Mama – Mothers Love, Forever

ஒரே ஒரு ஊரிலே…

A Scene from the film 'Mama'
A Scene from the film ‘Mama’

தேவதைக்கதைகள், நாட்டுப்புறக்கதைகள், பேய்க்கதைகள் எழுதப்படாமலேயே காட்டினுள்ளும், பாழடைந்த கட்டிட சிதிலங்களுக்கிடையிலும், கிழடு தட்டிய பாட்டியினிடமும் ஒழிந்து கொண்டு இருக்கின்றன. ஒரே ஒரு ஊரிலே, முன்னொரு காலத்தில் எனறு துவங்கி மாய உலகில் சஞ்சரிக்கும் இக்கதைகள் பால்யகாலத்தில் எம்முடன் உறவாடிக் கொண்டிருந்தன. உலகம் முழுவதிலும் இவ்வாறான கதைகள் புழக்கத்தில் இருந்தாலும் தொகுக்கப்பட்டு அல்லது மீள்புனைவு செய்யப்பட்டு நாவல், கார்டூன், திரைப்படம் என்று மறுவடிவம் எடுத்துக் கொண்டிருப்பது ஒரு சில நாடுகளில் மாத்திரமே. தமிழ் பேசும் உலகில் இவ்வாறான முயற்சிகள் மிகவும் அரிது. இவற்றில் பல கதைகள் ஒரே தன்மையில் காணப்படுவது ஆச்சரியம். மேற்கில் குழந்தைகளை கட்டுப்படுத்த Boogeyman இருப்பது போல் இங்கே பூச்சான்டி இருக்கிறான்.

Mama படம் நவீன வடிவம் எடுத்திருக்கும் ஒரு fairy tale. பிள்ளையை பரிகொடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட (பைத்தியகார) தாயின் Ghost (தமிழ் ‘பேய்’ ஒரு uneasy பீலிங் கொடுக்கும்), ஆள் அரவமற்ற காட்டின் நடுவே ஒரு வீடு, இரண்டு குழந்தைகள் இப்படி கொஞ்சம் பழக்கப்பட்ட ஹாரர் கிளிஷேக்கள் இருந்தும் வெறுமனே பயங்காட்ட மட்டும் ஒரு படத்தை எடுக்காமல் (அதாவது ஹாலிவூட் தனம் இல்லாமல்) உறுதியான பாத்திரபடைப்பு, உளவியல், ‘Fairy Tale’ வகை கதை சொல்லும் உத்தி இவையே படத்தை சாதாரண ஒரு திகில் படத்திலிருந்து மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கிறது.

கதை தனது(ஜெப்ரி) மனைவியை கொன்று விட்டு விக்டோரியா, லிலி இரண்டு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு செல்லும் வழியில் கார் விபத்துக்குள்ளாகிவிடுகிறது. ஆனாலும் ஜெப்ரியின் சகோதரன் லுகஸ் இவர்களை கண்டுபிடிப்பதையே தனது வாழ்நாளாக கொண்டிருக்கிறான். வருடங்கள் கடந்து விக்டோரியாவும் லிலியும் காடொன்றில் தனித்த பாழடைந்த வீட்டில் வைத்து கண்டுபிடிக்கப்படுகிறார்கள். லுகஸும் அவன் கேர்ள் ப்ரெண்ட் அனபெல்லும் அவர்களை சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப வைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் குழந்தைகள் அந்த காட்டில் தனித்து இருக்கவில்லை, இப்போதும் அந்த துணை அவர்களை விட்டு போய்விடவில்லை…

இந்த பிண்னணியை வைத்துக் கொண்டு மர்மமான தளங்களில் ஒருவித திகில் அனுபத்தை இத்திரைப்படம் கொடுக்கிறது. இந்த படம் Argentine Muschietti  யின் Mama என்ற குறும்படத்தை மையமாக வைத்து அவரே எடுத்த திரைப்படம், இது இவரின் முதல் படமும் கூட.

At Blade II, on location.
At Blade II, on location.

சரி. இந்த குறும்படம் எப்படி சினிமாவாக மாறியது? இங்கேதான் Guillermo del Toro(The Hellboy) வருகிறார். இவர் நிறைய படங்களை தயாரித்திருந்தாலும் அவர் Present செய்யும் படங்கள் நிறையவே எதிர்பார்க்கப்படும், ஆனால் இவர் எல்லா படங்களையும் present செய்வதில்லை. Don’t be Afraid of the Dark, The Orphanage,Julia’s Eyes போன்ற படங்கள் மட்டுமே ‘Guillermo del Toro Presents’ என்ற டெக் லைனோடு வந்தவை. படங்களை பார்த்தாலே புரியும். டெல் டோரோவுக்கு மிகவும் நெருக்கமான தளங்களில் வரும் கன்சப்டகள் மட்டும் இந்த டெக் லைனோடு வரும். எப்படியோ இந்த Mama குறும்படத்தை பார்த்த டெல் டோரோ இதை தாயாரிக்க முன்வந்ததோடு Present உம் செய்தார்.

Mama படத்தை பற்றி இப்படியெல்லாம் சொன்னதுக்காக The Others அல்லது The Orphanage போன்று எதிர்பார்த்து பார்த்து விட வேண்டாம். This is definitely not a suspense film. ஆனால், இது ஒரு traditional ghost story. நல்லதொரு அனுபவத்தை கொடுக்கும், அவ்வளவுதான். இந்த மாதிரி ‘அழகான’ பேய்படங்கள் ஹாலிவூடில் இருந்து வருவது ரொம்ப குறைவு. This is not an American film.

Finally, Hail Guillermo Del Toro the Master of Horror.

Advertisements

4 comments

 1. இந்த படத்தை சமீபத்தில் தான் DVD ல் பார்க்க நேர்ந்தது.இல்லையெனில் பொறுமையாக ப்ளூரே வரும்வரை காத்திருந்திருப்பேன்.

  அதன் பின்னணி சுவையானது.

  எனக்கு தெரிந்த ஒரு அறிமுக இயக்குனர் தன்னுடைய முதல் படத்திற்காக சில பின்னணி விவரங்களுக்காக இந்த படத்தை பற்றி சொல்லி கருத்தை கேட்டார். அதனாலேயே இந்த படத்தை பார்க்க நேர்ந்தது.

  • உண்மையில் அருமையான பின்னணி, ஆனால் திகில் அனுபவத்தை நாடிச்சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

 2. indha padathai theater la partha aal naan dhaan.
  indha padam theater la partha neenga indha padathuku mela adimai agi irupeenga.
  climax ellam theater la semma feel. 15 to 20 age pasanga neraiya peru irundhaanga. padam mudinju velila pogum bodhu romba serious discuss panikite ponanga. parkave avalavu super irundhichu..
  pai padam paarthu kanla thanni vechu kita padam idhu…
  adhilum andha ponunga room la nadakura scene and adhai edutha vidham

  idhu polave innum smart movie parkanum na.
  Hide and Seek parunga….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s