்களுக்கு நன்றி குற வேண்டும். நன்றி ஓமர் 🙂

 6. நானும் Strain நாவலை பற்றி கொஞ்சம் சொல்லி கொள்கிறேன்:

  எனக்கு The Strain நாவலில் மிகவும் பிடித்த விஷயம் Vampire Transformation’நிற்கு அறிவியல் பூர்வமாக சில உதரணங்களை கொடுத்து இருப்பார். அது மட்டும் இல்லாமல் எலி’கலை பற்றி சில தெரியாத விபரங்களையும் தெரிவித்து இருப்பார்.

  • வெம்பயர்களுக்கு அறிவியல் ரீதியான ஒரிஜினை வழங்கியதில் தான் டெல் டோரோவிற்கும் மற்ற வெம்பயர் கதைகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம். ப்ளேட் 2 வில் இதை செய்திருப்பார் அதன் நீட்சியே இந்த ஸ்ட்ரைன் நாவல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s