திகிலூட்டும் நிமிடங்கள் (02) – பேயெழுத்து பற்றி

Vampyr 1932

இருளின் தனிமையில் சூழ்ந்து கொண்ட பயம். அமானுஷ்ய நாவல்களும், பயத்தை அடியாழத்திற்கே சென்று கிளறிவிடும் கதைகளும் இருளின் இளவரசனின் மரண தேவனின் ரகஸ்ய வருகையை எதிர்பார்த்த நாட்கள். அதை மீட்டிப்பார்க்கும் இன்னொரு தருணத்தில் திகிலூட்டும் நிமிடங்களின் இரண்டாம் பாகத்தை எழுதுகிறேன். டிராகுலாவும் எட்கர் அலன் போவும் என் துர்கனவுகளில் நடாமாடித் திரிந்த காலத்தை காலப்பயணம் செய்து அடைய வேண்டும் போல் இருக்கிறது.

காமிக்ஸ் தடைபட்டவுடன் என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த சூன்ய நாட்களை இப்பொழுது நினைத்தால் வோர்ம் ஹோலினுள் தொலைந்து போனது போல் உள்ளது (கிட்டத்தட்ட ஒரு வருடம்). எத்தனை தடவை புத்தகக்கடைகளுக்கு அழைந்திருப்பேன்… அப்பொழுதுதான் மாபெரும் அலை வீசியது, அந்த அலையின் பெயர் Torrent ச்சி இணையம். காமிக்ஸ், ப்ரீ காமிக்ஸ் என்று தேடல் வரலாறு துவங்கியது. அதுக்கு பிறகு என்ன நிறைய காமிக்ஸ், அலன் மூர், ப்ராங் மில்லர், மைக் மிக்நோலியா, டார்க் ஹோர்ஸ், ஆர்டிமிஸ் பௌல்… இன்னும் நீளும் இந்த பட்டியல். பின்னால் வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

கருந்தேள் கண்ணாயிரம், சாரு மூலம் அறிமுகமான வலைத்தளம் (நண்பன் சொல்லும் வரை அவ்வளவாக கவனிக்கவில்லை, பின்னர் நண்பனுக்கே மீளறிமுகப்படுத்திய போது நகைமுரண்). ராஜேஷ் மூலம் ஆர்டிமிஸ் பௌல் பற்றி தெரிந்து கொண்டேன். (சினிமா விமர்சனக் கட்டுரைகள் எல்லாம் மிகவும் விபரமா இருக்கும், டெக்னிகல் விபரங்களை வழங்குவது இன்னும் பிரயோசனமானது..) அதே போல் இன்னொரு ஸ்பெஷல் காமிக்ஸ் பற்றிய வலைப்பூ கனவுகளின் காதலன்… இவர் ரொம்ப டீடெய்லா போய்விடுவார். இவர்கள் இருவருக்கும் மிகவும் நன்றி.

புத்தகங்களுக்கு மீண்டும் வருவோம், விஞ்ஞான புனைவுகள். ஹாரர் பென்டஸியின் சயன்டிபிகல் வெர்ஷன். ப்ரான்கின்ஸ்டைன் நாவலை விஞ்ஞான புனைவு என்றும் சொல்லலாம், அந்த காலத்தில் அப்படியொரு வகையறா இருக்கவில்லை. இந்த நாவலின் தளம் விஞ்ஞான புனைவு கூறுகளை கொண்டிருக்கிறது. (ஏன் இதை சொல்கிறேன் என்றால்… விஞ்ஞான புனைவுகள் வாசிப்பதற்கு ஒரு காரணம் வேண்டாமா?) ஹெச். ஜீ. வெல்ஸ், ஜுல்ஸ் வெர்ன் போன்றவர்களின் கதைகளே எனது ஆரம்ப கால விஞ்ஞான புனைவு வாசிப்புகள். பின்னர் Ray Bradbury, Arthur C. Clarke, Philip K. Dick, Isaac Asimov போன்றவர்களினது கதைகளையும் வாசித்தேன். இந்த இடத்துல இன்னொருத்தருக்கு நன்றி சொல்ல வேண்டும் அது நம்ம கொழந்த, இந்த வலைப்பக்கத்தில் விஞ்ஞான புனைவு பற்றி அருமையான கட்டுரை ஒன்று இருக்கிறது.

புனைவுலகங்கள், நீண்ட பயணங்கள், புதையல், திகில் வீடுகள், லைட் ஹவூஸ், இருண்ட வனங்கள், விஞ்ஞானத்தின் ஹாரர், அமானுஷ்ய புலனாய்வு (இது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஏரியா), புதிர்கள்… என்று அலைந்து கொண்டேயிருக்கும் இவ்வாறான கதைகள், காமிக்ஸ்கள், சினிமாக்கள் எனது விசேட விருப்புக்குரியவை. (உலக சினிமா, இலக்கியம் என்று புதுத்தளங்களில் பயணித்தாலும் கூட)

சினிமா. அது சிறுவயது நோய். தீராத நோய். சினிமா மீதான காதல், இதை வெறி என்றும் சொல்லலாம். முதலில் பார்த்த படம் என்று ஞாபகம் வருவது, Ten Commandments மற்றும் புரூஸ லீ, சார்லி சப்ளின், வரலாற்றுப் படங்கள் (எனது முதல் சினிமா அனுபவம் அனைத்தும் ஆங்கில படங்களாகவே இருந்தது எனது பாக்கியம் – நன்றி சாச்சாமார்களுக்கு போய்ச் சேர வேண்டும்) முதல் தியேட்டர் அனுபவம் எது நினைவில்லை ஆனால் ஸ்பில்பேர்கின் ஜுராஸிக் பார்க் என்றுதான் நினைக்கின்றேன் (அந்த க்ளாஸ் தண்ணீர் ஆடும் காட்சியை நாலு தடவை ஹாலில் பார்த்ததை எப்படி மறப்பது) படம் வெளிவந்து இரண்டு அல்லது மூன்று வருடம் கழித்துதான் இங்கே திரையிட்டார்கள். அதன் பிறகு பெரும்பாலான படங்களை திரையிலேயே கண்டு களித்தேன். (சமீப நாட்களாக இங்கே உள்ள தியேட்டரில் எடிட்டர்கள் வேலை செய்வதால் – டவுன்லோட்)

சினிமாவிலும் இந்த Genre கள் தான் எனது விசேட தேர்வாக இருந்தது. கொஞ்ச காலத்துக்கு முந்தி வெறும் ஹாரர் படங்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது தான் கொஞ்சம் லிமிட்டா பார்க்குறேன். கிழமைக்கு ஒன்றல்லது இரண்டு உலக சினிமா பார்ப்பதே கொஞ்சம் கடினமாக செயல்.. உலக சினிமா பார்ப்பது எமது கடும் உழைப்பை வேண்டி நிற்கின்றது. 2001: A Space Odyssey க்குமுன் பின் என்று சினிமா பார்வையை பிரிக்கலாம். (இதைப்பற்றி விரிவாக எழுத வேண்டியிருப்பதால் பின்னர் வருவோம்) நான் எப்போழுதுமே சினிமாவை யதார்த்த சினிமாதான் சிறந்தது பென்டஸி சினிமாக்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே என்று எண்ணியதில்லை. நீண்ட வாசிப்பின் பின்னர் இதனையும் உறுதிப்படுத்திக் கொண்டேன். ஹாரர் என்று வரும் போது அந்த வகையின் முக்கால சிறந்த திரைபடங்கள் அனைத்தையும் தேடிப்பார்த்து விடுவது என் வழக்கம். (சமீபத்தில் பார்த்தது Vampyr 1932)

இத்துடன் திடிர் நிறுத்தம்.

அமானுஷ்ய, விஞ்ஞான, பென்டஸி, திகில் கதைகளும் காமிக்ஸ்களும் சினிமாவும் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை, அனுபவத்தை இந்த வலைப்பூவில் பதிவு செய்வதே எனது நோக்கம். இதற்கான ஆரம்ப தளத்தை இந்த இரு கட்டுரைகளிலும் சொல்வதே எனது அவாவாக இருந்தது. அதை ஓரளவு விளங்கப்படுத்தி விட்டேன் என்று நினைக்கின்றேன்.

துர்சொப்பனங்கள் தொடரட்டும், நிம்மதியாய் உறங்குங்கள். ஹ ஹ ஹா.

Advertisements

2 comments

  1. அடுத்து வரப்போகும் அற்புதமான பதிவுகளுக்காக

    “ஐயம் வெயிட்டிங்”.

    • “அதுக்காக அவசரப்பட்டு பதிவு ஏற்றப்படாது control yourself” நான் என்னச் சொன்னேன் நண்பா! கொஞ்சம் இம்ப்ரவைஸ் பண்ண வேண்டியிருக்கு… will be posting soon..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s