Jason Brice: அமானுஷ்ய புலன் விசாரணை

அண்மையில், வாசித்த மூன்று பாகங்களைக் கொண்ட க்ராபிக் நாவல். முதலாம் உலகப் போரின் பின்னரான காலகட்டத்தில் நடக்கும் கதை. இம்மாதிரியான கதைக்களங்கள் என்னை எப்போதும் ஈர்த்து வருபவை. மாந்திரீக, மறைக்கப்பட்ட உண்மைகள, சொல்லக்கூடாத கதைகள், திறக்கக் கூடாத கதவுகள் என்று மனித கண்களிலிருந்து மர்ம உலகில் ஒழிந்து கிடக்கும் இவ்வகை கதைகளை புனைவாளன் தனது புனைவில் கொண்டு மர்மங்களை துலங்க வைப்பதில் காணும் இன்பத்தை வாசிக்கும் நாமும் அடைகின்றோம்! அந்த புதிர்ச்சுழலில் சிக்குவதில் கிடைக்கும் அனுபவம் அலாதியானது. இவ்வகையான கதைகள் விசேட விருப்பில் உள்ளவை, உம்பர்தோ எகோவின் கதைகளைப் போல இலக்கியத்தரம் மிக்கவையாக இல்லாத போதும், ஏதோ ஒருவகை களிப்பை தருகின்றது இவ்வகையான கதைகள். (ஆனாலும் இந்த வகையில் மிகவும் அற்ப ரக கதைகளும் உண்டு)

01. எழுதப்பட்டது – The Written

Jason Brice: The Written
Jason Brice: The Written

மீடியம் ஒருவரின் உதவியை நாடி ஒரு வயதான பாட்டியும், இன்னொருவரும். பாட்டி தனது கணவருடன் பேச முட்படுகிறாள். இந்த நிகழ்வில் நடைபெறும் சோசடியை கண்டு கொண்டு, போலி மீடியம்களை சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கிறார், ஜேஸன் ப்ரைஸ். இந்த இடத்தில் ஜேஸனின் பாத்திரம் எப்படியானது என்று தெளிவாகிறது. அமானுஷ்ய விடயங்களில் நம்பிக்கையில்லாத, போலிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு புலனாய்வாளர். முதலாம் உலகப் போருக்கு பின்னரான காலக்கட்டத்தில் இவ்வாறான அமானுஷ்ய தொடர்பாளர்கள் நிறைந்து காணப்பட்டார்கள், தாம் பரிகொடுத்த பிள்ளைகள், கணவன், சகோதரர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தருவதாகக் கூறி போலி மீடியம்கள் திரிந்த காலமது. அந்த கைது நடக்கும் வேலையிலேயே பாட்டி இறந்து விடுகிறார்.

இதே சந்தர்ப்பத்தில், பிரிதோர் இடத்தில். தெரேஸா என்ற பெண், அவளது வீட்டு முற்றத்தில் கதையாடிக் கொண்டிருக்கும் போது வேலைக்காரர் ஒரு புத்தகத்தை கண்டெடுத்ததாகக் கூறி அவளிடம் கொடுக்கிறார். அது ‘தெரேஸா ப்ரென்ட்ரகாஸ்டின் மரணம்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. தெரேஸாவின் மரணத்திற்கு முன்னரான துர்சகுனங்கள் குறிக்கப்பட்டிருக்கும் புத்தகத்தை எடுத்து பார்த்த மாத்திரத்திலேயே முதல் சகுனம் தென்படுகிறது. காகங்கள்.

இந்த புத்தகமும் பிரச்சினையும் ஜேஸனிடம் வருகிறது. இதுவெல்லாம் ஏமாற்று வேலை என்று ஆறுதல் கூறும் அதேவேளை கேஸையும் எடுத்துக்கொள்கிறார். அந்த புத்தகத்தை எழுதியவர் பற்றி தேடும் போது, இன்னும் பல மர்மங்கள் விரிகின்றன. இவ்விடத்தில் இந்த பாக அறிமுகத்தை நிறுத்திக் கொள்கின்றேன்.

அந்த எழுத்தாளரின் பெயர் Morgan Fatoy.

துர்சகுனங்கள், ப்ளாஷ் பேக், பாத்திரங்கள் பற்றிய அறிமுகங்கள், இன்னும் புதிய முடிச்சுகள் என்று இந்த பாகம் முழுதும் மர்மம் இறுகிக் கொண்டே போகிறது.

 02. மறைக்கப்பட்டது – The Hidden

Jason Brice: The Hidden
Jason Brice: The Hidden

ஜேஸனின் யுத்தகால குரூர நினைவுடன் துவங்கும் இரண்டாம் பாகம் முந்தைய பாக மர்மங்களுக்கான சரியான கேள்விகளை தேடி நகர்கிறது. முதல் தேடுதலை Morgan Fatoy இலிருந்து ஆரம்பிக்கிறார். இந்த எழுத்தாளரின் புத்தகங்கள் வருங்காலத்தை முன்கூட்டியே கூறுபவை ஆனால் அனைத்தும் துர்நிகழ்வுகளே.

இந்தப்பாகத்தில் ஓரளவு மர்மங்கள் விளக்கப்பட்டாலும். ஒரு சில முக்கிய புதிர்களை மூன்றாம் பாகத்துக்காக வைத்திருக்கிறார்கள்.

லண்டனின் குற்றவுலகம், இரவில் விழித்தெழும் இருண்ட பக்கங்களை இந்த பாகத்தில் பார்க்கலாம். இவற்றினுள் மறைந்து கிடக்கும் குரூரங்களும். வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மனிதர்கள், திருடர்கள், விபச்சாரிகள் என செல்கிறது. முழு மொத்தமாக இந்த பக்கங்களை காட்டாவிட்டாலும், கதையின் போக்கில் பதிவுகளாக சிதறிக் கிடக்கின்றன. இவ்விடத்தில் From Hell ஞாபகம் வருகிது.

வரலாறு, தொல்லியல், மறைக்கப்பட்ட உலகம், திறக்கக்கூடாத கதவுகள்… இந்த பாகம் விரியும் கதைத்தளம் இது.

இந்த பாகம் முடியும் தருவாயில் அமானுஷ்யம் உருக்கொள்கிறது.

03. உண்மை – The Revealed

Jason Brice: The Revealed
Jason Brice: The Revealed

Isle of Coll, Scotland.

தனது பால்ய கால நினைவுகளை மீட்டிபார்க்கும் ஜேஸன். தந்தையின் மரணம் பற்றி நினைக்கிறான்.

இந்த பாகம் முந்தய பாகங்களுக்கான விடைகளை கொண்டிருப்பதால், இதை பற்றி கூறினால் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் போய்விடும். என்னால் முடிந்தவரை அறிமுகத்தை மாத்திரம் வைத்துள்ளேன் விரும்பியவர்கள் படித்துக் கொள்ளலாம். (டொரன்டில் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது)

இக்கதைகள் லயன் காமிக்ஸில் வருவதாக கேள்வி? வந்தால் சேகரிப்பில் வைத்துக் கொள்ளலாம் என்று உத்தேசம்.

Advertisements

5 comments

  1. //இக்கதைகள் லயன் காமிக்ஸில் வருவதாக கேள்வி? வந்தால் சேகரிப்பில் வைத்துக் கொள்ளலாம் என்று உத்தேசம்.//

    தமிழில் படிக்க சிறிது காத்திருங்கள். லயன் காமிக்ஸில் வருகிறது

  2. 1.Written இல் ஒரே பத்தி திரும்ப திரும்ப வருகிறது, நீக்குங்கள். அறிமுகத்துக்கு நன்றி. தமிழில் வரக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

  3. This is one of the best series that i have read. I was completely floored. I introduce this series to all my friends who wanted to read comics. This series will clearly show that this one is far better than the DC or Marvel or Novels or movies.

    My all time favorite

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s