ராட்சத பல்லிகள்: Kaijus, Monsters from deep beneath the Pacific!

“We always thought that alien life would come from the stars, but it came from deep beneath the pacific…” Pacific Rim

“Well, the first thing is that I love monsters, I identify with monsters.” Guillermo Del Toro

“What would an ocean be without a monster lurking in the dark? It would be like sleep without dreams.” Werner Herzog

“nGraaaaaaaaaaaaaaaa………………………….” Kaiju

பெரும் புயல், கடும் மழை – இவ்வளவும் ராட்சத அலைகள் வீசும் பசுபிக் பெருங்கடலில். ஜாப்பானிய மீன் பிடி கப்பல். என்ன நடக்கிறது. தடுமாற்றம். கப்பல் ராடாரில்… சமிக்ஞை, என்ன இது… இன்னும் கிட்ட வருகிறது. திமிங்கிலம்… இல்லை இல்லை இது அதைவிட பெரிது, கப்பலை நோக்கித்தான் வருகிறது… நெருங்கிவிட்டது.

வயதான கிழவர், பயத்தில் நடுங்கிக் கொண்டே….. ‘கொஜிரா… கொஜிரா’ என்று முனுமுனுக்கிறார்.

பிரமாண்ட ஓலம்
பிரமாண்ட ஓலம்

இந்த ஓபனிங் காட்சிகளை மறக்க முடியாது. (என்னதான் ரோலன்ட் எமரிச்சின் படங்கள் மொக்கையாக இருந்தாலும், காட்ஸில்லாவுக்காகவே பல தடைவ பார்த்திருக்கின்றேன்). காட்ஸில்லா (1998) படத்துக்கு பிறகுதான் ஜப்பானிய ராட்சத பல்லிகள் (வேறுவழியில்லை, பல்லியென்றே பயன்படுத்துகிறேன்) உலக சினிமாவுக்கு அறிமுகமாயின. அதற்கு முன்னரே, எக்கச்சக்கமான, கறுப்பு வெள்ளை கைஜு படங்கள் வந்துவிட்டது என்னவோ உண்மைதான்.

Monsters, இயற்கை விதிகளுக்கு முரணான, விவாகர தோற்றமுடைய, தொன்மங்களிலும், ஹாரர் இலக்கியங்களிலும், நாட்டாரியல் மரபுக் கதைகளிலும் எக்கச்சக்கமாக நிறைந்து கிடக்கும் ஜீவராசிகள். (இவை உண்மையா இல்லையா என்பதுவல்ல, இலக்கியத்தில் சினிமாவில் தொன்மங்களில் இவற்றின் பாத்திரம் நிறைந்து காணப்படுகிறது – உண்மைங்க இருக்கு அப்படியில்லாடி இவ்வளவு படம் வந்திருக்குமா?)

இப்போது கைஜுக்கள் பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம். ஜப்பானிய நாட்டாரியல் மரபு, தொன்மங்கள் மற்றும் அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் விலங்குகளிலிருந்து உருமாற்றம் பெற்று திரையுலக அறிமுகத்தின் பின் படிப்படியாக நட்சத்திர அந்தஸ்து பெற்ற விநோத மிருகங்கள் (Strange Beast). சினிமாவில் முக்கிய மன்ஸ்டர்கள் காலத்துக்குக் காலம் பரிணாம வளர்ச்சியடைகின்றன. கறுப்பு வெள்ளை டிராகுலா கறுப்பு பிளேடாக மாறியது போல். ஆரம்பகால கைஜுக்கள் அழிக்கும் சக்திகளாக (போகிற போக்கில் அப்படியே நகரங்கள் எல்லாத்தையும் நிர்மூலமாக்கிவிட்டு கடலுக்குள் சென்று மறைந்துவிடும்) இருந்து பின்னர் நடுநிலை வகிக்கும், அதாவது இவரு நல்லவரா கெட்டவரா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள் அந்த கேப்பில் நகரை நிர்மூலமாக்கிவிட்டு இன்னொரு பெரிய ஆபத்தை (வேறென்ன இன்னொரு கைஜு) நீக்கிவிட்டு சென்றுவிடும். ஜப்பானிய சிறுவர்களுக்கு கைஜு நண்பன். இப்படி ஹிரோவா? வில்லனா? நாயகன் கமல் ரேஞ்சுக்கு சென்று விடும். (துணுக்கு, கைஜு நகரங்களை அழித்தாலும் மற்றைய மன்ஸ்டர்ஸை போல் நரமாமிசம் உண்பதில்லை – அதனால்தான் என்னவோ காட்ஸில்லா படத்தில் மீன்வாசனைக்கு ஆட்களை அலேக்கா தூக்கி சாப்பிடுவது போல் காட்டியிருப்பார்கள்)

இரண்டாம் உலக யுத்த பின்னணி

கைஜு திரைப்படங்கள், அல்லது கைஜுக்கள் யுத்தம், விஞ்ஞானத்தின் நாசகார சக்திகளுக்கு எதிரான கருப்பொருளுடனேயே உருவாக்கப்பட்டவை. கொஜிரா (1954) இல் வந்த இந்த கைஜு திரைப்படத்தில், நியூக்லியர் ரேடிஷேன் மூலம் விவாகரமடைந்த ராட்சத மிருகம் ஜப்பானை நிர்மூலமாக்குகிறது. அணு யுத்தத்தின் பின்விளைவுகளை பற்றி விஞ்ஞான புனைவு படமாக இது இருந்தது. இந்த படத்தில் கொஜிரவை ஒரு நியூக்லியர் சக்தியாகவே காட்டியிருப்பார்கள். இது பற்றி இணையத்தில் நிறைய கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றில்,

  • ஹிரோஷிமா நாகசாகி, கருப்பொருள் மறைந்திருக்கும்.
  • அணு ஆயுதத்தின் அபார சக்தி.
  • அணு குண்டின் பின்னரான நாடு. நிர்மூலம். எடுப்பதற்கு எதுவுமில்லை.

இந்த பின்னணிகள், உலக யுத்த காலத்தில் விஞ்ஞானத்தின் நாசகார பக்கங்கள்தான் விளங்கியது. அது தவிர்க்கவியலாத சோகம். உண்மை. இன்றும், அழிவுசக்திக்காக விஞ்ஞானம் பயன்படும் போது மனிதகுலத்தின் துரதிஷ்டத்தை எண்ணி கவலையடைகிறேன். ஏன்?

இதுவரை வந்த கைஜு படங்களில் முக்கியமான கைஜுக்கள்,

  • கொஜிரா (காட்ஸில்லா) இவரு எக்கச்சக்க படங்கல்ல வந்திருக்காரு, தல. ராட்சத பல்லி.
  • காமேரா – விண்ணிலிருந்து வரும் ராட்சத ஆமை
  • மோத்ரா – பேர்லேயே மோர்த் தெரியுதே, அதையே கொஞ்சம் பெரிசா கற்பனை பண்ணிக் கொள்ளவும்.

எதுக்குப்பா இதெல்லாம்? என்று கேக்குறிங்களா?

Pacific Rim

Guillermo Del Toro வின் இந்த சம்மர் ரிலிஸாக வரவிருக்கும் Pacific Rimஇல் பிரதான பாத்திரங்களே இந்த கைஜுக்கள் தான். இந்த படத்தில் 9 விதமான கைஜுக்கள் இருப்பதாக டெல் டோரோ கூறியிருந்தார். (40 கைஜு டிசைன்களிலிருந்து இன்டர்வியூ வைத்து 9 பேர் செலக்ட் ஆகியிருக்கிறார்கள்) எமது உலகைப் போன்று காபன்களால் இல்லாமல் சிலிக்கன்களால் ஆன ஒரு யுனிவர்ஸிலிருந்து இந்த கைஜுக்கள் வருகின்றன. பசுபிக் பெருங்கடல், இன்னொரு யுனிவர்ஸுக்கான கதவு (Portal) என்று விஞ்ஞான புனைவு அட்வென்சர் மன்ஸ்டர் ரோபோ டெல் டோரோ என்று பிரமான்ட (உண்மையிலேயே பிரமான்ட) திரைப்படமாக வரவிருக்கிறது. (இப்போ எனக்கொரு டைம் மெஷின் இருந்தால் ஜுலை 14ம் திகதிக்கு சென்று பார்த்துவிடுவேன். அந்தளவுக்கு வெறியா இருக்கேன்)

கடைசியாக,

Is there any Kaijus living beneath the Pacific? Do they exist? Don’t Care Man, I just love ’em.

Advertisements

4 comments

  1. ரோலன் எம்மரிக் சில பல மொக்கை படங்களை தந்து இருந்தாலும், அவர் சரியாய் எடுத்த படங்களில் He Got Some Moments Close to Cinematic Perfection.

    அதில் ஒன்றுதான் அந்த காட்ஸில்லா படத்தின் ஒப்பனிங் காட்சி.

    அதே சமயம் அவர் தயாரித்த சில சிறிய பட்ஜெட் படங்கள் நன்றாக இருக்கும் (அவற்றில் ஒன்று காப்பி அடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழிலும் வந்தது).

    இந்த ஆண்டு நான் அதிகமாக எதிர்பார்த்து இருக்கும் இரண்டு சம்மர் படங்களில் என்னுடைய மனம் கவந்த இயக்குனராகிய குலெர்மொ டெல் டாரோவின் இந்த படம் முதல் இடத்தை பிடிக்கும்.

    தொடர்ந்து எழுதுங்கள் ஒமார்.

    வாழ்த்துக்கள்.

    • நன்றி நண்பா! ஆனால் நான் அவரின் லோ பட்ஜெட் படங்கள் பார்த்ததில்லை — நான் எதிர்பார்க்கும் இரண்டாவது படம் Lone Ranger

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s